|
||||||||||||||||||
உடல்நிலை |
||||||||||||||||||
மணப்பாறை மின் வாரிய அலுவலகம். காலை ஒன்பது மணிக்கு தனது இருச்சக்கர வாகனத்தை வாகன நிழற்குடையில் நிறுத்திவிட்டு அலுவலகத்திற்குள் எதிர்ப்பட்டவர்களின் காலை வணக்கத்தை ஏற்றுக்கொண்டு நுழைந்தான், உதவி பொறியாளன் சிவவிசும்பன்.
பின்பு தன் அறைக்குச் சென்று, நேற்றைய மின்ப் பகிர்வுகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான் தனது கணிணியின் திரையில். அதில் ஒரு தகவல் விடுப்பட்டுப் போயிருக்க, தனது மேஜை மேலிருந்த தொலைபேசியில் தன் உதவியாளனை தொடர்புக் கொண்டு விடுப்பட்ட தகவலை எடுத்து வரும்படி கூறினான். பிறகு வேறு சில மென் கோப்புக்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவனுக்கு நெஞ்சு எரிச்சலாகி தான் காலையில் சாப்பிட்ட இட்லி, வேர்கடலை சட்னியின் புளி ஏப்பத்தை மிகவும் சிரமப்பட்டு எடுத்து முடிக்கும் போது, பயங்கர தலைவலி ஏற்பட்டது. அதற்கு காரணம், நேற்றைய அதி இரவுப்பொழுதில் தனது மகனின் பிறந்தநாளைக் கொண்டாடிய இவனது நண்பன் வீட்டிலிருந்து வந்த இனிப்பு வகைகளை, இரவு உணவிற்குப் பிறகு மிச்சம் மீதி இல்லாமல் சீராகத் தின்றிருக்கிறான் இந்த தீனிப்பண்டாரம், அதன் விளைவே இது. பின்பு ஒன்றும் முடியாமல், தான் உட்கார்ந்திருந்த வளையும் நாற்காலியில் படுத்த வாக்கில் சாய்ந்து உட்கார்ந்தான். மேலும், மேலும் அவஸ்த்தை அதிகரித்துபோக, ஒரு முடிவுக்கு வந்தவனாய் அறையை விட்டு வேளியே வந்தான்.
விடுப்பட்ட தகவலை எடுத்துக் கொண்டு எதிர்ப்பட்ட தனது உதவியாளனிடம், தனக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவலை இணைப் பொறியாளனிடம் தெரிவிக்குமாறு கூறி, தனது இருச்சக்கர வாகனத்தில் வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான்.
போகும் வழியில் அத்திப் பூத்தாற்போல் காவல்த் துறையின் ஒரு தலைமைக் காவலர் தனது லத்தியை நீட்டி இவனை நிறுத்தச் செய்தார். பின்பு அவர் அவனிடம், ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் காப்பீடு மற்றும் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றை காண்பிக்குமாறு கூறினார். இவனோ, தனக்கு உடல்நிலை சரியில்லை அவசரமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், தன்னை விட்டுவிடும்படி கூறினான். அதற்கு அந்த காவலர் இவன் தன்னை ஏமாற்றப் பார்க்கிறான் என்று எண்ணி, வாகனத்தின் ஆவணங்களை காண்பித்தே ஆக வேண்டும் என்றுக் கூறி இரட்டைக் காலில் நின்றார். இவனும் வேறு பாதை இல்லாமல், தனது வாகனத்தின் கருவிப் பெட்டியிலிருந்து அவர் கேட்ட அத்தனை ஆவணங்களையும் எடுத்துக் கொடுத்தான். அவர் அதை பெற்றுக் கொண்டு நிதானமாக அலசியாராயலானார்.
இவனுக்கோ தலை வலி அதிகரித்துக் கொண்டே சென்றது, தனது கையால் தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்த இவனுக்கு இன்னும் சற்று நேரத்தில் ஏதோ ஒன்று வெடித்து சிதறப் போவதாகத் தோன்றியது. இதையும் அந்த காவலர் பாசாங்கென்றே எண்ணினார்.
சட்டென்று ஒரு தருணத்தில், தான் காலையில் சாப்பிட்ட இட்லி, வேர்கடலை சட்னியை சரியான விகிதத்தில் கலந்து அந்த காவலரின் மீது வாந்தியாக எடுத்துவிட்டான். காக்கிச் சட்டை, வாந்திச் சட்டையாக மாறியதைப் பார்த்த காவலர் செய்வதறியாது திகைத்து நின்றார், பாவமாக.
அப்பொழுது சிவவிசும்பன் நினைத்துக் கொண்டான் குசும்பனாக, “தங்களுக்கெல்லாம் வாயால் கூறி விளக்குவதோ கடிது, வாயால் எடுத்துக் கூறி விளக்குவதே எளிது” என்று. |
||||||||||||||||||
UDALNILAI - AKI | ||||||||||||||||||
by ASHOK.K on 24 Jun 2020 1 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|