LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- கல்லாடம்

உடன்பட உரைத்தல்

வேலிஅம் குறுஞ்சூல் விளைகாய்ப் பஞ்சினம்
பெருவெள் ளிடையில் சிறுகால் பட்டென
நிறைநாண் வேலி நீங்கித் தமியே
ஓர்உழி நில்லாது அலமரல் கொள்ளும்என்
அருந்துணை நெஞ்சிற்கு உறும்பயன் கேண்மதி     (5)

 

மண்ணுளர் வணங்கும் தன்னுடைத் தகைமையும்
இருளரு புலனும்மெய்ப் பொருள்அறி கல்வியும்
அமரர்பெற் றுண்ணும் அமுதுருக் கொண்டு
குறுஞ்சொல் குதட்டிய மழலைமென் கிளவியில்
விதலைஉள் விளைக்கும் தளர்நடைச் சிறுவனும்     (10)

 

நின்நலம் புகழ்ந்துணும் நீதியும் தோற்றமும்
துவருறத் தீர்ந்தநம் கவர்மனத்து ஊரன்
பொம்மல்அம் கதிர்முலை புணர்வுறும் கொல்எனச்
சென்றுசென்று இரங்கலை அன்றியும் தவிர்மோ
நெட்டுகிர்க் கருங்கால் தோல்முலைப் பெரும்பேய்     (15)

 

அமர்பெற்று ஒன்னலர் அறிவுறப் படர,
பேழ்வாய் இடாகினி கால்தொழுது ஏத்திக்
கையடை கொடுத்த வெள்நிண வாய்க்குழவி
ஈமப் பெருவிளக்கு எடுப்ப மற்றதன்
சுடுபொடிக் காப்புடல் துளங்கச் சுரிகுரல்     (20)

 

ஆந்தையும் கூகையும் அணிஓல் உறுத்த
ஓரிபாட்டு எடுப்ப உவணமும் கொடியும்
செஞ்செவிச் சேவல் கவர்வாய்க் கழுகும்
இட்டசெய் பந்தர் இடைஇடை கால்என
பட்டுலர் கள்ளிஅம் பால்துயில் கொள்ளும்     (25)

 

சுள்ளிஅம் கானிடை சுரர்தொழுது ஏத்த
மரகதத் துழாயும் அந்நிறக் கிளியும்
தோகையும் சூலமும் தோளில் முன்கையில்
மருங்கில் கரத்தில் வாடாது இருத்தி
போர்வலி அவுணர் புகப்பொருது உடற்றிய     (30)

 

முக்கண் பிறைஎயிற்று எண்தோட் செல்வி
கண்டுளம் களிப்ப கனைகழல் தாமரை
வானக வாவி யூடுற மலர
ஒருதாள் எழுபுவி உருவத் திண்தோள்
பத்துத் திசையுள் எட்டவை உடைப்ப     (35)

 

ஒருநடம் குலவிய திருவடி உரவோன்
கூடல்அம் பதியகம் போற்றி
நீடநின் றெண்ணார் உளமென நீயே.    (38)

by Swathi   on 19 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.