LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- சைவ சித்தாந்த சாத்திரம்

உண்மை நெறி விளக்கம்

 

உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம் என்பது பற்றி விரிவாக விளக்குவதே இந் நூலின் நோக்கமாகும். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. இந் நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார். 
நூல்
1. மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்
மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சி
மண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாது
கண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே.
2. பாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்
நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்
போயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றா
தாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.
3. எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்
கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்
பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்று
செவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.
4. பரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்
பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்
உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்
உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்றின்றித்
தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாது
தற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்
தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்
சிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.
5. எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்
கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலா
மொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்
குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானே
தருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்
எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோ
டிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.
6. பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்
பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்
சாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்
தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்
நாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்து
நானாபோ கங்களையுந் தானாகச் செய்து
பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்
பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.
  எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)
உணமை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்
தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்
நண்பாய தத்துவநா தன்.
உண்மை நெறி விளக்கம் முற்றும்.

உண்மை நெறி விளக்கம், தமிழில் எழுதப்பட்ட சைவசித்தாந்த சாத்திரங்களுள் ஒன்று. சைவ சித்தாந்தத்தை விளக்கும் இன்னொரு நூலான சிவப்பிரகாசத்தில் குறிப்பிடப்பட்ட தசகாரியம் என்பது பற்றி விரிவாக விளக்குவதே இந் நூலின் நோக்கமாகும். இதில் ஆறு பாடல்கள் உள்ளன. இந் நூலை எழுதியவர் உமாபதி சிவாச்சாரியார். 
நூல்

1. மண்முதற் சிவம தீறாய் வடிவுகாண் பதுவே ரூபம்மண்முதற் சிவம தீறாய் மலஞ்சட மென்றல் காட்சிமண்முதற் சிவம தீறாய் வகையதிற் றானி லாதுகண்ணுத லருளால் நீங்கல் சுத்தியாய்க் கருதலாமே.
2. பாயிரு ணீங்கிஞானந் தனைக்காண்ட லான்ம ரூபம்நீயுநின் செயலொன் றின்றி நிற்றலே தரிச னந்தான்போயிவன் தன்மை கெட்டுப் பொருளிற்போயங்குத் தோன்றாதாயிடி லான்ம சுத்தி யருணூலின் விதித்த வாறே.
3. எவ்வடி வுகளுந் தானா யெழிற்பரை வடிவ தாகிக்கௌவிய மலத்தான் மாவைக் கருதியே யொடுக்கியாக்கிப்பௌவம்விண் டகலப் பண்ணிப் பாரிப்பானொருவனென்றுசெவ்வையேயுயிரிற் காண்டல் சிவரூபமாகுமன்றே.
4. பரையுயிரில் யானெனதென் றறநின்ற தடியாம்பார்ப்பிடமெங் குஞ்சிவமாய்த் தோன்றலது முகமாம்உரையிறந்த சுகமதுவே முடியாகு மென்றிவ்உண்மையினை மிகத்தெளிந்து பொருள்வேறொன்றின்றித்
தரைமுதலிற் போகாது தன்னிலைநில் லாதுதற்பரையி னின்றழுந்தா தற்புதமே யாகித்தெரிவரிய பரமாநந் தத்திற் சேர்தல்சிவனுண்மைத் தரிசனமாச் செப்பு நூலே.
5. எப்பொருள்வந் துற்றிடினு மப்பொருளைப் பார்த்தங்கெய்துமுயிர் தனைக்கண்டிங் கவ்வுயிர்க்கு மேலாமொப்பிலருள் கண்டுசிவத் துண்மை கண்டிங்குற்றதெல்லா மதனாலே பற்றி நோக்கித்
தப்பினைச்செய் வதுமதுவே நினைப்புமது தானேதருமுணர்வும் புசிப்புமது தானே யாகும்எப்பொருளு மசைவில்லை யெனவந்தப் பொருளோடிசைவதுவே சிவயோக மெனுமிறைவன் மொழியே.
6. பாதகங்கள் செய்திடினுங் கொலைகளவு கள்ளுப்பயின்றிடினு நெறியல்லா நெறிபயிற்றி வரினுஞ்சாதிநெறி தப்பிடினுந் தவறுகள்வந் திடினுந்தனக்கெனவோர் செயலற்றுத் தானதுவாய் நிற்கின்நாதனவ நுடலுயிரா யுண்டுறங்கி நடந்துநானாபோ கங்களையுந் தானாகச் செய்துபேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்பெருகுசிவ போகமெனப் பேசுநெறி யிதுவே.

  எண்ணும் அருள்நூல் எளிதின் அறிவாருக்(கு)உணமை நெறிவிளக்கம் ஓதினான் - வண்ணமிலாத்தண்காழித் தத்துவனார் தாளே புனைந்தருளும்நண்பாய தத்துவநா தன்.

உண்மை நெறி விளக்கம் முற்றும்.

by C.Malarvizhi   on 27 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன் சமணக் கல்வெட்டுகளும், சங்க கால செஞ்சியும் - நிலவளம் கு.கதிரவன்
சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan சித்தம் பற்றித் திருமூலரும் எட்வட் கூசுரோவும் by Prof. Dr. Vasu Ranganathan
குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA குறுந்தொகையில் உவமை நயம் -முனைவர் R.பிரபாகரன், USA
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன் குறுந்தொகையில் தோழியம் - பேராசிரியர் முனைவர். நிர்மலா மோகன்
செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம் செவ்வியல் குறுந்தொகையில் இலக்கிய நுட்பங்கள் - முனைவர். முருகரத்தினம்
கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி கவிதை : அதிசயக் குறுந்தொகை! அறுசுவை பலவகை - திரு.மகேந்திரன் பெரியசாமி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.