LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் நூல்கள் Print Friendly and PDF
- காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம்

உண்மை ஒளிர்ந்த உரை

இந்த உலகத்திலே ஒரு கெட்ட பழக்கமும் இல்லாத ஒருவனைப் பார்க்கவே முடியலே என்று ஒரு பெரியவர் கடுமையாகக் குறைபட்டுக்கொண்டார் .

உடனே பக்கத்தில் இருந்த இளைஞன்பொதுவா அப்படிச்சொல்லாதீங்க . நான் இல்லையா ?. என்றான் .

தம்பி , நீ சிகரெட் , பீடி , மது ஏதாவது குடிப்பியா ?

நோ

பொடி , வெத்திலை பாக்கு ? காஃபி , டீ ?

அந்த பக்கமே திரும்ப மாட்டேன் .

போகட்டும் . மாது , திருட்டு , மோசடி , வன்சொல்

இல்லே சார் , அது மாதிரி எதுவுமே இல்லை

ஆச்சரியமா இருக்கே . ஒரு கெட்ட பழக்கமும் இல்லையா உன்கிட்டே

ஒரே ஒரு கெட்ட பழக்கம் தான் சார் . பொய் மட்டும் சொல்வேன் என்றான் இளைஞன் .

இப்படி பொய்மையையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் மத்தியில் உண்மை ஒன்றை மட்டுமே உரைத்து வாழ்ந்தவர் பெருந்தலைவர் .

குமுதம் வார இதழில் , கே . ஆர் . நாயர் என்பவர் -

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஓர் ஒப்பந்தத்தையே முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் . அப்போதைய பாரதப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி , ராஜ்பவனில் நிருபர் கூட்டம் நடந்தது . தற்போதைய ஒப்பந்தத்தை அடுத்து இலங்கையில் ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சியினர் மதித்துக் காப்பாற்றுவார்களா ? என்று சாஸ்திரியிடம் கேட்டனர் . அதற்கு சாஸ்திரி சற்றுத் தயங்கினார் . ஆனால் பெருந்தலைவர் மிகவும் அழகான தெளிவான ஆங்கிலத்தில் பதிலளித்தார் .

“Don’t go and print such suggestions in the paper. This is an agreement signed by two Democratic Governments, just as any Democratic Government in India would honour this agreement. We expect any successor Government in ceylon to honour this agreement” என்றார் பெருந்தலைவர் .

“I agree with kamaraj Ji” சாஸ்திரி மகிழ்வுடன் கூறினார் என்று குமுதம் ஏட்டில் எழுதியிருந்தார் .

உள்நாட்டு விவகாரங்களில் மட்டுமின்றி வெளிநாட்டு விவகாரங்களிலும்பெருந்தலைவரின் அரசியல் ஞானம் தெளிவாக திட்டவட்டமாக இருந்தது என்பதற்கு இது சான்று .

1966 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் மகாசபைக் கூட்டம் நடந்தது . விலைகளை வீழ்ச்சியடையச்செய்து பாமரருக்கு அத்தியாவசியமான பொருட்களைத் தர அரசாங்கம் உடனடியாக நிறையத் தொழில்களை மேற்கொள்ள வேண்டும் என்று பெருந்தலைவர் கேட்டுக்கொண்டார் .

பொருளாதாரத் துறைகளில் ஒரு நிலையான தன்மை ஏற்படவும் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம் . இதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு தேவை என்றும்பெருந்தலைவர் தனது தலைமை உரையில் பேசினார் . அவரது பேச்சில் இருந்த தீர்க்க தரிசனம் மக்களின் சிந்தனையைத் தூண்டியது .

by Swathi   on 02 Sep 2015  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 26-27
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 22-25
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 17-21
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 14-17
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 9-13
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 5-8
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 4
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3 தண்ணீர் விட்டோ வளர்த்தோம்!- எம். பாலசஞ்சீவி - காட்சி 3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.