|
||||||||
உயில் |
||||||||
ஒரு மண்ணறையாச்சும் கிடைக்குமென்பார்களே
எனக்கு
அதுவும் வேண்டாம்.
இரண்டு மீசான் கட்டைகள்
ஓநாய் விரட்டும் வெள்ளைக் கொடி
நான் நரகவாதியா
இல்லை
சொர்க்கவாதியா என்று நிர்ணயிக்க
நடும்
குடை மல்லிகைக் கிளை
எதுவும் எனக்கு இல்லாது போகட்டும்.
ஒரு குழி
குஞ்சிக் கோழிபுதைக்கும் மடு
அல்லது,
சிறுநீர் பாய்த்து சுருப்பெழும்பிய
துளை,
இறந்து
என்னாவி
தென்னோலைக் குருத்தில் தங்கிவிட்ட பிற்பாடு
கிடைத்தென்ன?
அதுவும் போனால்தான் என்ன.
ஒரு சோடி இழந்த குருவி
என் மீசான் கட்டையில்
குந்தி இளைப்பாறத் தேவையில்லை
மயானத்தில் மேய்கின்ற
ஆடு
எனக்காகக் குத்தப்பட்ட குடை மல்லிகைத்
துளிரை
வாயில் வைத்து அமர்த்தி
கத்திப் புழுக்கையிட வேண்டாம்.
என் அடக்கஸ்தலத்தைச் சூழவும்
புல் பூண்டே முளைத்து
தும்பி தொத்தாட்டிக்
கவையில்லை,
நீங்கள் பாவிக்கும் விதமாக
மூலைக்குள் செத்த எலியாய்
நிலத்தோடு கிடந்து ஊதி வெடிக்கிறேன்.
என் மண்ணறையை உங்களுக்கே
தாரை வார்க்கிறேன்
ஒரு மண்ணறையாச்சும் கிடைக்குமென்பார்களே எனக்கு அதுவும் வேண்டாம்.
இரண்டு மீசான் கட்டைகள் ஓநாய் விரட்டும் வெள்ளைக் கொடி நான் நரகவாதியா இல்லை சொர்க்கவாதியா என்று நிர்ணயிக்க நடும் குடை மல்லிகைக் கிளை எதுவும் எனக்கு இல்லாது போகட்டும்.
ஒரு குழி குஞ்சிக் கோழிபுதைக்கும் மடு அல்லது, சிறுநீர் பாய்த்து சுருப்பெழும்பிய துளை,
இறந்து என்னாவி தென்னோலைக் குருத்தில் தங்கிவிட்ட பிற்பாடு கிடைத்தென்ன? அதுவும் போனால்தான் என்ன.
ஒரு சோடி இழந்த குருவி என் மீசான் கட்டையில் குந்தி இளைப்பாறத் தேவையில்லை
மயானத்தில் மேய்கின்ற ஆடு எனக்காகக் குத்தப்பட்ட குடை மல்லிகைத் துளிரை வாயில் வைத்து அமர்த்தி கத்திப் புழுக்கையிட வேண்டாம்.
என் அடக்கஸ்தலத்தைச் சூழவும் புல் பூண்டே முளைத்து தும்பி தொத்தாட்டிக் கவையில்லை,
நீங்கள் பாவிக்கும் விதமாக மூலைக்குள் செத்த எலியாய் நிலத்தோடு கிடந்து ஊதி வெடிக்கிறேன். என் மண்ணறையை உங்களுக்கே தாரை வார்க்கிறேன்
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|