|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 23, சக்தி, மினியாபலிஸ், மினிசோட்டா |
||||||||
![]() பெயர்: சக்தி முழுப்பெயர்: மலர் நடராசன் பிறப்பிடம்: மயிலாடுதுறை, இந்தியா வசிப்பிடம் : மினியாபலிஸ், மினிசோட்டா, வட அமெரிக்கா பணி: மென்பொருள் – கணிபொறியாளர். மின் அஞ்சல் : malarin25@gmail.com
தமிழ்க் கடல் மறைமலை அடிகளின் கொள்ளு பெயர்த்தியான. இவருடைய இயற்பெயர் மலர்க்குழலி நடராசன். பள்ளிப் பருவத்தில் இருந்து தமிழ் மொழியின் மேல் தீராத பற்றுடைய இவர் இதுவரை 50க்கும் மேற்பட்ட குடும்ப நாவல்களை (புதினம்) எழுதியிருக்கிறார். அவற்றில் ஆறு நாவல்களும் ஓர் ஆங்கில நாவலும் அச்சுப் புத்தகமாக வெளிவந்திருக்கின்றன. அவரின் நாவழகள் அனைத்தும் அன்பு, பாசம், நேசம், காதல் கருணையோடு உறவுகளின் பிடிப்புகளையும், தோழர்களின் இணைப்புகளையும் சித்தரித்து அத்தோடு சமூகத்திற்கு ஒரு சிறு என்ன விதைகளை விதைக்கும் வகையாக அமைந்துள்ளன. அவரின் எழுத்துகள் எப்போதும் மனித நேயத்தை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. அவரின் கதை கருவும் அதை எடுத்து செல்லும் நடையும் மனதிற்கு இதமளிப்பதாக இருக்கின்றன. ஒவ்வொரு கதாபாத்திரமும் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடும். அப்படியே சிறிய பாதிப்பை நம் மனதில் ஏற்படுத்தும் என்றே சொல்லலாம். அவர் நாவல்களோடு, சிறு கதைகள் மற்றும் கவிதைகள் படைத்து அவைகளும் பத்திரிக்கைகளில் வெளியாகி உள்ளன. நாவல் ஆசிரியரின் தமிழ் பற்று அவரை தலைநகரில் தமிழ் பள்ளியை அமெரிக்க தலைநகரமான வாசிங்டனில் உருவாக்க வைத்து அதனை விரிவாக்கவும் செய்துள்ளது. இலவச தமிழ் பள்ளியை உருவாக்கி அதனை நாற்பது மாணவர்களோடு ஆரம்பித்து நடத்தியவர். இன்று அந்த பள்ளி நிறைய பள்ளிகளாக அங்கே உருவாக்கி மற்ற ஆசிரியர் பெற்றோரின் அயராத உழைப்பில் 21 ஆண்டுகளுக்கு முன்னே தொடங்கிய தமிழ்ப் பள்ளி இன்று பல கிளைகளாகி 1800 தமிழ் மாணவ மாணவிகள் அதில் படித்து தமிழ் கற்று தேர்கின்றனர். அதனை உருவாக்கியதன் பலன் அங்கே பிறந்து வளரும் தமிழ் பிள்ளைகள் தமிழ் மொழியை கற்று தமிழ் மண்ணோடு தொடர்புடையவர்களாக உருவாகிறார்கள். அவர் வாழும் மற்ற மாகாணங்களில் அனைத்திலும் தமிழ் பயிற்றுவிக்கவும் மற்றும் தமிழ் பள்ளிகளை உருவாக்க மிகவும் உதவியவர். அமெரிக்க தமிழ் பள்ளிகளின் பாட திட்டம் உருவாக்க தன் பங்கை ஆற்றியுள்ளார். தம்மிடம் தமிழ் பயிலும் மாணவர்களை கொண்டு அங்கே உள்ள தமிழ் சங்க விழாக்கள், மற்றும் தமிழ் பேரவை விழாக்களில் தமிழ் மொழி சார்ந்த நாடகங்கள், நடனங்கள், பேச்சு போட்டிகள் என்று நம் தொல் தமிழ்நாட்டு கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளையும், வரலாறுகளையும் வடிவமைத்து வழங்கி உள்ளார். அத்தோடு தானும் கவியரங்கங்களிலும் கலந்து கொண்டு கவிதைகள் படைத்துள்ளார். அங்கே உருவாகும் தமிழ் இதழ்களுக்கு தொகுப்பாசிரியராகவும் பணியாற்றி உள்ளார். தமிழ் வானொலியில் தமிழ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இன்னவாள் ஆசிரியர் கல்லூரிகளின் வழி இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள சில கிராமப்புற பள்ளிகள் முன்னேற்றமடைய தொண்டுகள் பல செய்துள்ளார். அறிவியல், வரலாறு மற்றும் புவியல் தொடர்பான உபகரணங்களை வழங்கி சிறு பிள்ளைகளின் அறிவை விரிவாக்க மிகவும் உதவி இருக்கிறார். சிறு கிராமங்களில் உள்ள பள்ளிகளில் நூல் நிலையங்கள் அமைக்க வேண்டிய நூல்கள் வாங்கி வழங்கி உள்ளார். அவர் பிறந்து வளர்ந்த ஊரில் உள்ள உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக்க தன் சிறு உதவியை செய்துள்ளார். அத்தோடு சில பல மாணவர்களை தத்து எடுத்து அவர்களை மேல் பட்டப்படிப்பு வரை படிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நல்ல பணியில் அமர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடதக்கது.
|
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 10 Mar 2023 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|