|
||||||||
ஒருங்கு குறி சேர்த்தியம்: தமிழ் இலக்கண மீறல்கள் - தஞ்சை கோ.கண்ணன் |
||||||||
ஒருங்கு குறி சேர்த்தியம்: தமிழ் இலக்கண மீறல்கள் - தஞ்சை கோ.கண்ணன் தமிழ் ஒருங்கு குறியில் இலக்கணங்களும் மரபும் கேள்விகேட்பாரற்று மீறப்பட்டுள்ளன. ஒருங்கு குறி சேர்த்தியத்தில் சமற்கிருத இலக்கணத்தைத் தமிழ் எழுத்துக்களுக்குக் கொடுத்து மொழிச் சிதைவு வேலை நடந்துள்ளது. தமிழ் ஒருங்கு குறியில் தேவநாகரி எழுத்துக்குக் காலியிடம் கொடுத்து எழுத்துக் கலப்பிற்கு வித்திடப்பட்டுள்ளது. கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகள் என்று தவறாகக் குறிப்பிட்டுக் குறியீட்டு எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. நடுவணரசின் பொதுஎழுத்துக் கொள்கை இந்திய மொழிகள் அனைத்திற்கும் பொது எழுத்தாக தேவநாகரி வரிவடிவம் இருத்தல் வேண்டும் என்பதே! “நோய்நாடி நோய்முதல் நாடி ......” எனும் வள்ளுவத்திற்கிணங்க தமிழ் ஒருங்குகுறிக்கு ஏற்பட்டுள்ள இடரை இப்பின்புலத்தில் அணுகுவோம். (இக்கட்டுரையில் ஒருங்குகுறி சேர்த்தியம் கொடுத்துள்ள அதே குறியீட்டு எண்கள், தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.)
அடிப்படைத் தவறு - 1 : “அபுகிடா” வரிவடிவில் தமிழ் எழுத்துகள் சேர்ப்பு தனித்தன்மை பொருந்திய தமிழ் எழுத்துகளைத், தேவநாகரி எழுத்துகளுடன் சேர்த்து “அபுகிடா” வரிவடிவில் சேர்த்தது தவறு. அனைத்து இந்திய மொழிகட்கும் ஒரே எழுத்துவகைக் கொள்கை என்ற அடிப்படையில் ஒருங்குகுறியில் தமிழ் எழுத்துகள் “அபுகிடா” வரிவடிவைச் சேர்ந்தது என்று தொடக்க நிலையிலேயே இந்திய அரசால் பதிவு செய்யப்பட்டுவிட்டது.
அடிப்படைத் தவறு - 2 : தமிழ் ஒருங்கு குறியில் தேவநாகரிக்குக் காலி இடங்கள் உள்நோக்கத்துடன், தன் கொள்கை வரைவிற்கு இணங்க நடுவணரசு தேவநாகரி வரிவடிவத்தைப் எதிர்காலத்தில் தமிழ் மொழியின் வரிவடிவமாகக் கமுக்கமாகப் புகுத்த தமிழ்ப்பாத்தியில் காலியிடமாக வைக்கப்பட்டுள்ளது. தமிழுக்கு ஒருங்கு குறியில் அதிக இடம் கேட்டு கிடைக்காத நிலையில் காலியிடம் வைக்கப்பட்டுள்ளது . OBE4 : -0964 I தேவநாகரி தண்டா , OBE5: -0964 II தேவநாகரி தண்டா :
படம் -1 பார்க்கவும் அடிப்படைத் தவறு - 3 : தமிழ் ஒருங்கு குறியில் கிரந்த வரி வடிவம் தமிழ் வரி வடிவமாக மாற்றம்: உள்நோக்குடன் உண்மையை மறைத்து கிரந்த வரி வடிவை தமிழ் எழுத்துகள் என ஒருங்குகுறி சேர்த்தியத்தால் பல ஆண்டுகட்கு முன்னராகவேப் புகுத்தப்பட்டுள்ளது. கிரந்த வரிவடிவை வேண்டுமென்றே தமிழ் வரிவடிவமாக நடுவணரசு பதிவு செய்தது சரியா ? எப்போது கிரந்த வரி வடிவம் தமிழ் வரி வடிவமாக மாற்றம் பெற்றது? கிரந்த எழுத்துகளைத் தமிழெழுத்து என்று கூறும் பதிவு:
