LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் இலக்கணம் (Tamil Grammar )

உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது!!

அவர் பெரும் ஆசிரியர் ஆவார்.
எல்லாரும் எங்களுக்குப் பெரும் ஆதரவு தரவேண்டும்.
நீங்கள் செய்வது பெரும் உதவியாக இருக்கும்.
அவர் சொல்பவை எல்லாம் பெரும் உண்மைகள்.

இந்த வாக்கியங்களைப் படித்தீர்கள். ‘பெரும்’ என்ற சொல்லின் பயன்பாடு விரவி வந்திருக்கிறது. சிறிய நெருடலை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு எல்லாருமே எழுதுவது வழக்காக இருக்கிறது. இலக்கண சுத்தமாக எழுதக்கூடிய பிரபஞ்சன்கூட பெரும் ஆசிரியர் என்று பயன்படுத்திவிடுகின்றனர்.

நான் செய்தது பெரும் தவறு.
பெரும்பாடுபட்டேன்.
தமிழ்நாட்டில் பெரும் நகரங்கள் பல உள்ளன.

மேற்காணும் வாக்கியங்களிலும் ‘பெரும்’ என்பதன் பயன்பாட்டைக் காண்கிறீர்கள். இவை பொருத்தமாகவே உள்ளன என்று கருதுகிறீர்கள்.

நேரடியாக வருகிறேன். உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது. உயிர்மெய் எழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்கு முன்பாகத்தான் பெரும் என்ற சொல்லை இடவேண்டும். அதனால் இரண்டாம் குவியலில் இருந்த வாக்கியங்கள் பொருத்தமாக உள்ளன என்று உணர்ந்தீர்கள்.

உயிரெழுத்துகளில் தொடங்கும் சொற்களுக்குமுன் ‘பெரும்’ என்பது முதனிலை திரிந்து ‘பேர்’ என்றாகிவிடும்.

பெரும் ஆசிரியர் = பேராசிரியர்
பெரும் ஆதரவு = பேராதரவு
பெரும் உதவி = பேருதவி
பெரும் உண்மைகள் = பேருண்மைகள்

முதலில் சொன்ன வாக்கியங்களை இப்போது இப்படி அமைத்துப் படித்துப் பாருங்கள். சுருதி சுத்தமாக இருக்கும்.

அவர் பேராசிரியர் ஆவார்.
எல்லாரும் எங்களுக்குப் பேராதரவு தரவேண்டும்.
நீங்கள் செய்வது பேருதவியாக இருக்கும்.
அவர் சொல்பவை எல்லாம் பேருண்மைகள்.

சரி. பேராசிரியர் என்பது கல்லூரிப் பணி சார்ந்தே வழங்கி அறியப்படுகிறது. அதனால் பெரும் ஆசிரியர் என்று குறிக்கவே விரும்பினால் ‘பெரிய ஆசிரியர்’ எனலாம்.

பின்குறிப்பு : இது எப்படித் தவறாகும் என்றுணர இவ்விரண்டு சொற்களையும் சேர்த்தெழுதிப் பாருங்கள். பெருமாசிரியர், பெருமாதரவு, பெருமுதவி, பெருமுண்மைகள் இப்படி.

- கவிஞர் மகுடேசுவரன்

by Swathi   on 20 Dec 2014  2 Comments
Tags: Uyireluthu   உயிரெழுத்து   பெரும்              
 தொடர்புடையவை-Related Articles
தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !! தகவல் பெரும் உரிமைச் சட்டம் ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!
உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது!! உயிரெழுத்துகளில் தொடங்கும் சொல்லுக்கு முன்பாகப் ‘பெரும்’ என்ற சொல்லை இடக்கூடாது!!
வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !! வங்கி கணக்கு இல்லாதவர்களும் ஏ.டி.எம்-ல் பணம் பெரும் வசதி !!
லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !! லஞ்ச புகார் கூறியவர் மீது அவதூறு வழக்கு - லோக் சத்தா கட்சி கண்டிக்கிறது !!
வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !! வெளிநாடு வாழ் இந்தியர்களும் ஆர்.டி.ஐயை பயன்படுத்த புதிய சேவையை துவக்கியது மத்திய அரசு !!
கருத்துகள்
15-Feb-2015 14:18:09 பவன் said : Report Abuse
அழகிய பறவை கூட்டை தேடிப் பறந்தன. இவ் வாக்கியத்தில் செயப்படுபொருள் எது
 
06-Feb-2015 10:11:02 சோ.சுந்தரவடிவேல் said : Report Abuse
வலைத்தமிழைப் பார்ப்பது இன்று இரண்டாவது நாள்.தொடர்ந்து பார்க்க வேண்டுமென்ற பேரவா உண்டாகிறது. நன்றி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.