LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

இந்தியப் பொருட்களுக்கு இறக்குமதி வரியை அமெரிக்கா உயர்த்தியது.நியாயமற்றது - வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

 

விவசாயிகளையும் சிறு உற்பத்தியாளர்களையும் பாதுகாப்பதே இந்தியாவின் முன்னுரிமை என்றும் அதில் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், "இந்தியப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்கா 50%க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது. இது நியாயமற்றது, காரணமற்றது.
நம்முடைய விவசாயிகள் மற்றும் சிறு உற்பத்தியாளர்களின் நலன்களில் அரசு மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. அவர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது. இதில் சமரசத்துக்கு இடமே இல்லை.

இந்தியா மீதான வரி உயர்வுக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் காரணமாகக் கூறுகிறார்கள். இதன்மூலம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு இந்தியா நிதி அளிப்பதாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால், இத்தகைய விமர்சனம் சீனாவுக்கு எதிராகவோ ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராகவோ பயன்படுத்தப்படுவதில்லை. ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கும் சீனா மீதோ, அதிக அளவில் திரவ இயற்கை எரிவாயு வாங்கும் ஐரோப்பிய நாடுகள் மீதோ இத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதில்லை.

ரஷ்யா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகம், இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தகத்தைவிடப் பெரியது. எரிசக்தி விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும், அதிலும் ஐரோப்பிய ஒன்றியம்தான் பெரிய வர்த்தகர். ரஷ்யாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் வளந்துள்ளன என்றபோதிலும், ஐரோப்பிய ஒன்றியம் அளவுக்கு இல்லை.
நமது தேசிய நலனுக்கான முடிவுகளை நாம் எடுப்பது நமது உரிமை. அதுதான் சுயாட்சிக்கான அடிப்படை என்று நான் கூறுவேன்.

இந்தியா - அமெரிக்கா இடையே பதற்றங்கள் உள்ள போதிலும், பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இரண்டு நாடுகளுமே பெரிய நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையேயான கோடுகள் துண்டிக்கப்படவில்லை. பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது எங்கே செல்கிறது என்பதைப் பார்ப்போம்" எனத் தெரிவித்தார்.

 

 

by hemavathi   on 23 Aug 2025  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள்  -முனைவர்.சுபாஷினி இந்தோனேசியா- ஆச்சேவில் தமிழர்கள் -முனைவர்.சுபாஷினி
அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்!  கூட்ட அறிக்கை(Minutes Of Meeting) அயலகத் தமிழர் நலனுக்கான திட்டங்களும் விளக்கங்களும்! கூட்ட அறிக்கை(Minutes Of Meeting)
இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது -  ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது - ​​அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர்
ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின் ஜெர்​மனி கொலோன் பல்​கலைக்​கழக நூலகத்தைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்
வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ் வாரத்தில் 4 முறை கொழும்பு விமானச் சேவைகளை மீண்டும் இயக்குகிறது குவைத் ஏர்வேஸ்
ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம் ஹெச்1பி நுழைவு இசைவுத் திட்டத்தில் மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கத் திட்டம்
இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம் இந்​தி​யா​வுக்​கான அமெரிக்க தூத​ராக செர்​ஜியோ கோர் நியமனம்
2025 இறுதிக்குள் ஒரு  மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம் 2025 இறுதிக்குள் ஒரு மில்லியன் இந்தியர்களை வேலைக்கு அமர்த்த ரஷ்யா திட்டம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.