LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் மொழிபெயர்ப்பு நூல்கள் (Thirukkural Translation Books)

இவ்வாரம் (மார்ச்,01,2025) திருக்குறளின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சார்ந்த செயல்பாடுகள் தொடங்கியுள்ளது

இவ்வாரம் (மார்ச்,01,2025) திருக்குறளின் இரண்டு மொழிபெயர்ப்புகள் சார்ந்த செயல்பாடுகள் தொடங்கியுள்ளது.

1. மாலத்தீவில் பேசப்படும் தேவகி (Dhivehi ) மொழியில் மொழிபெயர்க்க அங்குள்ள தமிழ்ச்ச்சங்க ஆளுமை திரு.செந்தில்குமார் அவர்கள் உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல் குழுவின் பேராசிரியர்.முனைவர்.ஜாஹிர் ஹுசைன் அவர்களுடன் இணைந்து குழு உருவாக்கி ஆங்கில-அரபி மொழி நூல்களை அந்நாட்டு மொழிக்குழுவின் பார்வைக்கு அனுப்பி ஒப்புதல் பெற முதல்கட்டமாக உரையாடல் தொடங்கியுள்ளது. முனைவர்.ஜாஹிர் ஹுசைன் அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், திருக்குறளை அரபியில் மொழிபெயர்த்தவர், வளைகுடா நாடுகளில் திருக்குறளில் மதப்பார்வையற்ற அனைவரும் பயன்படுத்தும் வாழ்வியல் கருத்துகள் உள்ளது என்பதை நிறுவியர்.

2. எத்தியோப்பியா நாட்டில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர்.சுப்பிரமணி அவர்கள் படுகா மொழியில் மொழிபெயர்க்க ஆர்வம் கொண்டு தொடர்புகொண்டார். ஏற்கனவே செம்மொழி ஆய்வு நிறுவனம் இம்மொழிபெயர்ப்பை செய்துள்ள நிலையில் , மற்றொரு மொழிபெயர்ப்பாக படுகா மொழியில் மொழிபெயர்க்க உலகத் திருக்குறள் மொழிபெயர்ப்பு வழிகாட்டுதல் குழு உரிய வழிகாட்டுதலை, ஒத்துழைப்பை நல்குகிறது.

இன்னும் 126 உலக அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய நிலையில் உள்ள திருக்குறளை உங்கள் நாட்டு மொழியில் உரிய பல்கலைக்கழக மொழிபெயர்ப்புத்துறை , மொழிபெயர்ப்பாளர்களைக்கொண்டு மொழிபெயர்க்க முன்வாருங்கள் என்று உலகத் தமிழர்களை கோருகிறோம்.

உலகின் வேறு எந்த மொழியிலாவது திருக்குறள் மொழிபெயர்ப்பு நடைபெற்றால் எங்களுக்கு தெரிவிக்கவும். பட்டியலில் சேர்த்து பகிர்வோம்..


இந்திய அலுவல் மொழிகளில் சிந்தி மொழியில் மட்டும் இன்னும் மொழிபெயர்ப்பு செய்யவேண்டியுள்ளது. சரியான சிந்தி மொழி ஆர்வலர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் தொடர்பு உடையவர்கள் எங்களுக்கு தொடர்பு ஏற்படுத்த உதவலாம்.

உலக மொழிகளில் திருக்குறள் :மொழிபெயர்ப்புத் திட்டக்குழு சார்பாக
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி
"Thirukkural 2030"
thirukkural2030@gmail.com
நூலைப்பெற : estore.valaitamil.com

by Swathi   on 01 Mar 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறளங்காடி  - கனடா தொடங்கியது.. குறளங்காடி - கனடா தொடங்கியது..
1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு 1962ல் வெளிவந்த ஆங்கில நூலில் யுனெசுகோ திருக்குறள் மொழிபெயர்ப்பு குறிப்பு
5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு 5 திருக்குறள் மொழிபெயர்ப்பு குறித்த அறிவிப்பு
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
புதுச்சேரியில்  திருக்குறள் முற்றோதல் கோரிக்கை புதுச்சேரியில் திருக்குறள் முற்றோதல் கோரிக்கை
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஐந்தாம் ஆண்டு விழாவில் கரூரில் 25-5-25 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
Launch of Thirukkural- Treasure of Universal Wisdom. Launch of Thirukkural- Treasure of Universal Wisdom.
திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை திருக்குறள் பயிற்சியளிக்க தன்னார்வலர்கள் தேவை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.