LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

உழவர் தினம் ...

தெருமுனைகள் எங்கும்

வரைந்து வைத்த

பொங்கல் பானைகள் ....


பேருந்துகளையும்

கடை முகப்புகளையும்

அலங்கரிக்கிற

கரும்புச் சல்லைகள் ...


எல்லோரும்

மகிழ்வாய் பொங்கல்

கொண்டடியதாய்

சேதி சொல்லுகிற

ஊடகங்கள் ....


எல்லா விசயங்களிலும்

போலித்தனம்

மிகுந்திருப்பதாகவே

அடிக்கடி ஒரு

உணர்வு வருகிறது

எனக்கு ..


உழைப்பவன் பெயர்

சொல்லி

அவன் ஏழ்மையை

கை-கொட்டி ரசிப்பதாகவே

எனக்கு படும்

ஒவ்வொரு வருடமும் ...


வாருங்கள்

என்னோடு ......


உழைப்பவனின்

உண்மையான

உலகு காட்டுகிறேன் ...


விடியக் கருக்கலில்

கண் விழித்து

பொழுது சாயும்வரை

ஓடுகிறவனின் வீட்டில்

இன்னும் வறுமை

ஓடியபாடில்லை ...


ஊருக்கெல்லாம்

உணவு கொடுப்பவனுக்கு

நிரந்தர ஊதியமில்லை ...


அன்றைக்கும் இன்றைக்கும்

மழையும் மண்ணும் தவிற

உற்ற துணை வேறாருமில்லை ....


எல்லா விலையும்

எரித்தான் போயிருக்கிறது ....


எங்களைப் பொருத்தவாரை

நெல்லுக்கு

கடந்த நாலு வருடங்களாய்

ஒரே விலைதான்

சலகை எழுநூறு ரூபாய் ....


களை எடுக்கிற

பொம்பளையாளுக்கு

ஒரு நாளைக்கு

முப்பது ரூபாய் .....


முட்டுவழிச் செலவு

மட்டும்

ஒரு குலிக்கு

ஆயிரம் ரூபாய் ....


இளனியின் விலை

தோட்டத்தில் இருந்து

கை மாறும் போது

வெறும் மூனு ரூபாய் ...


தக்காளியின்

விலை கூடை

பதினைந்து ரூபாய் ...


உழுபவன்

கணக்குப் பார்த்தால் ...


வயலை விற்று

வங்கியில் வைப்புநிதியாக்கி

வட்டிப்பணத்தில்

வயிறு வளர்க்க

ஆரம்பித்தால் ...


எல்லோரும்

போராட்டம்

போராட்டம்

என்கிறார்களே ...


அவர்களைப் போல

நாலு கோரிக்கை வைத்து

கலப்பையை கைவிட்டு

விவசாயம் ஒத்துழையாமை

இயக்கத்தில் இறங்கிவிட்டால் ....


என் கற்பனைகளோடு

வேதனை கலந்த

சிரிப்பு வரும் எனக்கு...


ஒரு சில சமயம்

நான் யோசிப்பதுண்டு ...


வியாபாரம்

எப்போதுமே

உழைப்பவனின்

உயிர் உருஞ்சுகிறதே ....


எப்போதுமே

அவனை அடிமையாக்கி

அழகு பார்க்கிறதே ....


அவனை

தேர்க்கலாக்கி எப்போதுமே

உயர்ந்து போகிராற்களே

இடையில் இருப்பவர்கள் ...


இந்த நிலை

மாறாதா ....


நாடு முழுவதும்

செருப்பின் விலை

ஒன்றாய் நிர்ணயிக்கப் படுகிறதே ...


அந்த நிலை

விவசாயத்திற்கு

வந்துவிடாதா ...


கூட்டிக் கழித்து

லாபாச் சதவிகிதம் வைத்து

உழைப்பவனே

விலை நிர்ணயம் செய்கிற

நிலை இங்கே வந்துவிடாதா ....


உழைப்பவனின்

நிலை உயர்ந்துவிடாதா....


யோசிப்போம் ......

-      குகன்

by uma   on 07 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஹைக்கூ கவிதை ஹைக்கூ கவிதை
அறம்  காப்போம் - வேளாண்மை காப்போம் அறம் காப்போம் - வேளாண்மை காப்போம்
தீண்டல் தீண்டல்
வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி வேண்டும் - வேண்டேன் -து.கிருஷ்ணமூர்த்தி
வளர்சிதை மாற்றம் வளர்சிதை மாற்றம்
விவசாயி புலம்பல் விவசாயி புலம்பல்
வச்ச குறி தப்பாது வச்ச குறி தப்பாது
இயற்கை இயற்கை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.