LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com

மற்ற அமைப்புகள்

Design :

ட்விட்டர் பல்வேறு BackGround படங்களை வழங்குகிறது, Tile என்பது பின்புல படம் திரும்ப திரும்ப வரும். http://www.colourlovers.com/themeleon/twitter Theme Leon மூலமும் மேலும் சில படங்களை ட்விட்டரே வழங்குகிறது. அல்லது Upload Image – ஏதேனும் ஒரு படத்தை உங்கள் கணினியில் இருந்து எடுத்து பின்புல படமாக வைத்துக் கொள்ளலாம். Background – கீச்சுகளின் பின்புல நிறம், எழுத்துகள் கருப்பு நிறத்தில் இருக்கும், Links – சுட்டிகளின் நிறம். நிறங்களின் Hex மதிப்பு வழங்கப்பட்டுள்ளது. Save Changes என்பதை சொடுக்குங்கள். பக்கத்தை Refresh செய்யும் போது உங்களின் பின்புல படம் மாற்றப்பட்டிருக்கும்.

Password :

உங்களின் கடவுச்சொல்லை மாற்றுவதற்கான பகுதி இது. கடவுச்சொல் எப்போதும் எட்டு எழுத்துக்கு குறையாமல் எண்கள், எழுத்துகள், குறியீடுகள் உடன் அமையுங்கள். கடவுச்சொல்லை மாற்றுவதற்கு முதலில் பழைய கடவுச்சொல்லை கொடுத்து, இரண்டாம் கட்டத்தில் புதியதை கொடுத்து, மூன்றாவதில் புதிய கடவுச்சொல்லை மீண்டும் கொடுத்து உறுதி செய்க. இப்போது Save Changes தனை அழுத்துக.

Notifications :

ட்விட்டர் இணைய தளத்தில் இருந்து நீங்கள் பெரும் மின்னஞ்சல்கள் பகுதி இது. Messages – 1. எவரேனும் உங்களுக்கு தனிச் செய்திகள் அனுப்பினால், அல்லது 2. பதில்கள் அனுப்பினால் அவை உங்கள் மின்னஞ்சலுக்கும் வரும்படி செய்து கொள்ளலாம். Activity – 1. புதிதாக யாராவது உங்களை பின்பற்றினால், 2.உங்களது கீச்சை யாரேனும் விருப்பத் தேர்வில் சேர்த்தால், 3.உங்களது கீச்சை யாரேனும் மீள்கீச்சு செய்தால், உங்களுக்கு மின்னஞ்சலில் தெரிவிக்கும்படி செய்து கொள்ளலாம். Updates – ட்விட்டரின் புதிய வசதிகள் மின்னஞ்சலில் பெறலாம்.

Apps :
ட்விட்டர் அதன் API இடைமுகப்பை வெளியிட்டதும் ட்விட்டரை பயன்படுத்துவதற்கான இணைய தளங்கள், மென்செயலிகள் உருவாகின. Twitter.com தளத்தில் மட்டுமே ட்விட்டரை பயன்படுத்த முடியும் என்று இல்லை. இன்று லட்சக்கணக்கில் ட்விட்டர் செயலிகள் உள்ளன. போலியான இணைய தளங்கள் பயனரின் விவரங்களைத் திருட ஆரம்பித்ததும் ட்விட்டர் அதற்கு மாற்று வழியாக Oauthentication தனிக் கொண்டு வந்தது. அதாவது, ஒரு உலவியில் நீங்கள் ட்விட்டர் தளத்தில் Signin ஆகி உள்ளீர்கள் என்றால், அதே உலவியில் ஒரு ட்விட்டர் செயலியை, இணைய தளத்தை பயன்படுத்த மறுபடி மறுபடி ட்விட்டர் விவரங்களைக் கொடுக்க தேவை இல்லை. செயலிகளில் SignIn With Twitter என உள்நுழைந்தால் உலவியில் எந்த ட்விட்டர் கணக்கு திறந்துள்ளதோ அதை பயன்படுத்த எடுத்துக் கொள்ளும். ஒரு வேலை நீங்கள் ட்விட்டர் கணக்கை திறந்து இருக்காவிடின், செயலி உங்களை த்விட்டரின் signIn பக்கத்திற்கு திருப்பி விடும். இதன் மூலம் ட்விட்டர் தளத்தில் மட்டுமே உங்கள் பயனர்பெயர்,கடவுள் சொல்லைக் கொடுக்கிறீர்கள் என்பது உறுதியாகிறது. உலவியின் Address Bar ல் twitter.com என இருந்தால் மட்டுமே ட்விட்டர் பயனர்பெயர்,கடவுச்சொல் விவரங்களைக் கொடுக்க வேண்டும். அதன் பின் நாம் செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். செயலிகளால் நம் கணக்கை பயன்படுத்திக் கொள்ள முடியுமே அன்றி கணக்கு விவரங்களைக் காண இயலாது.

இது போல் நீங்கள் பயன்படுத்திய செயலிகளின் விவரம் Applications பகுதியில் இருக்கும். அந்த இணைய தளங்கள் இனி பயன்படுத்த விருப்பம் இல்லையெனில் Revoke Access என்பதை அழுத்தி அதற்கான அனுமதியை நீக்கி விடலாம். பக்கத்தை மறுபடி Reload செய்க.

by Swathi   on 09 Mar 2015  0 Comments
Tags: ட்விட்டர் யூசர் கைடு   Twitter User Guide   Twitter User Guide Tamil   பாஸ்வேர்ட்   ட்விட்டர் பாஸ்வேர்ட்        
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - பிப்ரவரி 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.