|
||||||||
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் |
||||||||
![]() உலக நாடுகளின் மீது பரஸ்பர வரி விதிப்பை அறிமுகம் செய்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். இது தொடர்பாக எந்த நாட்டுக்கு அமெரிக்கா எவ்வளவு வரி விதிக்கிறது என்பதை அவர் விவரித்தார். இதில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 26 சதவீதம் பரஸ்பர வரி விதிப்பதாக அவர் அறிவித்துள்ளார். “இந்தத் தருணத்துக்காக நாம் நெடுநாள் காத்திருந்தோம். ஏப்ரல் 2, 2025 அமெரிக்கத் தொழில்துறை மறுபிறவி எடுத்த நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வச் செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்கம் இது. அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது” என அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். பிற நாடுகள் அமெரிக்கப் பொருட்கள் மீது விதிக்கும் வரியைக் குறைக்கும் நோக்கில் இந்தப் பரஸ்பர வரி விதிப்பு முறையை ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது. அந்த மாற்றம் நடக்கும் வரையில் இது அமலில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பரஸ்பர வரி விதிப்பு விரைவில் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதிகபட்சமாக கம்போடியா (49%), வியட்நாம் (46%), இலங்கை (44%), சீனா (34%), இந்தியா (26%), ஜப்பான் (24%), ஐரோப்பிய ஒன்றியம் (20%) ஆகிய நாடுகள் மீது வரிவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தானுந்து இறக்குமதிக்குச் சுமார் 20% பொதுவான இறக்குமதி வரியை விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
|
||||||||
by hemavathi on 03 Apr 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|