LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போதுள்ள 5.5 கோடி பேரின் விசாக்கள் மறு ஆய்வு - ட்ரம்ப் நிர்வாகம்

 

அமெரிக்காவில் தற்போது தங்கியிருக்கும் 5.5 கோடி பேரின் விசாக்களை மறு ஆய்வு செய்யப்போவதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இருக்கும் கோடிக்கணக்கானோர், அமெரிக்காவில் பணி விசா உள்ளிட்ட பல்வேறு விசாக்களைப் பெற்று தங்கியிருக்கிறார்கள்.
அதன்படி, 5.5 கோடி விசாக்களை மறுபரிசீலனை செய்து, அவற்றில் ஏதேனும் அத்துமீறல் விவகாரங்கள் இருப்பின், விசாவை ரத்து செய்வது மற்றும் அவர்களை வெளிநாட்டுக்குக் கடத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

குடியுரிமைத் துறை எடுத்து வரும் அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்வதற்காக இந்த மறுபரிசீலனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதன்படி, சுற்றுலா, மாணவர்கள், தொழில்முறை பயணம் உள்ளிட்ட விசாக்களை வைத்திருப்பவர்கள்,

தொடர்ச்சியான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, அவர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் இருக்கிறதா? விசா காலத்தைத் தாண்டி வாழ்ந்துகொண்டிருக்கிறார்களா? குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்களா? மக்களின் பாதுகாப்பு இடையூறு ஏற்படுத்துகிறார்களா என்பது மற்றும் அவர்களுக்குப் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கிறதா என்பது உள்ளிட்ட விவகாரங்களையும் பரிசீலிக்க அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இந்த மறுஆய்வு நடவடிக்கையானது, விசா பெற்றிருப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆராய்வது, சட்ட அமலாக்கத் துறை, விசா பெற்றிருப்பவரின் சொந்த நாட்டில் பதிவாகியிருக்கும் குடியுரிமைப் பதிவுகள், அமெரிக்கச் சட்டத்தை மீறும் வகையில் நடந்து கொள்கிறாரா என்பது உள்ளிட்ட விவரங்களும் ஆய்வுக்கு உள்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா நேர்காணல்களின்போது, எலாக்ட்ரானிக் சாதனங்கள் முடக்கப்படுவது உள்ளிட்ட புதிய விதிமுறைகள் இந்த ஆணடு தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அது மட்டுமல்லாமல், உள்நாட்டு வருவாய் சேவைத் துறையிடமிருந்து குடியுரிமை பெற்றவர்களின் வரி தரவுகளையும் பெற்று ஏதேனும் விதிமீறல் நடக்கிறதா என்பதை ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை, அமெரிக்காவில் விசா பெற்றுத் தங்கியிருப்பவர்கள் யாரேனும் ஏதோ ஒரு விதிமீறல்களில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால், அவர்கள் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்துள்ளது.

இதன்படி, இந்தியாவைச் சேர்ந்த 50 லட்சம் பேர், அமெரிக்காவின் குடியுரிமை அல்லாத விசாக்களை வைத்திருக்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சுற்றுலா, வணிகம், கல்வி மற்றும் பி1/பி2 பார்வையாளர் விசா, எஃப்1 மாணவர்கள் விசா, எச்-ஃபி வேலை விசாக்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

இந்த மறுபரிசீலனை நடவடிக்கையானது, முதற்கட்டமாக, கல்வி விசா பெற்று வந்திருக்கும் மாணவர்கள், பாலஸ்தீனத்துக்கு ஆதரவான அல்லது இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளில் கல்லூரிகளில் ஈடுபட்டிருந்தால், அவர்களுக்கு எதிராகக் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் தொடக்கமாக இருந்துள்ளது. இது கடந்த ஜனவரி முதல் நடந்து வருகிறது. டிரம்ப் அதிபராகப் பதவியேற்றது முதல், அமெரிக்க உள்துறை அமைச்சகம் சுமார் 6000 மாணவர்கள் விசாக்களை ரத்து செய்திருக்கிறது.

இதில், விசா காலத்தைத் தாண்டித் தங்கியிருப்பது, யாரையாவது தாக்குவது, போதையில் வாகனம் இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மற்றும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தெரிவித்தது உள்ளிட்ட காரணங்களுக்காகவும் மாணவர் விசாக்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

புளோரிடாவில் நடந்த சாலை விபத்து காரணமாக, வணிக சுமையுந்து ஓட்டுநர்களுக்கான பணி விசாக்கள் அனைத்தையும் நிறுத்தி வைக்கிறோம், இது உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு உள்துறைச் செயலர் அறிவித்துள்ளார்.

புளோரிடாவில், இந்தியச் சீக்கிய ஓட்டுநர் இயக்கிய டிரக், மிக மோசமான வளைவு ஒன்றில் கவனக்குறைவுடன் திரும்பியதால், சிறு வேனில் வந்த அமெரிக்கர்கள் மூன்று பேர் மரணமடைந்தனர். இதில் கைது செய்யப்பட்டவர் ஹர்ஜிந்தர் சிங் என்பதும், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், ஆங்கிலத்தில் அவரிடம் கேட்கப்பட்ட 12 கேள்விகளுக்கு அவர் வெறும் 2 கேள்விகளுக்கு மட்டுமே சரியான பதிலளித்ததும், அமெரிக்கச் சாலைப் போக்குவரத்து சமிக்கைகளில் 4ல் ஒன்றைத்தான் அவர் சரியாகச் சொன்னதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கச் சாலைகளில் மிகப்பெரிய கனரக வாகனங்களை இயக்கும் வெளிநாட்டு ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதனால் ஏற்படும் பாதிப்புகளில் அமெரிக்கர்கள் பலியாவதோடு, இவர்களது வேலைவாய்ப்புகளால், அமெரிக்க ஓட்டுநர்களின் வேலை பறிபோகிறது என்றும் அமெரிக்க உள்துறை அமைச்சக செயலர் தெரிவித்துள்ளார்.

 

 

by hemavathi   on 23 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா அமெரிக்க நாட்டுக்கான தபால் சேவைகளைத் தற்காலிகமாக நிறுத்தியது இந்தியா
82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம் 82 ஆண்டுகளுக்குப் பின் நூலகத்தை வந்தடைந்த புத்தகம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.