LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் அறிஞர்கள்

உ வே சாமிநாத ஐயர்

தமிழ் மொழிக்கு அரும்பெரும் தொண்டாற்றியவரும், தமிழ் தாத்தா என்று போற்றிக் கொண்டாடப்படும் தமிழறி ஞருமான உ. வே. சாமிநாத ஐயர். பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 19)
தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்டு தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடி காத்தவர்...

இவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து :

 கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்றூரில் பிறந்தவர் (1855). தந்தை ஒரு இசைக் கலைஞர். அதே ஊரில் தொடக்கக் கல்வி யும், இசையும் கற்றார்.

 இவருக்கு தமிழில் இருந்த பேரார்வத்தைக் கண்டு, எங் கெல்லாம் தமிழ்ப் பாடம் கற்றுத் தருபவர்கள் இருந்தார் களோ அங்கெல்லாம் சென்று குடியேறி மகனுக்கு கல்வி கற்பிக்கச் செய்தார், தந்தை! புகழ்பெற்ற மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் 17-ஆவது வயதில் 5 ஆண்டு காலம் தமிழ் கற்று தமிழறிஞர் ஆனார்.

 1880 முதல் 1903 வரை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1903 முதல் 16 ஆண்டுகள் சென்னை மாநிலக் கல்லூரியிலும் பணி புரிந்தார்.

 பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டாயிற்று. பல இடர்களை எதிர்கொள்ள நேர்ந்தாலும் விடாப்பிடியாக முயன்று 1887-ல் சிந்தாமணியை வெளியிட்டார்.

 அன்று முதல் இறுதி மூச்சு வரையில், ஆங்காங்கே மறைந்து கிடந்த தமிழ்த் தாயின் ஒவ்வொரு அணி கலனாகத் தேடித் தேடிக் கண்டுபிடித்து, புதுப்பித்து தமிழன்னையை அலங்கரித்தார். இவரது காலத்துக்கு முன்பு பெரும் புலவர்களின் படைப்புகள், சங்க நூல்கள், அகநானூறு, புறநானூறு, மணிமேகலை ஆகியவை வெறும் பெயரளவிலேயே இருந்தன.

 அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார். இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன் மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சிட்டுள்ளார். 3000க்கும் அதிகமான ஏட்டுச் சுவடிகளையும் கையெழுத்து பிரதிகளையும் அரும்பாடுபட்டு சேகரித்தார்.

 சமண இலக்கியங்களோடு சங்க இலக்கியங்கள், காப்பி யங்கள், புராணங்கள், சிற்றிலக்கியங்கள் அடங்கிய ஏராளமான ஓலைச் சுவடிகளையும் தேடித் தேடி , அவற்றை பகுத்து, வேறுபடுத்தி, தொகுத்து, பிழைதிருத்தி அச்சிலேற்றினார். இதன் மூலம் இவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

 பின்னாளில் அவற்றுக்கு உரையும் எழுதினார். சங்க காலத் தமிழும் பிற்காலத் தமிழும், பழையதும் புதியதும், நல்லுரைக் கோவை உள்ளிட்ட பல உரைநடை நூல்களை யும் எழுதி வெளியிட்டுள்ளார். கருத்தாழமும், நகைச்சுவை யும் கலந்து இழையோடப் பேசும் திறன் கொண்டவர்.

 தமிழ் இலக்கியத்துக்கு இவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி சென்னைப் பல்கலைக்கழகம் இவருக்கு முனை வர் பட்டம் வழங்கியது. இதைத் தவிர மகாமகோபாத்தியாய, தக்ஷிண கலாநிதி ஆகிய பட்டங்களும் பெற்றார்.

 இவரைச் சிறப்பித்து இந்திய அரசு தபால் தலை வெளியிட்டது. சென்னை பெசன்ட் நகரில் இவரது பெயரில் நூல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தாத்தா என்று போற்றப்படும் இவர், 1940-ஆம் ஆண்டு 84-ஆம் வயதில் மறைந்தார்.

by Swathi   on 19 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்ல தமிழில் எழுதுவோம் நல்ல தமிழில் எழுதுவோம்
பன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு.. பன்னாட்டுத் தமிழ் தொழிலதிபர்களைத் தமிழ் உணர்வுடன் இணைத்துத் தொழிலை விரிவாக்க, நல்ல நட்பை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த மூன்று நாள் எழுமின் மாநாடு..
மலையாளக் கணிமைக்கு ஒரு மைல் கல்   				-நீச்சல்காரன் மலையாளக் கணிமைக்கு ஒரு மைல் கல் -நீச்சல்காரன்
நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர் நல்ல தமிழில் எழுதுவோம் பதட்டம் அடையலாமா ? -ஆரூர் பாஸ்கர்
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வுப் பணிகள்
காதல் என்பது  -முனைவர். சித்ரா மகேஷ் காதல் என்பது -முனைவர். சித்ரா மகேஷ்
மணிப்பிரவாள நடை மணிப்பிரவாள நடை
தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா.. தமிழுக்கு வாழ்வளித்த தகைமையாளர்! - உ.வே.சா..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.