LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு 100 வீடுகள் கட்டித்தந்து உதவிய 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை'!

சிறப்பு நேர்காணல்:

சிறப்பு நேர்காணல்:

இயற்கை விவசாயத்தை மேம்படுத்தி விளைபொருட்களுக்கு உரிய விலையை பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டு வரும் "உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை" கூடவே சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறது.  அண்மையில் கஜா  புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சத்தமின்றி 100 வீடுகளைக் கட்டித் தந்து இருக்கிறது.

விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்து வரும் 'வலைத் தமிழ்' சார்பில் 'உயிர் இயற்கை விவசாயிகள் அபிவிருத்தி அறக்கட்டளை' நிறுவனர் செந்தில்நாதன் அவர்களிடம் பேசினோம். அவர் கூறியதாவது:

2017-ல் எங்கள் அமைப்பைத் துவங்கினோம். இன்றைக்கு இயற்கை விவசாயிகள் பக்கம் அனைவரது கவனமும் திரும்பி உள்ளது. முதலில் நேரடி விற்பனை மூலமாக விவசாயிகள் பலன் பெற ஈரோடு மற்றும் கோவையில் நேரடி விற்பனை நிலையம் தொடங்கினோம். தற்போது அனைத்து மாவட்ட நுகர்வோர்களுக்காக ஆன்லைன் விற்பனையை (uyironline.in) துவங்கியுள்ளோம்.

ஆரம்பத்தில் எங்களுடன் இணைந்தவர்கள் 25 பேர் மட்டுமே. வாராவாரம் விவசாயிகளுக்குப் பயிற்சி தருகின்றோம். முதலில் ஈரோடு, திருப்பூர் பகுதியினர் மட்டுமே எங்களிடம் பயிற்சி பெற்றனர். பிறகு விஷயம் கேள்விப்பட்டு, பக்கத்து மாவட்டங்களான  கோவை, சேலம், நாமக்கல், திருச்சி பகுதி மட்டுமின்றி திண்டுக்கல்லில் இருந்தும் வந்து கலந்து கொள்கின்றனர். இயற்கை விவசாயிகளுக்குப் பயிற்சி மட்டுமல்ல; அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து தருகின்றோம்.

இந்த நிலையில் தான் தமிழகத்தையே புரட்டிப் போட்டது கஜா புயல். இதனால் நாகை, பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட பாதிப்புகள் எங்களைப் பெரிதும் வருத்தம் அடையச் செய்தது. அப்போது தான் எங்கள் அறக்கட்டளை சார்பில் அவர்களுக்கு உதவத் தீர்மானித்தோம்.

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இடம் இவை ஒவ்வொரு மனிதரின் அத்தியாவசியத் தேவைகள் ஆகும். உணவு, உடை ஓரளவுக்கு அவர்களுக்குக் கிடைத்தாலும், இருப்பிடத் தேவையைக் கவனிப்பது என முடிவு செய்தோம்.

இந்த நேரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்லியே ஆகவேண்டும். சமூக வலைத்தளங்களின் பங்கு தான் அது. வாட்சப், பேஸ் புக், யூடியூப் என எங்களது பக்கம் கண்டவர்கள் எங்களுக்கு உதவத் தொடங்கினார்கள்.

இதற்காக வீடுகளை இழந்து தலிப்பவர்களுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டோம். ஒரு வீட்டிற்கு ரூ. 26 ஆயிரம் என மதிப்பீடு செய்தோம். குடிசை தான் என்றாலும் அதற்காக மூங்கில்கள், பிட்டுமன் என்கிற மெல்லிய கூரைத் தகடுகள் கொண்டு வீடுகள் அமைத்துத் தரத் தொடங்கினோம்.
ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் கட்டித் தந்த வீடுகள் 100 எண்ணிக்கையை நெருங்கி விட்டது. அதன் விவரம்:

மன்னார்குடி - 1

அவரிக்காடு - 3

தாமரைப்புலம் - 4

மேலமருதூர் - 8

கோவில்தாவு - 4

கோடியக்காடு - 14

கோடியக்கரை - 12

கத்தரிப்புலம் - 11

விலுந்தமாவடி மணல்மேடு - 7

புதுப்பள்ளி - 2

விலுந்தமாவடி வடபாதி - 5

கரம்பக்குடி - 5

ஆலத்தூர் - 5

அதிராம்பட்டினம் - 2

மேலதொண்டியகாடு - 6

புஷ்பவனம் - 11

இதைச் சொல்லிக்காட்ட வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. இது போன்று பலருக்கும் உதவ வேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும் என்பதற்காகச் சொல்கின்றோம்.

இயற்கை விவசாயம் தொடர்பான பயிற்சி மற்றும் உதவிகள் தேவைப் பட்டால் எங்களை அணுகலாம்.

அலைபேசி: 9842831144. 

வலைத்தளம்: http://uyironline.in

by Mani Bharathi   on 19 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழக ஊர்களின் பெயர் காரணம் -  பகுதி 2 தமிழக ஊர்களின் பெயர் காரணம் - பகுதி 2
[ம.சு.கு]வின் :  மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம் [ம.சு.கு]வின் : மனித உறவுகள் மேம்பாடு – இரகசியம்
கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு கொரியாவில் இயங்கலையில் இனிதே நடைபெற்ற தமிழர் திருநாள் 2021 பொங்கல் நிகழ்வு
கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை கொரிய தமிழ்ச் சங்கத்தின் தமிழர் திருநாள் 2021 தலைவர் உரை
“இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?” “இன்றைய வாழ்வியல் மாற்றங்கள் அதிகம் பாதிப்பது இளையோரையா? முதியோரையா?”
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.