LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை!

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் வசிக்கும் தமிழ் ஆர்வலர்கள் ஒன்று சேர்ந்து தமிழர்களின் புராதன அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு அங்கமாக, முதலில் பறை இசையின் மறுமலர்ச்சிக்கு வித்துட்டுள்ளனர். கணிப்பொறித் துறையில் பணிபுரியும் இவர்கள் ஒரு குழு அமைத்து இதற்கான முயற்சியில் இறங்கினர். திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் தமிழகத்தில் மிகவும் பிரபலமான திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினர் பறை இசையால் ஈர்க்கப்பட்ட இந்த தமிழர்கள், அமெரிக்காவிற்கும் பறை இசையை கொண்டு வரவேண்டும் என்று விரும்பினர். சக்தி கலைக் குழுவினரிடம் தொடர்பு கொண்டு, அவர்கள் மூலமாகவே பறை இசைக்  கருவிகளை முதலில் தருவித்தனர். வீடியோவிலும், ஆடியோவிலும் கேட்டு சுயமாகவே பயிற்சி செய்ய ஆரம்பித்தனர்.


இந்நிலையில் டெக்சாஸ் மாநிலத்தில் உயர்நிலைப் பள்ளியில் படித்து வரும் தமிழ் மாணவி ரோஷிணி, ஏற்கனவே சக்தி கலைக்குழுவினரிடம் நேரடியாக பயிற்சி பெற்று வந்திருப்பது தெரிய வந்தது. எனவே அவரையே தங்கள் ஆசிரியையாக ஏற்றுக்கொண்டு முழுமையான பயிற்சி எடுத்தனர். பயிற்சி பெற்ற  அனைவரும் முதல் நிகழ்ச்சியாக கான்சாஸ் நகர தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற 'கலகலப்பு 2013' கலை நிகழ்ச்சியில் பங்கேற்று, நடனத்துடன் கூடிய பறை இசை நிகழ்ச்சி நடத்தினர். கணிப்பொறித் வல்லுனர்கள் பறை நடனம் ஆடிய நிகழ்ச்சி கான்சாஸ் நகரத்தையே வியப்பில் ஆழ்த்திவிட்டது. தொடர்ந்து செயின்ட் லூயிஸ் மிசௌரி தமிழ் சங்கத்தின் முத்தமிழ் விழாவிலும் இந்த குழுவினர் பறை நிகழ்ச்சி நடத்தி அசத்தி விட்டனர்.


2014 பொங்கல் விழா

அமெரிக்காவிலும் தமிழர்கள் பிரம்மாண்டமாக கொண்டாடி வரும் பொங்கல் விழாவிலும் பறை நிகழ்ச்சி இடம்பெறுகிறது. சிகாகோ தமிழ் சங்கம் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.


ஃபெட்னா 2014 தமிழ் விழா

ஜூலை மாதம் செயின்ட் லூயிஸில் நடைபெற உள்ள ஃபெட்னாவின் 2014 தமிழ் விழாவிலும் பறை இசைக் குழுவின் நிகழ்ச்சி இடம்பெறுகிறது. அமெரிக்க பல்கலைகழங்களுடன் இணைந்து தமிழ் மொழியியல் இசையாக பதிவு செய்யும் முயற்சியிலும் உள்ளார்கள். ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு நகரத்தில் தமிழ் அமைப்புகளின் சார்பில் நடனத்துடன் பறை இசை எழுப்பி தமிழர்களின் பண்டைய பாரம்பரியத்தை புதுப்பித்து வருகிறார்கள் இந்த செயின்ட் லூயிஸ் தமிழ் ஆர்வலர்கள்.


இந்த குழுவில் இடம்பெற்றுள்ள பொற்செழியன், புவனேஸ்வரி, நந்தகுமார், செந்தில் நாயகி, வீணா, அசோக், ரம்யா, யசோதா மற்றும் பிரிதிவிராஜ் ஆகிய அனைவருமே கணிப்பொறித் துறையில் வல்லுனர்கள் ஆவார்கள். தமிழ் ஆர்வத்தினால் தமிழர்களின் பாரம்பரிய கலையை அடுத்த தலைமுறை தமிழர்களுக்கு அறிமுகப்படுத்தவும், அமெரிக்கர்களுக்கு தமிழர்களின் தொன்மையை எடுத்துரைக்கவும் இந்த அரிய முயற்சியில் பங்கெடுத்து வருகிறார்கள். தாங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கிடைக்கும் நன்கொடைத் தொகையை முழுமையாக, தமிழகத்தில் உள்ள பறை இசைக் கலைஞர்களின் நலனுக்காக அனுப்பி விடுகிறார்கள்.


வருங்கால சந்ததியினரும் இந்த கலையை தொடரவேண்டும் என்ற முயற்சியோடு செயல்பட்டு வருகிறார்கள், அமெரிக்கா முழுவதும் நிகழ்ச்சி நடத்தி வரும் இந்த குழுவை Porchezhian@hotmail.com மற்றும் Mybest23@gmail.com என்ற இமெயில் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம். 


'எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்று அன்று பாவேந்தர் புரட்சி ஏற்படுத்தினார். இன்று பறை இசை மூலம் அமெரிக்கத் தமிழர்கள் ஒரு அமைதிப் புரட்சியை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றால் மிகையல்ல.


தமிழகத்தில் இருக்கும் இளைஞர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கும்போது, அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் தமிழகத்தின் தொன்மையை போற்றி வருவது தமிழகத்தின் இளைஞர்களை சிந்திக்கவைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சமீபத்தில் அமெரிக்காவில் பயணம் செய்த பாவலர் அறிவுமதி அவர்கள், வெர்ஜீனியாவில் தமிழர்கள் நடத்தும் தமிழ் பள்ளியான வள்ளுவன் தமிழ்மையதிற்கு சென்று அங்குள்ள 200-க்கும் மேற்பட்ட தமிழ்க் குழந்தைகளுடன் உரையாடும்போது, இன்னும் சிறிது காலத்தில் தமிழகத்திற்கு நல்ல தமிழ் ஆசிரியர்கள் தேவைப்படுவார்கள், எனவே மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள்தான் நல்ல தமிழையும், தமிழர் கலைகளையும் போற்றிப் பாதுகாத்து வருகிறீர்கள். நீங்கள் நம் காலாச்சாரத்தை மீட்டெடுக்க எதிர்காலத்தில் மிகப்பெரிய பங்காற்றுவீர்கள் என்று சொன்னது நினைவிற்கு வருகிறது...

 

ச.பார்த்தசாரதி.

பறை-1
by Swathi   on 30 Nov 2013  2 Comments
Tags: USA Software Engineer   Parai Isai   Parai   பறை இசை   பறை   மென்பொருள் வல்லுனர்கள்     
 தொடர்புடையவை-Related Articles
பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை... பறை சாதி இசையல்ல.. தமிழினத்தின் இசை...
பறையிசை - ஒரு பார்வை பறையிசை - ஒரு பார்வை
அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை! அமெரிக்காவில் கணிப்பொறி வல்லுனர்கள் கையில் எடுத்திருக்கும் தமிழனின் பறை இசை!
கருத்துகள்
30-Jan-2014 08:48:47 vinoth said : Report Abuse
very nice great
 
11-Dec-2013 04:20:05 ஐயப்பன் said : Report Abuse
தமிழ் உறவுகளே, தங்களின் மகத்தான முயற்சிகளுக்கு வாழ்த்துகள்....வெற்றி அடைய...
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.