|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 30, கவிஞர் மருதயாழினி , அட்லாண்டா , வடஅமெரிக்கா |
||||||||
![]() பெயர்:மருதயாழினி (எ )த.ச.பிரதீபா பிரேம் பிறப்பிடம்: தஞ்சாவூர், தமிழ்நாடு மாநிலம், இந்தியா வசிப்பிடம்: கம்மிங்ஸ், அட்லாண்டா, வடஅமெரிக்கா பணி:எழுத்தாளர், கணினித்துறை இணையதளம்:https://nilavinnizhal.blogspot.com/?m=1
கல்வி: பூதலூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தொடக்கக் கல்வியைப் பயிலத் துவங்கி, கணிப்பொறியில் (MCA ) முதுநிலைப் பட்டப் படிப்பு நிறைவு.
விருதுகள்: 1. மனிதம் விதைப்போம் அமைப்பின் மங்கையரில் மாணிக்கம்விருது - 2024 2. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA)அமெரிக்காவின் ஆற்றல் மிகு பெண்கள் விருது - 2023 3. தமிழன்பன் 80 விருது - 2022 4. ஐயை சக்தி விருது - 2022 5. தமிழ் அமெரிக்கத் தொலைக்காட்சி வழங்கிய முத்தமிழ்த்திலகம் விருது - 2022
எழுதியுள்ள நூல்கள்: 1. கவிதை நூல்கள் - 4 2. சிறுவர் நூல்கள் - 4 3. ஏன் தமிழ்ப் பள்ளிக்குப் போகவேண்டும் என்ற குறு நூல் லட்சுமி தமிழ்ப் பள்ளியில் நாடகமாக நடிக்கப்பட்டது.
எழுதியுள்ள பாடல்கள்: 1. தமிழ் வாழ்த்துப் பாடல் 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு அமெரிக்காவின் பல பள்ளிகளில் குழந்தைகளால் பாடப்பட்டுவருகிறது. 2. எழுதி இயற்றிய பொங்கல் பாடலும் பல அட்லாண்டாப்பள்ளிகளில் பாடப்பட்டு வருகிறது.
ஆர்வம்: தலைமுறை தாண்டிய தமிழை வளர்ப்பது, தமிழில் மறையும்சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வருவது.
சிறப்புகள்: 1. தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் விழாவில் 2024 ஆம்ஆண்டின் கவியரங்கத்திற்கான சிறப்பு விருந்தினர்அழைப்பாளர் 2. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் மாண்புமிகு அப்துல்கலாம் ஐயாவிடம் வாழ்த்து பெற்ற கவிஞர்
பொறுப்புகள்: 1. அட்லாண்டாத் தமிழ்ச்சங்க முன்னாள் இலக்கியக் குழுத்தலைவர், செயற்குழு உறுப்பினர் 2. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) இலக்கியக்குழுத் துணைத் தலைவர், பேரவை அருவி துணை ஆசிரியர் குழு, பேரவையின் தமிழ்ப் பல்கலைக்கழகக் குழு,தொன்மை தொடக்கம் தொடர்ச்சி குழுப் பணிகள் |
||||||||
![]() ![]() |
||||||||
![]() |
||||||||
by Swathi on 02 Jul 2024 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|