|
||||||||
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் - 40, அருள்ஜோதி முரளிதரன், ரிவர் சைட், கலிஃபோர்னியா, வடஅமெரிக்கா |
||||||||
![]() பெயர்: அருள்ஜோதி முரளிதரன் பிறப்பிடம்: கோவை வசிப்பிடம்: ரிவர் சைட், கலிஃபோர்னியா பணி: விஞ்ஞானி (மருத்துவம்) அறிவியல் முதுகலை, முனைவர் பட்டம் பெற்ற அருள்ஜோதி முரளிதரன் தமிழ்ச்சங்கங்களுடன் இணைந்து தமிழ்ப்பணி செய்துவருவதோடு தற்போது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் இலக்கியக் குழுவின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். எழுத்தில் தீராத பற்றுடைய இவர் அகத்தேடலும், அரசியல் சார்புமுள்ள கவிதைகளை தொடர்ச்சியாக எழுதி வருகிறார். காலத்தின் மிக புறவயமான சூழலில் இருந்து கொண்டு அகத்தில் உண்டாகும் போராட்டத்தை, அழகியலை, உண்மையை, பிறழ்வுகளை, துயரத்தை, அபத்தங்களை கலை வடிவில் கொண்டாட கவிதைகளைத் தவிர தனக்கு வேறு மீட்சியில்லை என்று குறிப்பிடும் இவர், இருத்தலியலின் அவல உண்மைக்கும் மிகை யதார்த்தங்கள் உண்டாக்கும் மாயத்திற்கும் இடையே அகமும் புறமும் மாறி மாறி அலைவுற்று உண்டாக்கும் சுமைகளை இறக்கிவைக்கும் எல்லையற்ற வெளியாக கவிதைகளை அடையாளப்படுத்துகிறார். இறுக்கமான ஆய்வக பணிச்சூழலில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் இடமாக, உருவாக்கிக் கொள்கிற புதுப் புது அக உலகங்களுக்குள் உலவும் இடமாக இலக்கியத்தை காண்பதாகக் குறிப்பிடும் இவர், ஆத்மா நாம், அபி, சச்சிதானந்தன், பிரமீள், முகுந்த் நாகராஜன், அசோகமித்திரன், பஷீர், எமிலி டிக்கின்சன், ழாக் பிரெவர், மிலன் குந்தேரா, அந்தோன் செக்காவ், தஸ்தோவெஸ்கி, எர்னஸ்ட் ஹெமிங்வே, விர்ஜினியா வுல்ப், சில்வியா ப்ளாத் ஆகியோரின் எழுத்துகள் தன்னை பெரிதும் பாதித்ததாகக் குறிப்பிடுகிறார். இவருடைய கவிதைகள் அமிர்தம், சொல்வனம், வாசகசாலை போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. கவிதைகளுடன் அறிவியல் கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவரது அறிவியல் கட்டுரைகள் வாசகசாலை, குமுதம் டாக்டர் போன்ற இதழ்களிலும் வெளியாகியுள்ளது. இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு "பிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரம்" 2025-இல் யாவரும் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
|
||||||||
![]() |
||||||||
by Swathi on 05 Feb 2025 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|