|
|||||
திருச்சி-சென்னை புதிய விமானச் சேவை அறிமுகம் |
|||||
திருச்சி மாவட்டத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஏராளமான மக்கள் பயன்படுத்தும் விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து தினந்தோறும் சென்னை உள்படப் பல்வேறு உள்நாடுகளுக்கும், சார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் விமானச் சேவை தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டைப் பொறுத்தவரை சென்னை, பெங்களூரு, மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதுவரை இந்த உள்நாட்டுச் சேவைகளை மொத்தமாக இண்டிகோ நிறுவனம் மட்டுமே வழங்கி வந்தது. இதன் காரணமாக விடுமுறை நாட்களில் அதிகக் கட்டணங்களைச் செலுத்திப் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. .
இந்த நிலையில், மார்ச் 23-ந் தேதி முதல் திருச்சியிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து திருச்சிக்கும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் புதிய விமானச் சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த விமானம் மாலை 6:45 மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு, 7:45 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தரும்.
பின்னர், 8:15 மணிக்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு சென்னை விமான நிலையத்தைச் சென்றடையும். தற்போது வரை இண்டிகோ நிறுவனம் திருச்சி-சென்னை வழியில் 5 சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது கூடுதலாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆறாவது சேவையைத் தொடங்கவிருக்கிறது.
இதன் மூலம் கூட்ட நெரிசல் குறையும் என்றும், விடுமுறை போன்ற பண்டிகை நாட்களில் கட்டணமும் குறையும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
|
|||||
by hemavathi on 06 Feb 2025 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|