படம் -2 பார்க்கவும் அடிப்படைத் தவறு - 4 : கிரந்த ஒருங்கு குறியில் உண்மை நிலை : கிரந்த வரிவடிவை வேண்டுமென்றே தமிழ் வரிவடிவமாகப் பதிவு செய்த அதே நடுவணரசு கிரந்த ஒருங்கு குறியில் மேற்கண்ட ஐந்தெழுத்துகளை கிரந்த வரிவடிவமாகப் பதிவு செய்தது ஏன் ? இரு வேறு இடங்களில் ஒரே வரிவடிவை தமிழ் எழுத்தாகவும் கிரந்த எழுத்தாகவும் பதிவுசெய்தது மாபெரும் தவறு. ஒரே கிரந்த எழுத்துகளுக்கு இருவேறு இடங்களில் தனித் தனியாகக் குறியீட்டு எண்கள் வேண்டுமென்றே ஒருங்கு குறி சேர்த்திய விதிகளுக்கு மாறாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
கிரந்த எழுத்தாகப் பதிவு செய்யப்பட்டவையே மீண்டும் தமிழாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன என்பதற்கான சான்று : . படம் -3 பார்க்கவும்
நடுவணரசின் இரட்டை நிலைப்பாடு, உள்நாட்டில் என்றால் கூட புரியும். பொது நிலையில் உலக அளவில் ஒருங்குகுறிச் சேர்த்தியத்திடம் போய்க், கிரந்த வரிவடிவை ஒருபக்கம் தமிழ் வரிவடிவம் என்று வேண்டுமென்றே சொல்லியும், பின்னர் உண்மை நிலையை , அதே எழுத்துகள் கிரந்த வரிவடிவம் என்று கிரந்த ஒருங்குகுறி முன்மொழிதலில் சொல்வது இரட்டை வேடம் அல்லவா ?
அடிப்படைத் தவறு- 5 : பாணினியின் தமிழ் இலக்கணம் : ஆயுத எழுத்து = விசர்கா அதே போல தொல்காப்பியம் கண்ட தமிழ் வரிவடிவமான , “ ஃ ” - என்ற ஆய்த எழுத்து “விசர்கா” - எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
படம் -4 பார்க்கவும் ”தமிழ்க் குறியீடு அனுசுவரா” என்று தமிழ் மொழியில் பயன் பாட்டில் இல்லா வரிவடிவம் என்றே குறிப்பிட்டு (தொல்காப்பியம் காணாவரிவடிவம் / புகுத்தப்பட்ட பாணினியின் இலக்கணம்) அதற்கும் தமிழ் ஒருங்கு குறிப் பாத்தியில் ஒதுக்கப்பட்டுள்ளது. தொல்காப்பியமும் , நன்னூலும் மீறப்பட்டுள்ளன.
அடிப்படைத் தவறு - 6 : தமிழ் மெய்யொற்று = வீராம தமிழ் ஒருங்கு குறியில் தமிழ் இலக்கணம் மாற்றப்பட்டு தமிழ் மெய்யொற்று “வீராம” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழின் மெய்யொற்றுக்கு இப்படி ஒரு பெயரா ? தொல்காப்பியத்தில் ......நன்னூலில் .....? படம் -5 பார்க்கவும்
தமிழ் கூறும் நல்லுகமே விழிமின்! நடுவணரசின் பொதுஎழுத்துக் கொள்கையான தேவநாகரி வரிவடிவம் கமுக்கப் புகுத்தலின் விளைவே ஒருங்கு குறியில் தமிழ் இலக்கணச் சிதைவு. எனவே ஒருங்கு குறி சேர்த்தியத்தை அணுகி இந்த ஆறு அடிப்படைத் தவறுகளைத் தமிழ் ஒருங்கு குறியில் இருந்து உடனே நீக்கியாக வேண்டும். |
||||||||
unicode-1 | ||||||||
by Swathi on 04 Nov 2013 0 Comments | ||||||||
Tags: Unicode Thanjai ko Kannan Sanskrit இலக்கண மீறல்கள் சோர்த்தியம் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|