LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மரணத்துள் வாழ்வோம்

உயிர்ப்பு

நடு இரவு;

நிமிர்ந்து நிற்கவும்
நெளிந்து படுக்கவும்
இடமற்ற என்
20 ஆம் இலக்கக் கூண்டின்
கம்பிகள் திடீரென அதிரும்.

யுஇலக்கம் இருபது
இலக்கம் இருபது
எழும்படா நாயே
எழும்பு.
எழும்பு...ரு

யுசமர சிங்ஹ, இந்தக்
கதவைத் திற!ரு

எழும்ப இயலாமல்
துவளும் உடலில்
விழுகிறது உதை.
என்ன அது?
எஸ் லோன் பைப்பா?
இரும்புக் கழியா?
குண்டாந் தடியா?
தலைக்குள் மின்னல்கள் சிதற
நிலை குலைந்து தூங்கும்
என் உலகத்திலிருந்து
சிறிது விழிப்பு;
சிறிது மயக்கம்;
மெளனம்.

இதனைத் தொடர்வது மரணமா?

இருள் படர்ந்து வரும்
என் கண்களின் மீது
ஒரு மிருகப் பிறவி
வெளிச்சம் பிடிக்கிறான்.
எனது உறுதியும் உயிரும்
இன்னும் உள்ளது.
இருண்ட சித்திரவதைக் கூடத்தின்
கதவுகள் மீது
இரும்பென அவற்றின்
எதிரொலி கேட்கும்.

அன்புள்ள நண்பனே
ஐ¤லிஸ் ·பூஸிக்,
சிறைக்குறிப்புகள் எழுதவும்
எனக்கு விரல்களில்லை.
நீ கடந்த காலத்திற்கு¡¢யவன்.
நானோ இன்றைய நிகழ்வின் நாயகன்.

துயரம் நமது இறகுகளைப்
பலப்படுத்திற்று.
கோபம் நமக்கு வலிமை
சேர்த்தது.

என்னை இழுத்துச் செல்கிறார்கள்
படிகள் -
மேலிருந்து கீழாக
ஒன்று,
இரண்டு,
மூன்று...
சீமெந்து நிலம் முடிகிறது
'அந்த' அறையைக் கடக்கிறோம்
இரத்த வெடிலும்
அவலக் குரலும்
தீயில் எ¡¢ந்த தசையும்
மூலைகளுக்குள் தோழர்களும்
சுருண்டு கிடந்த
'அந்த' அறையைக் கடக்கிறோம்.

அடுத்தது மரணம்.

சொல்லாமல் செய்வர் பொ¢யர்;
சொல்லாமல் கொல்வான் கொடியன்
என்னிடம் பெற முடியாத ரகசியங்களுக்காக
என்னைப் புதைக்கப் போகிறார்கள்.

அவர்களுக்குக் கவலைப்பட
ஒன்றுமேயில்லை
தூங்குவது
சாப்பிடுவது
சி¡¢ப்பது போல
அவர்களுக்கு மிகவும் இயல்பாய்ப்
பழகிப் போன கா¡¢யம் இது.

கொல்வது
புதைப்பது அல்லது எ¡¢ப்பது.

நல்லது;
கடவுளே நல்லது
எனக்கு விடுதலை
பாதி பிடுங்கப்பட்ட என் கண்களுக்கு
விடுதலை
துயரத்திலிருந்து அவலத்திலிருந்து
உயிர் வாழும் நம்பிக்கையிலிருந்து
பிரயோகிக்க முடியாத கோபத்திலிருந்து
எனக்கு விடுதலை.

நல்லது; கடவுளே நல்லது
நீர் அப்படியே இரும்
கைகளைக் கட்டி
புன்னகை பு¡¢ந்து
அடிக்கடி புணர்ந்து
மலர்களைச் சுமந்து
அப்படியே இரும்.

என்னைக் கொல்லப் போகும்
இயந்திரத் துவக்கின் ஒலியே
ஒலியின் எதிரொலியே
அவளுக்குச் சொல்லு
நம்பிக்கை தரும் சொற்கள்
பஞ்சாங்கத்தில் இல்லை யென்று

எப்போதாவது அவன்
திரும்பி வருவான் என்று
கிணற்றடி வைரவருக்கு
இப்போதும் செவ்விரத்தம் பூக்கள்
வைக்கிற
என் அம்மாவுக்குச் சொல்லு.

நான் இப்போது இறந்தேன்
என் குருதி உறைந்த
இம் மண்ணில் இருந்து
நாளை நான் உயிர்ப்பேன்
மூன்று நாள் என்பது அதிகபட்சம்
எனது புதைகுழியின் மீது
முதலாவது புல் முளைவிடுமுன்பு
நான் உயிர்ப்பேன்.

by Swathi   on 26 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நிலவுக்கு வந்த வெட்கம் நிலவுக்கு வந்த வெட்கம்
யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை யாரோ அரைகுறையாய் எழுதி வைத்த கவிதை
சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம் சென்னை வெள்ளம் கற்றுத்தந்த பாடம்
எப்பொழுதும் மனம் எப்பொழுதும் மனம்
கதிர் மழை கதிர் மழை
வானத்துக்கு விடியல் எப்பொழுது? வானத்துக்கு விடியல் எப்பொழுது?
அழியா நினைவுகள் அழியா நினைவுகள்
ஆற்றின் கரையோரம் ஆற்றின் கரையோரம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.