|
|||||
வெள்ளத்தில் பழுதான வாகனங்களை பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவிப்பு |
|||||
தமிழ்நாட்டில் பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அவ்வாறு பலரால் பார்த்து பார்த்து பராமரிக்கப்பட்ட கனவு வாகனங்கள் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன.
'*****************************
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் வெளியே சென்று வருவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது.************************
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள்
**********************
இது போன்ற மழைக்காலங்களில், அவசரத் தேவைகளுக்காக ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது.
***********************
வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல சந்தேகங்கள் உள்ளன.
*******************************
மேலும், வெள்ளத்தால் வீடு இழந்து, உடமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கி பழுதான இரு சக்கர வாகனங்களை சீரமைப்பது என்பது இயலாதது.
****************
பொது மக்கள் மகிழ்ச்சி
*********************
இந்நிலையில், வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதோடு பல்வேறு தரப்பிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பலருக்கும் வாகனம் என்பது குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போல. அவ்வாறு பலரால் பார்த்து பார்த்து பராமரிக்கப்பட்ட கனவு வாகனங்கள் சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பலத்த சேதமடைந்துள்ளன. பல வாகனங்கள் நீருக்குள் முழுமையாக மூழ்கிய நிலையில் இன்னும் மீட்கப்படாமல் உள்ளன. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாகப் பெய்த தொடர் மழை நீர் வடியாமல் உள்ளதால் மக்கள் வெளியே சென்று வருவதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுவதை நம்மால் பார்க்க முடிகிறது. வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்கள் இது போன்ற மழைக்காலங்களில், அவசரத் தேவைகளுக்காக ஒரு அடி வரைக்கும் தேங்கியிருக்கும் தண்ணீருக்குள் கூட சில நேரங்களில் வாகனம் ஓட்டவேண்டிய சூழல் ஏற்படுகிறது. வெள்ளத்தில் மூழ்கிய வாகனங்களை மீட்டு, பழுது பார்ப்பது மற்றும் அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா என எப்படி கண்டறிவது என்பது குறித்து மக்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் பல சந்தேகங்கள் உள்ளன. மேலும், வெள்ளத்தால் வீடு இழந்து, உடமைகளை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளனர். இந்த சூழ்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கி பழுதான இரு சக்கர வாகனங்களை சீரமைப்பது என்பது இயலாதது. பொது மக்கள் மகிழ்ச்சி இந்நிலையில், வெள்ளத்தில் பழுதான வாகனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை கூலி எதுவும் வாங்காமல் பழுது பார்த்து தரப்படும் என டி.வி.எஸ். நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளதோடு பல்வேறு தரப்பிடம் இருந்து பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.
|
|||||
by Kumar on 10 Dec 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|