LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தாய்த்தமிழ் பள்ளிகள் Print Friendly and PDF

தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.

தனித்துவமிக்க தலைமையாசிரியர் –- திரு. செல்வக்கண்ணன், அரசு ஊராட்சி ஒன்றியப்பள்ளி, க.பரமத்தி, கருவு+ர்.

          சிறந்த தலைவர்களையும் அறிஞர்களையும் உருவாக்கி நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுபவர்கள் ஆசிரியர்கள் ஆவர். இத்தகைய ஆசிரியர்களையும் மாணவர்களையும் கொண்ட கல்விநிறுவனத்தைத் திறம்பட வழிநடத்திச் செல்ல வேண்டியவர்கள் தலைமையாசிரியர்களே என்றால் அது மிகையாகாது. இவர்களின் பொறுப்பும் கடமையும் அளப்பரியது. அவ்வாறு தங்களின் பொறுப்புகளை உணர்ந்து சிறப்புறச் செயலாற்றும் தலைமையாசிரியர்கள் மிகச்சிலராவர். அவர்களில் முன்னோடியாகத் தற்காலத்தில் விளங்குபவர் திரு.செல்வக்கண்ணன் எனும் தலைமையாசிரியர். இவர் தற்போது கருவு+ர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி எனும் ஊராட்சியில் உள்ள அரசுப்பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகின்றார். தன்னுடைய சீர்மிகு பணிகளின் மூலம் இப்பள்ளியை உலகறியச் செய்துள்ளார். இப்பள்ளி சர்வதேச தரச்சான்று பெற்றுள்ளது. அது மட்டுமில்லாமல் இந்தியாவில் எந்த அரசுப்பள்ளிக்கும் கிட்டாத 5எஸ் தரச்சான்றும் பெற்றுள்ளது என்ற சிறப்பிற்குரியது.  திரு.செல்வக்கண்ணன் அவர்களுடனான நேர்காணல் நிகழ்வினைக் காணலாம்.

 1. தனியார் பள்ளிகள் வியக்கும் வண்ணம் சிறந்த கட்டமைப்புடன் தங்கள் பள்ளி விளங்குகின்றது பாராட்டிற்குரியது. தங்களின் பள்ளிக்கட்டமைப்பு மேம்பாட்டு முயற்சிகள் பற்றிக் கூறுங்கள்

          வணக்கம். நான் மூன்று முக்கிய விஷயங்களை நோக்கிய பயணமாகவே இதனைக் கருதுகின்றேன். அவையாவன,

          1. சுற்றுச்சூழல். ஒரு சிறந்த பள்ளி சிறந்த சூழலினைப் பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியச்சூழல் நிலவ வேண்டும்.

          2. கட்டமைப்பு. தனியார் பள்ளிகளினைப் போன்ற வசதிகளுடன் கூடிய கட்டமைப்பு அரசுப்பள்ளியில் இருக்க வேண்டும்.

          3. தரமான கல்வி. மேற்கூறிய இரண்டினைவிட மிக முக்கியமாகச் சிறந்த கல்வித்தரம் பள்ளியில் இருக்க வேண்டும்.

 இம்மூன்றும் ஒரு அரசுப்பள்ளியில் இருக்கும்போதே அப்பள்ளி சிறந்த பள்ளியாக மாறும் என்பதில் ஐயமில்லை. 2005 ஆம் ஆண்டு நான் இப்பள்ளியில் பணிக்குச் சேர்ந்தது முதல் தற்போதுவரை இதனையே முக்கியமாகக் கருதுகின்றேன். கட்டமைப்பு சிறந்து விளங்க வேண்டும் என்று எண்ணியபோது தேவையான பொருளாதார உதவிகள் நன்கொடையின் வாயிலாகக் கிடைத்தன. அவ்வாறு 85 இலட்ச ரூபாய் வரை கிடைத்துள்ளன. இதனால் சிறந்த கட்டமைப்பு சாத்தியமாயிற்று.

2. தங்களின் இத்தகைய அரியப்பணிக்கு தாங்கள் கையாண்ட யுக்திகள் யாவை?

         பலரும் எண்ணுவது போன்ற பெரிய யுக்திகள் என்று எதுவும் இல்லை. தலைமை சரியாக இருக்கும் போது அமைப்பும் சரியாக இருக்கும் என்பது என் கருத்து. பள்ளியின் தலைமையாசிரியர் சிறப்பாக மட்டுமின்றி சரியாக நடந்துகொள்வாராயின் ஆசிரியர்களும் மாணவர்களும் சிறப்பாக நடந்துகொள்வர். ஒருங்கிணைந்த கூட்டு முயற்சியே இவ்வெற்றிக்குக் காரணமாகவும் யுக்தியாகவும் அமைந்துள்ளது.

