LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 1177 - கற்பியல்

Next Kural >

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
(இதுவும் அது) விழைந்து இழைந்து வேண்டி அவர்க் கண்ட கண் - விழைந்து உள்நெகிழ்ந்து விடாதே அன்று அவரைக் கண்ட கண்கள்; உழந்துழந்து உள்நீர் அறுக-இன்று இத்துயிலாது அழுங்கலாய துன்பத்தினை உழந்து தம் அகத்துள்ள நீர் அற்றே போக. (அடுக்கு இடைவிடாமைக்கண் வந்தது. அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் நின்றது)
மணக்குடவர் உரை:
அழுதலை யுழந்துழந்து உள்ளநீர் அறுவனவாக; தாம் வேண்டினவரை விரும்பி நெகிழ்ந்து கண்டகண்கள். இஃது இவ்வாறு அழுதல் தகாதென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
தேவநேயப் பாவாணர் உரை:
விழைந்து இழைந்து வேண்டி அவர்க்கண்ட கண்-அன்று விரும்பி உண்ணெகிழ்ந்து மேன்மேலுங் காதலித்து அவரைக் கண்ட கண்கள்; உழந்து உழந்து உள்நீர் அறுக-இன்று தூக்கமின்றி யழுந்துன்பத்தால் வருந்தி வருந்தி தம்மகத்துள்ள நீரெல்லாம் வற்றிப்போக! அடுக்கு இடைவிடாமை பற்றி வந்தது. சினைவினை முதல்மேல் நின்றதுபோல,அறுதலாகிய இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது.
கலைஞர் உரை:
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்.
சாலமன் பாப்பையா உரை:
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!.
Translation
Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him.
Explanation
The eyes that became tender and gazed intently on him, may they suffer so much as to dry up the fountain of their tears.
Transliteration
Uzhandhuzhan Thulneer Aruka Vizhaindhizhaindhu Venti Avarkkanta Kan

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >