LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

குறலோடு உறவாடு :உயிர்த்தீண்டலும் மெய்த்தீண்டலும் - டாக்டர். சுப. திருப்பதி

உயிர்த்தீண்டலும் மெய்த்தீண்டலும் - டாக்டர். சுப. திருப்பதி

நரம்பியல் நிபுணர்:

    டாக்டர். திரு. சுப. திருப்பதி அவர்கள் மதுரையில் பிறந்தவர். திருச்சியில் பணிபுரிகின்றார். சிறந்த நரம்பியல் நிபுணராகச் செயல்படுபவர். வ.சு.ப. மாணிக்கனாரின் சகோதரரின் பேரன் இவர். சிறு வயதிலிருந்தே தமிழ் மீது தீராத காதல் கொண்டவர். குறிப்பாகத் திருக்குறளின் மேல் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.

பிடித்தமான குறள்:

‘கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற

  வல்லதூம் ஐயம் தரும்.’

என்ற குறள் மிகவும் பிடித்தமான குறள் என்று குறிப்பிடுகிறார்.

‘நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

  மறைமொழி காட்டி விடும்’

தற்போது நாம் பேசுவதெல்லாம் ‘குறைமொழி’ ஆகும். நிறைமொழியானது ஒரு சிறு வார்த்தையைக் கூறும் போதே அவர் கூறவருவதை விளங்கிக் கொள்ளுதல் ஆகும். மருத்துவத்துறையில் இவை போன்ற நிறைமொழி அணுகுமுறை அதிகம் நடக்கும். அமெரிக்காவில் இருக்கும் மருத்துவர் ஒருவர் இங்குள்ள இதய நோயாளி ஒருவரின் நிலை என்ன என்று கேட்டால் ஒரு சிறு குறியீட்டுச் சொல்லைப் பயன்படுத்தினால் போதும். அவர் புரிந்து கொள்வார். இதுவே நிறைமொழி ஆகும்.

    ‘மறைமொழி்’ என்பது இன்னும் சற்று நெருக்கமானது. அதாவது நம்மோடு நெருக்கமாகப் பழகிய மனைவியோ, பிள்ளைகளோ, நண்பர்களோ நாம் பேச வருவது என்னவென்று நம் முகத்தைப் பார்த்தே புரிந்து கொள்வர். இது ‘மறைமொழி’ ஆகும்.

உளவியல் நிபுணர் திருவள்ளுவர்:

‘மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்

  ஊறுபாடு இல்லை உயிர்க்கு’

விருப்பமுள்ள உணவாக இருந்தாலும் அளவோடு உண்டு வந்தால் உடலிற்கு நோய் எதுவும் வராது. நலமுடன் நீண்ட நாள் வாழலாம்.

‘உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

  அப்பால் நாற்கூற்றே மருந்து’

நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவத்துறை நான்கு வகைப்பாடு உடையது எனத் திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

    மேலும் செவிக்கு உணவில்லாத போதே வயிற்றுக்குச் சிற்றுண்டி தேவைப்படுகிறது என்று திருவள்ளுவர் கூறுகிறார். ஆக உடலுக்குத் தேவையான உழைப்பு இருந்து கொண்டே இருந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் ஐம்புலன்களைத் தீண்டுவது நல்ல தொடுதல் என்றும், அதைத் தாண்டி தொடுதல் கெட்ட தொடுதல் என்றும் அன்றே கூறியிருக்கிறார். நன்கு ஆராய்ந்தோமானால் உலகியல் சிக்கல்களுக்கு மனிதனின் உள்ளம் மூலமாகவே தீர்வுகளைக் கூறியுள்ளார். மனிதனின் உள்ளத்தை சரிபடுத்திவிட்டால் தவறுகள் எதுவம் விழையாது என்று கூறுகிறார்.

உலகியல்:

‘வகுத்தான் வகுத்த வகையெல்லாம் கோடி

  தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’

எவ்வளவு சொத்து சேர்த்தாலும் சேர்த்த அனைத்தையும் நம்மால் அனுபவிக்க இயலாது. எனவே இருக்கின்ற வரை அனைவருக்கும் கொடுத்து நாமும் நலமுடன் வாழ வேண்டும் என்று உலகியலை எடுத்துரைக்கிறார் திருவள்ளுவர்.

by Lakshmi G   on 11 Oct 2020  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2 எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2
எனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1 எனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - பகுதி – 2 எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - பகுதி – 2
எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - குதி – 1 எனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - குதி – 1
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – கவிஞர் மதுரை சு.பெ. பாபா ராஜ் எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – கவிஞர் மதுரை சு.பெ. பாபா ராஜ்
எனைத்தானும் நல்லவை கேட்க -இ. சுந்தரமூர்த்தி– குறளோடு உறவாடு-பகுதி-2 எனைத்தானும் நல்லவை கேட்க -இ. சுந்தரமூர்த்தி– குறளோடு உறவாடு-பகுதி-2
எனைத்தானும் நல்லவை கேட்க –இ. சுந்தரமூர்த்தி குறளோடு உறவாடு-எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு  மனிதக் குலத்தின் ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள் - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி  - பகுதி-1 எனைத்தானும் நல்லவை கேட்க –இ. சுந்தரமூர்த்தி குறளோடு உறவாடு-எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு மனிதக் குலத்தின் ஒப்பற்ற உயர் சிந்தனை திருக்குறள் - பேராசிரியர் முனைவர். இ. சுந்தரமூர்த்தி  - பகுதி-1
எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சி். பன்னீர் செல்வம் எனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சி். பன்னீர் செல்வம்
கருத்துகள்
19-Oct-2020 08:01:40 Arulmozhithevan said : Report Abuse
wordless word in your thought that i salute you sir
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.