LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்தியாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் - டொனால்டு ட்ரம்ப்

 

இந்​தி​யாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளியிட்​டார்.

இதனால் உலகம் முழு​வதும் பொருளா​தார மந்​தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்படப் பல்​வேறு நாடு​களின் பங்​குச் சந்​தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்​டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்தக் கால அவகாசம் தற்​போது ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்டு உள்​ளது.இந்த சூழலில் 14 நாடு​களுக்​கான புதிய வரி விகிதங்​களை அமெரிக்க அரசு நேற்று வெளி​யிட்​டது. இதன்​படி ஜப்​பானுக்கு 25%, தென்​கொரி​யா​வுக்கு 25%, தாய்​லாந்​துக்கு 36%, மலேசி​யா​வுக்கு 25%, இந்​தோ​னேசி​யா​வுக்கு 32%, தென்​ஆப்​பிரிக்கா​வுக்கு 30%, கம்​போடி​யா​வுக்கு 36%, வங்​கதேசத்​துக்கு 35%, கஜகஸ்​தானுக்கு 25%, துனிசி​யா​வுக்கு 25%, செர்​பி​யா​வுக்கு 35%, லாவோஸுக்கு 40%, மியான்​மருக்கு 40%, போஸ்​னி​யா​வுக்கு 30% வரி விதிக்​கப்​பட்டு உள்​ளது

.இந்த பட்​டியலில் இந்​தியா இடம்​பெற​வில்​லை. அமெரிக்க அரசு கடந்த ஏப்​ரலில் வெளி​யிட்ட அறி​விப்​பின்​போது இந்​தியா மீது 26 சதவீத வரி விதிக்​கப்​பட்​டது. இந்த வரி விதிப்பு ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நிறுத்தி வைக்​கப்​பட்​டிருக்​கிறது.

இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வாஷிங்​டனில் கூறும்​போது, “பிரிட்​டன், சீனா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. அடுத்​த​தாக இந்​தி​யா​வுடன் வர்த்தக ஒப்​பந்​தத்தை ஏற்​படுத்த இறு​திக் கட்​டத்தை நெருங்கி உள்​ளோம். விரை​வில் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும்” என்று தெரி​வித்​தார்.

இதுகுறித்து இந்தியாவின் வெளியுறவு மற்றும் வர்த்தகத்துறை வட்டாரங்கள் கூறும்போது, "இந்​தி​யா, அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்​பந்​தத்தை இறுதி செய்​வது தொடர்​பாக வாஷிங்​டனில் இரு நாடு​களின் மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​றனர்.

ஆகஸ்ட் 1-ம் தேதிக்​குள் இரு நாடு​களிடையே வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இரு நாடு​கள் இடையே சுமுக​மான முறை​யில் வர்த்தக ஒப்​பந்​தம் ஏற்​பட்​டால் இந்​தி​யா​வில் இருந்து ஜவுளி, மருந்​து, நகைகள் அமெரிக்கா​வுக்கு அதிக அளவில் ஏற்​றும​தி​யாக வாய்ப்​பிருக்​கிறது. இதே​போல அமெரிக்​கா​வில் இருந்து கார்​கள் உள்​ளிட்ட வாகனங்​கள் இந்​தி​யா​வுக்கு அதிக அளவில் ஏற்​றுமதி செய்​யப்பட வாய்ப்​பிருக்​கிறது" என்று​ தெரிவித்துள்​ளன.




 

 

by hemavathi   on 08 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.