பெயர்: இராஜி ராமச்சந்திரன்
சொந்த ஊர்: மானாமதுரை
வசிக்கும் ஊர்: அட்லாண்டா, வடஅமெரிக்கா
பணி: மென்பொருள் பொறிஞர்
விருதுகள்:
- “ஆற்றல்மிகு பெண்கள்” விருது – 2024, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)
- உரைநடைக்கான "தமிழன்பன் 80” விருது – 2020, ஒருதுளிக்கவிதை, புதுச்சேரி
- “தமிழ்ப்பணிச் செம்மல்” விருது – 2022, தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி, அமெரிக்கா
நூல் வெளியீடு:
- "அம்மா வருவாயா?" – கட்டுரைத் தொகுப்பு, 2019
- “வட அமெரிக்காவின் ஆற்றல்மிகு பெண்கள்” – நேர்காணல் கட்டுரைத் தொகுப்பு, 2021
ஆர்வம்:
- தமிழ்மொழியில் ஈடுபாடு, எளிய முறையில் அயலக மாணவர்களுக்குத் தமிழ் கற்பித்தல், நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள், தேர்வுகள் அமைத்தல்
- இதழியல்
- தோழமைகளின் நூல்களுக்கு மெய்ப்பு பார்த்து உதவுதல்
- தமிழ் தொடர்பான நிகழ்ச்சிகளுக்குத் திட்டப்பணி வடிவமைப்பு, மேலாண்மை, மற்றும் செயலாக்கம்
தன்னார்வத் தமிழ்ப்பணி:
- துணை முதல்வர், லட்சுமி தமிழ் பயிலும் மையம், அட்லாண்டா – 21 ஆண்டுகள் (2003 முதல்). இணைய வழியில் பயிலும் 300+ பன்னாட்டு மாணவர்கள்
- முதன்மை ஆசிரியர், “வல்லினச் சிறகுகள்” இதழ் – 4 ஆண்டுகள் (2020 முதல்), 130+ வாராந்திர கவிதை வாசிப்பு / உரை நிகழ்ச்சி மேலாண்மை, அமெரிக்காவில் தமிழ்ப் புத்தகக் கண்காட்சி ஏற்பாடு
- மேலாண்மைக் குழு உறுப்பினர், உலகப் பெண் கவிஞர் பேரவை
- தன்னார்வலர், அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம், ஆண்டு மலர் - 2020 ஆசிரியர்
- தமிழ்த் தேனீ சொற்பட்டியல் தயாரிப்புக் குழு (2020), வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை, 2,000 சொற்கள், வாக்கியங்கள், 6 பயிற்சித் தொகுப்புகள்
- புதுச்சேரி ஒருதுளிக்கவிதை, அமெரிக்க எட்யூரைட் அறக்கட்டளையின் "கொஞ்சம் கதை கொஞ்சம் இலக்கணம்" சிறார் பட நூல் வரிசை 10 நூல்களில் எளிய இலக்கணப் பகுதிகள்
-
- அமெரிக்கக் கிளை ஒருங்கிணைப்பாளர், தமிழ் வான் அவை, ஜெர்மனி
|