|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 39, தாளைமுத்து பழனிமுத்து, நோவி, மிசிகன், வடஅமெரிக்கா |
||||||||
![]() பெயர்: தாளைமுத்து பழனிமுத்து பிறப்பிடம்: திருமங்கலம், மதுரை வசிப்பிடம்: நோவி, மிசிகன், வடஅமெரிக்கா பணி: மென்பொருள் பொறியியல் வல்லுனர் மதுரை திருமங்கலத்தில் பிறந்த பழனிமுத்து தனது பள்ளி படிப்பை திருமங்கலத்திலும் பொறியியல் கல்வியை காரைக்குடியிலும் முடித்தார். பிறகு தனது உயர் கல்வியை சிகாகோவில் முடித்த இவர் கடந்த 15 ஆண்டுகளாக வட அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ள இவர் தமிழ் மொழியுடன் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான உறவு கொண்டவர். இதுவரை இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவருடைய முதல் நூல் “அன்பின் வெளி” கடந்த கால உறவுகளை மையப்படுத்தி எழுதப்பட்டது. இரண்டாவது நூல் “வாழ்வியல்”. இதில் தனிமை, காதல், நட்பு போன்ற உணர்வுகளை பழனிமுத்து தொட்டிருக்கிறார். எழுத்தாளர்கள் கல்கி, அசோகமித்திரன், சாண்டிலியன், ஜெயகாந்தன், ஜெயமோகன் மற்றும் கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வைரமுத்து போன்றவர்களின் நூல்களிலும் நாட்டம் கொண்டவர்.
|
||||||||
![]() ![]() |
||||||||
by Swathi on 05 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|