LOGO
  முதல் பக்கம்    ஆன்மீகம்    கோயில்கள்-சாமிகள் Print Friendly and PDF
- கோயில்கள்

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய திருக்கோயில்கள்

 

நட்சத்திரங்கள் 27 என்பது நான் அனைவரும் தெரிந்ததே. இந்நிலையில் ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒரு கோயில் உண்டு.  அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய கோயிலை வழிபட்டால் எண்ணற்ற நல்வாழ்வைப் பெறலாம். இதன் அடிப்படையில் 27 நட்சத்திரத்திற்கு உரிய கோயில்களைப் பற்றி இங்குத் தெரிந்து கொள்ளலாம்.
 
அஸ்வினி : பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருத்துறைப்பூண்டியிலிருந்து மேலும் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
 
பரணி :  அக்னீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மயிலாடுதுறை அருகில் உள்ள நல்லாடை என்ற ஊரில் உள்ளது.
 
கார்த்திகை : காத்திர சுந்தரேஸ்வரர் திருக் கோவில். மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
 
ரோகிணி : பாண்டவ தூதப் பெருமாள் திருக்கோவில். காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் எதிரில் உள்ள சாலையில் அமைந்துள்ளது.
 
மிருகசீரிஷம் : ஆதிநாராயணப் பெருமாள் திருக்கோயில்.  தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்தில் முகூந்தனூர் என்ற ஊரில் உள்ளது. 
 
திருவாதிரை : அபய வரதீஸ்வரர் திருக்கோயில். இது அதிராம்பட்டினத்தில் உள்ளது. 
 
புனர்பூசம் : அதிதீஸ்வரர் திருக்கோவில். இது பழைய வாணியம்பாடியில் அமைந்துள்ளது. 
 
பூசம் :அட்சய புரீஸ்வரர் திருக் கோவில். பட்டுக்கோட்டையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் விளங்குளம் என்ற ஊரில் உள்ளது, 
 
ஆயில்யம் : கடற்கடேஸ்வரர் ஆலயம். கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவில் செல்லும் சாலையில் உள்ளது 
 
மகம் :  மகா லிங்கேஸ்வரர் திருக்கோவில். திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் விராலிப்பட்டி விளக்கு என்ற ஊரில் உள்ளது. 
 
பூரம் : ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோவில்.  திருவரங்குளம் என்ற ஊரில் உள்ளது. 
 
உத்தரம் : மாங்கல்யேஸ்வரர் திருக்கோவில். இடையாற்று மங்கலம் என்ற ஊரில் உள்ளது. 
 
அஸ்தம் :  கிருபா கூபாரேச்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கோமல் என்ற ஊரில் உள்ளது. 
 
சித்திரை :  சித்திர ரத வல்லப பெருமாள் திருக் கோவில். மதுரையிலிருந்து 23 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள குருவித்துறையில் உள்ளது. 
 
சுவாதி : தாத்திரீஸ்வரர் திருக்கோயில். சித்துக்காடு என்ற ஊரில் உள்ளது.
 
விசாகம் : முத்துக்குமாரசாமி திருக்கோயில்.  மதுரையிலிருந்து 155 கிலோமீட்டர் தொலைவில் உள்ள  திருமலைக் கோவிலில் உள்ளது.
 
அனுஷம் : மகாலட்சுமிபுரீஸ் வரர் திருக்கோவில். இந்த ஆலயம் திருநின்றியூர் என்ற ஊரில் உள்ளது.
 
கேட்டை :  வரதராஜ பெருமாள் திருக்கோயில்.  தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் பசுபதி கோயிலில் உள்ளது. 
 
மூலம் : சிங்கீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் மப்பேடு என்ற ஊரில் உள்ளது. 
 
பூராடம் : ஆகாசபுரீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் கடுவெளி என்ற இடத்தில் இருக்கிறது. 
 
உத்திராடம் : பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்.  இந்த ஆலயம் பூங்குடி என்ற திருத்தலத்தில் உள்ளது. 
 
திருவோணம் :  பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோவில்.  திருப்பாற்கடல் என்ற இடத்தில் இந்த கோயில் இருக்கிறது.
 
அவிட்டம் :  பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில். கொருக்கை என்ற இடத்தில் உள்ளது. 
 
சதயம் :  அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில். இது திருப்புகலூர் என்ற இடத்தில் உள்ளது.
 
பூரட்டாதி :  திருவானேஷ்வர் திருக்கோயில். ரங்கநாதபுரம் என்ற ஊர். திருவையாற்றில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ளது. 
 
உத்திரட்டாதி :  சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோவில். இந்த ஆலயம் தீயத்தூர் என்ற இடத்தில் இருக்கிறது. 
 
ரேவதி : கைலாயநாதர் திருக்கோயில்.  முசிறி அருகே தாத்தய்யங்கார் பேட்டை என்ற ஊரில் உள்ளது. 
 

 

 

by hemavathi   on 09 Jul 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-6 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-5 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-4 - கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 3 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி - 2 -கை.அறிவழகன்
ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன் ஐயனாரைத் தேடி-1 - கை.அறிவழகன்
திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு திருப்பதி தரிசனத்துக்கு இடைத்தரகர்களை அணுக வேண்டாம்- தேவஸ்தானம் அறிவிப்பு
முத்தாரம்மன் MUTHARAMMAN முத்தாரம்மன் MUTHARAMMAN
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.