|
||||||||
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு |
||||||||
பலருக்கு அமைச்சரின் இந்த அறிவிப்பில் 45 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு மட்டுமே சென்றடைந்துள்ளது.
பன்னாட்டு புத்தகக் கண்காட்சியில் வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் முன்வந்துள்ள 28 மொழிகளையும் , நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள இதுவரை ஒருமொழியில் கூட திருக்குறள் மொழிபெயர்க்கப்படாத 45 நாடுகளின் 45 மொழிகளையும் சேர்த்தால் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு 28+45 =73 புதிய வெளிநாட்டு மொழிகளில் அறிவிக்கப்பட்டுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பாகும்.
இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பது எளிது. அது ஊர் பரவலாக்கத்திற்கு பெருமளவு பயன்படும். உலகப் பரவலாக்கத்திற்கு இதுவரை மொழிபெயர்க்கப்படாத 126 உலக அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் 73 மொழிகளை தமிழ்நாடு அரசு அறிவித்ததன் மூலம் மீதம் உள்ளது 53 வெளிநாட்டு மொழிபெயர்புகள்தான். அதுவும் விரைவில் 2030க்குள் நடந்தேறும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
முதன்முறையாக
-உலக அளவில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட
-பைபிள் குரானைவிட அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட
- 300க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைக் கண்ட
-179 மொழிபெயர்ப்புகளைக்கொண்ட
-100க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்புகளைக்கொண்ட
என்று தோராயமாக இல்லாமல்
28 இந்திய மொழிகளிலும் 35 உலக மொழிகளிலும் என்று அமைச்சர் அறிவித்திருப்பது, திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த ஆய்வுத் தகவல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது என்ற மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக ஐந்து ஆண்டுகாலமாக "உலக மொழிகளில் திருக்குறள்:ஆய்வுத் திட்டம்" குழுவின் அயராத உழைப்பிற்கும், அதை கொண்டுசென்று சமூகத்திற்கும், அரசுக்கும் , ஆய்வாளர்களுக்கும், அறிவுத்தளத்திலும் சேர்க்க முன்னெடுக்கப்படும் குழுவின் முயற்சிகளுக்கும், ஆய்வு நூலான Thirukural Translations in World Languages நூலின் மொழிபெயர்ப்பு பரவலாக்கல் விழிப்புணர்வு முன்னெடுப்புகளுக்கும் கிடைத்த வெற்றி..
இனி திருக்குறளில் புள்ளிவிவரங்களுடன் என்ன வந்துள்ளது, எது மொழிபெயர்க்கவேண்டும் என்று பேசுவதன் மூலம் எதில் கவனம் செலுத்தவேண்டும் , எது கிடைக்கிறது, எது கிடைக்கவில்லை, எங்கு கிடைக்கிறது என்று தெளிவு ஏற்படும்.
மீதம் உள்ள 53 மொழிபெயர்ப்புகளுக்கான தேவை ஒரு மொழிபெயர்ப்புக்கு மூன்று இலட்சம் வீதம் வெறும் 1.59 கோடிதான். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 53 மொழிபெயர்ப்புகள் முடிந்துவிட்டால் திருக்குறள் உலகின் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட மொழிகளிலும் வெளிவந்த பெருமையையும், 2030க்குள் 300+ மொழிகளில் வெளிவந்த பெருமையையும் பெரும்.
இதனால்
தேசிய நூல், யுனெசுகோ அங்கீகாரம் திருக்குறளுக்கு தவிர்க்கமுடியாததாக எளிதாக நடந்தேறும்.
இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பேற்றுள்ள திருக்குறள் பற்றாளரும், பரப்புரையாளருமான திரு.பாலகிருஷ்ணன் IAS அவர்கள் முயற்சி செய்து அறிவித்தால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் செயல்பாட்டில் ஆய்வு சார்ந்த முக்கிய விளைவாக இது வரலாற்றில் பதிவாகும். இது எமது பணிவான கோரிக்கை. விரைவில் எழுத்திலும் நேரில் சந்தித்து வழங்குவோம்.
|
||||||||
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
|
|
||||||||
| by Swathi on 28 Nov 2025 0 Comments | ||||||||
| கருத்துகள் | |
|
| உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|