LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- குகன்

உழவுக்கும் தொழிலுக்கும் ....

அன்று

பொங்கல் திருநாள் ...


வழக்கம் போல்

வாழ்த்துச் செய்திகள் ....


“ உழவுக்கும்

தொழிலுக்கும்

வந்தனை செய்வோம் “


அர்த்தம் புரியாது

பரிமாரிக் கொள்ளும்

மரபுவழி வாழ்த்துக்கள் ...


இந்த ஆண்டு

தப்பாது ....


“ பொங்கலோ

பொங்கலென்று “

மஞ்சள் பானையோடு

ஒரு குடும்பத்தின்

புகைப்படம் ...


“ பெருந்தலை யோன்றின்

வாரிசென்று

மாட்டிற்க்கு

போங்கலூட்டிய காட்சி “ .


அரைப்பக்க விளக்கத்தோடு

வண்ணப் புகைப்படம் ...


இவையெல்லாம்

நாம் நாளிதழின்

முதல் பக்கச் செய்திகள் ....


பாதி டீ குடித்த

கையோடு

டீக்கடை பேப்பரின்

கடைசி பக்கம் புரட்டினேன் ....


சினிமா விளம்பரம்

பார்க்கும் ஆசையில் ...


கையில் தட்டோடும் ..

ஒட்டிய வயிற்றோடும் ...

குழிவிழுந்த கண்களோடும் ...

உழவுக்கு முதுகு கொடுக்கும்

நமது ஊர் விவசாயிகள் ....


“ பருவமழை

பொய்த்துப் போனதால்

பட்டினிச் சாவைத் தடுக்க

குடும்பத்தில்

ஒரு வருக்கு மாத்திரம்

ஒரு நேர உணவு “


அரசு ஆணையோடு

புகைப்படம் ....


இது

வெறும் கற்பனையல்ல ...


இது

மிகைப்படுத்தப்பட்ட

பொய்யுமல்ல ...


இது

நடந்தேறிய உண்மை .......


ஆம் ...


அன்று

பொங்கல் திருநாள் ....


அன்று

தமிழர் பெருநாள் ..


அன்று

உழவர் பெருநாள் ....


கையில் தட்டோடும் ...

ஒட்டிய வயிற்றோடும் ....

குழிவிழுந்து கண்களோடும் .....

.................................................................

.................................................................

-      குகன்

by Guhan   on 06 Dec 2011  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.