|
|||||
மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி Dr.V.K.T. பாலன் அவரது மறைவுக்கு புகழஞ்சலி |
|||||
![]() புகழஞ்சலி...
மதுரா ட்ராவல்ஸ் கலைமாமணி Dr.V.K.T. பாலன் ஐயா தனது 70வது அகவையில் மறைந்த செய்தி பேரதிர்ச்சி.
குடும்பத்தைத் தாண்டி பொதுவாழ்வில் சிலர் மறைவு கண்டு இன்னும் சில ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் நன்றாக இருக்குமே. 80 வயதைக் கடந்தாவது விடைபெற்றிருக்கலாமே என்று நினைக்கத் தோன்றும் அளவு தமிழ்ச் சமூகத்தால் போற்றப்படவேண்டிய தமிழ் ஆர்வலர். இளையோரை ஊக்கப்படுத்தியவர்.
மூன்று வாரங்கள் இருக்கும், நம் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழைத்து ஐயா Dr.V.K.T. பாலன் அவர்களிடம் பேசியுள்ளீர்களா? நம் திருக்குறள் பணிகளைக் குறித்து பேசிவிட்டு நேரில் சந்திக்கலாம் என்றார். காணொளியில் கண்டிருக்கிறேன், அவரை நன்கு அறிவேன். நேரில் சந்தித்ததில்லை என்றதும் தொலைபேசியில் இணைத்தார். 30 நிமிடங்களுக்கு மேற்பட்ட உரையாடல். குறள் வழி இதழ் அறிந்து பாராட்டினார். தமிச்சமூகம் ஆவணப்படுத்துதலில் கவனம் செலுத்தாததை உணர்ந்து அந்த இடைவெளியை நிரப்புகிறீர்கள் என்று மேலும் சில ஆழமான வார்த்தைகளைக் கூறி பாராட்டினார். நேரில் சந்திப்போம் என்று பேச்சை முடித்தோம்.
இன்று அவர் இல்லை. இவரது காணொளிகள் , உரைகள் இளையோருக்கு, தொழில் முனைவோருக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கும் உண்மைகளைக் கொண்டது.
அன்னாரது ஆன்மா இறையருளின் இளைப்பாறட்டும்.. குடும்பத்திற்கு இவ்விழப்பை ஏற்றுக்கொள்ளும் வலிமையைக் கொடுக்கட்டும்.
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 16 Nov 2024 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|