 3. பெற்றோர் மற்றும் பொதுமக்கள்  தங்களின் பள்ளி வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியுள்ளனர்?

          பெற்றோர்கள் இன்றி பள்ளிகள் இல்லை. இன்று எங்கள் பள்ளி மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் கொண்ட இரண்டாம் பள்ளியாகத் திகழ்கின்றது. இதற்கு பெற்றோர்களின் பங்களிப்பும் நம்பிக்கையும் பெரிதளவில் அமைந்துள்ளது. பிள்ளைகளின் வளர்ச்சி அவர்களின் பெற்றோர்களின் கையிலேயே அமைந்திருப்பது மறுக்க முடியாது. எங்கள் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக்கூட்டம் மாதம் ஒருமுறை மாத இறுதி வெள்ளிக்கிழமையில் பிற்பகலில் நடைபெறும். தற்போது எங்களுக்கு வேலை வைக்காமல் எந்த அறிவிப்பும் நாங்கள் கொடுக்க அவசியமின்றி தாமாக வந்துவிடுகின்றனர். இதைத்தவிரப் பள்ளி மேலாண்மைக்குழு அமைத்துள்ளோம். இக்குழுவிலும் பெற்றோர் பெரிதளவில் உதவுகின்றனர். இவ்வாறு ஒரு கல்வி நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றுபவர்களாகப் பெற்றோர்கள் அமைந்துள்ளனர்.

 4. சர்வதேச தரச்சான்றினையும் 5எஸ் சான்றினையும் தங்கள் பள்ளி பெற்ற சாதனையை உடையதாக விளங்குகின்றது. இச்சாதனையைப் பிற பள்ளிகளும் பெற தங்களின் ஆலோசனைகள் யாவை?

          பொதுவாக மக்கள் மனதில் அரசுப்பள்ளியைக் குறித்த தவறான எண்ணங்களை அகற்றும் வண்ணம் நமது செயல்பாடுகள் அமைந்திருக்க வேண்டும். அரசுப்பள்ளியில் தூய்மையற்ற சூழல், கல்வித்தரமற்ற நிலை, ஒழுங்கில்லாத கட்டமைப்பு போன்றவையே நிலவும் என்ற எண்ணத்தினை மக்கள் மனதில் நீக்கினாலே அரசுப்பள்ளி மேலோங்கி நிற்கும் என்பது ஆணித்தரமான உண்மை. ஒரு தனியார் பள்ளிக்கு எந்த விதத்திலும் அரசுப்பள்ளி குறைவானதில்லை என்ற நிலைமை நம் பள்ளியில் உண்டாக வேண்டும் என்று எண்ணி பணிபுரிந்தேன். இதற்கு சர்வதேச தரச்சான்று பெரிதளவில் தூண்டுகோலாக அமைந்தது. பெரும்பாலான அரசுப்பள்ளிகள் சர்வதேச தரச்சான்றுகளைப் பெற்றுள்ளன. ஆனால் ஜப்பான் வழிமுறைகளைப் பின்பற்றித் தரப்படும் 5எஸ் தரச்சான்று இந்தியாவில் எந்த அரசுப்பள்ளியும் பெறவில்லை. எனவே இதனை நம்பள்ளி அமையவேண்டும் என்று எண்ணி செயல்பாடுகள் செய்யப்பட்டன. அம்முயற்சியில் எங்கள் பள்ளி 5எஸ் தரச்சான்று பெற்ற முதல் அரசுப்பள்ளி என்று வெற்றிவாகை சூடியுள்ளது. இத்தகைய சான்றிதழ்களின் மூலம் பள்ளியை உலகத்தரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன். இதனை பிற பள்ளிகளும் மனதில் கொண்டு செயலாற்ற வேண்டும்.

   5. தங்களின் இத்தகைய வெற்றிப்பயணத்தில் கிடைத்த மிகச்சிறந்த அனுபவமாக தாங்கள் கருதுவது என்ன?

          மூன்று சிறந்த ஆசான்களை எனது முன்னோடியாக எண்ணியபின்பே ஆசிரியப்பணியில் சேர்ந்தேன். பள்ளிக்கு மாணவர்கள் எவ்வளவு தூரம் இருந்தாலும் பள்ளிப்பேருந்தின் மூலம் வரச்செய்யுதல், வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ப உழைத்தல் மற்றும் அங்கீகாரம் பெறச்செய்யுதல் போன்ற மூன்றிலும் வெற்றியடைவது என் நோக்கமாக இருந்தது. இம்முயற்சியில் மூன்றிலும் வெற்றிபெற்றுள்ளது மகிழ்வைத் தருகின்றது. எந்த நிகழ்விலும் கலந்துகொண்டாலும் உரிய முன்னுரிமை கிடைப்பது ஆத்ம திருப்தியாக உள்ளது. என் வாழ்வில் நான் பெற்ற சிறந்த அனுபவமாக இதனைக் கருதுகின்றேன்.

 6. தங்களின் இத்தகைய தனித்துவ சிந்தனைகளினால் ஏற்பட்ட சவால்கள் யாவை?

          ஒரு பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனம் எவ்வாறு இருக்க வேண்டும் என எண்ணுவதைப் போல எண்ணியே செயல்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். அதன்படி அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்பட்ட திறன்மிகு வகுப்புகளாக மாற வேண்டும் என எண்ணினேன். இதற்காகச் சொந்த செலவை மேற்கொள்ள எண்ணிய போது மக்களும் தன்னார்வலர்களும் பெருமளவில் உதவினர். பொருட்செலவுகள் சவாலாக இருந்தாலும் உதவும் கரங்களும் இருந்தமையால் கனவு நனவாகியது. தகவல் தொழில்நுட்பம் பெருகாத சூழலில் கணினிமயமாக்கம் பெரும் சவாலாக அமைந்தது. தற்போது அதுவும் எளிதாகி விட்டது.

 7. கோவிட்-19 காலத்தில் தங்களின் செயல்பாடுகளும் அணுகுமுறைகளும் யாவை?

          கொரோனாச்சூழலில் இணையதள வகுப்புகள் குறித்து பலரும் சிந்திப்பதற்கு முன்பே அதனைச் செயலாற்ற எண்ணியுள்ளோம். இதனால் புலனவகுப்புகள் எடுக்கத் தீர்மானித்தோம். அடுத்ததாக அலைபேசி வசதியற்ற மாணவர்களுக்காக மாலைநேரத்தில் அவர்கள் இருப்பிடத்திற்கருகே இரு தன்னார்வ ஆசிரியர்களை அனுப்பி பாடம் நடத்த முடிவு செய்தோம். மூன்றாவது முயற்சியாக கல்வித்தொலைக்காட்சியை தீர்மானம் செய்தோம். அதன்படி குறித்த வகுப்புகளுக்கான குறித்த ஒளிபரப்பு நேரம் பற்றிய தகவல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. இவையாவும் கல்வி சார்ந்தன.

          அடுத்ததாக மாணவர்களின் பொருளாதாரத்திற்காக மாணவர்களின் பெற்றோருக்கு ஆயிரம் ரூபாயுடன் கூடிய அரிசி,மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன. இதைத்தவிரக் கிராமத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பத்தினருக்கு மளிகைப்பொருட்கள் ஊராட்சித்தலைவரின் வாயிலாகத் தரப்பட்டன. மேலும் ஊரிலுள்ள தூய்மைப்பணியாளர்களுக்கு உதவிகள் நல்கப்பட்டன. இவை சமூகம் சார்ந்தன. மேலும் பள்ளியில் ஊரடங்கு காலத்தில் விமான கழிப்பறைகள் தரத்தில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.

          இத்தகைய சீர்மிகு பணிகள் மேன்மேலும் தொடர திரு.செல்வக்கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்…

by Lakshmi G   on 19 Jan 2021  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா தனித்துவமிக்க தலைமையாசிரியர் – நிகழ்வு – 11 - திருமதி. வசந்தா
ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11 - திரு. திலீப் ஆற்றல்மிகு ஆசிரியர் –– நிகழ்வு – 11 - திரு. திலீப்
தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம் தனித்துவமிக்க தலைமையாசிரியர் - திருமதி. மரகதம்
ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி ஆற்றல் மிகு ஆசிரியர்- திருமதி. கி. கலைச்செல்வி
தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி, தனித்துவமிக்க தலைமையாசிரியர் – திருமதி கு.ரமாராணி,
சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப்  பள்ளி, 600100 சென்னை:பாவாணர் தமிழ்வழி மழலையர் தொடக்கப் பள்ளி, 600100
கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004 கரூர்: சக்தி தமிழ்ப் பள்ளிக் கூடம், 639004
புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102 புதுப்பட்டிணம்:பாவலரேறு தமிழ்வழித் தொடக்கப்பள்ளி, 603102
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.