LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- வித்யாசாகர்

வா வா உயிர்போகும் நேரம்.. - வித்யாசாகர்

பிரியப்போகிறோம் என்றெண்ணி
கடைசியாய்
கதறி அழுதாயே நினைவிருக்கா?

நீ அழுது கேட்ட
தொலைபேசி கூட அன்று
அவ்வளவழுதிருக்கும்..

நான் அழாமல்
அனைத்தையும் உள்ளே
அழுத்தி வைத்திருக்கிறேன்

ஒருநாள் வெடித்துவிட்டால்
உதறிவிடு நினைவுகளை
மறந்துபோ என்றால் -
மறப்பாயா?

நீ மறக்கமாட்டாய்
நினைப்பாய்
எனக்காக அழுவாய்

அதனால்தான்
உனை நினைத்திருக்கும் தருணம் குறித்தும்
மறந்திடாத வலிகுறித்தும் சொல்ல
எனது கண்ணீரை -
காயாது வைத்திருக்கிறேன்

நானழுது
நீ பார்த்ததில்லை இல்லையா..?

உண்மையில் -
நீ பார்த்திராத பொழுதத்தனையும்
நீயில்லாத  தனிமைதோறும்
நான் அழுதிருந்த பொழுதுதான்..

மனது வலிக்க வலிக்க
அழுவது தாயில்லாத பொழுதில்
சாத்தியம்போல் -
நீயில்லாதப் போதும் சாத்தியமெனக்கு..

விட்டுப் பிரிகிறேன் என்று
நீயழுதாய்
நான் - பிரிவதற்கும், நீ அழுவதற்கும்
சேர்த்து
உடைந்துபோகிறேன்..

உன்னை எப்படி மறப்பது?

மனதால் கைகோர்த்து
நடந்தவர்கள் நாம்..

உதட்டால் விலகி
உள்ளத்தால் சிரித்தவர்கள்

விட்டுவிலகியதால்
நினைவு விட்டா போகும்.. ?

நீ நடந்து எதிரே வந்தாலே
எனக்கு உடம்பெல்லாம்
தீ  பிடிக்கும்
மின்சாரம் மனசெல்லாம் பாயும்

என்னை கடந்து நீ
போகும்போதெல்லாம்
உனது  ஒவ்வொரு அடியையும்
நீ மனதுள்ளே மிதித்துச் சென்ற
தடங்களாகவே என்னுள்
பதிந்துவைத்திருக்கிறேன்..

என்றேனும் எனை
நேரில் சந்தித்தால்
என் கண்களைப்பார்
உள்ளே வலிய மறைந்துக்கொள்ளும்
கண்ணீரின் சூட்டிற்குள்
உனக்கு  வலிக்காமல் உனை வைத்திருப்பேன்..

உனக்குள்ளேயே
உயிர்த்திருப்பேன்..

உன் பெயரைச் சொல்லிச் சொல்லி
மூச்சு உள்ளேயும்
வெளியேயும் வரும்.. போகும்..

வராத நாளில்
ஊரார் அதிசயிக்கலாம்
சட்டென உயிர்
பிரியவில்லையே எனலாம்..

நீ மட்டும் புரிந்துக்கொள் - நான்
உனக்காகத் தான் காத்திருந்தேனென்று!!

 

- வித்யாசாகர்

by Swathi   on 02 Mar 2015  0 Comments
Tags: Uyirpogum Neram   உயிர்போகும் நேரம்   Vithyasagar Kavithai   வித்யாசாகர்   வித்யாசாகர் கவிதைகள்   வித்யாசாகர் காதல் கவிதைகள்   Kadhal Kavithai  
 தொடர்புடையவை-Related Articles
மகளெனும் கடல்.. வித்யாசாகர்! மகளெனும் கடல்.. வித்யாசாகர்!
மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்! மகளிடமிருந்து அப்பாக்களுக்கு.. (அப்பா கவிதை) - வித்யாசாகர்!
ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர் ஆட்டோ காரனும் அவன் தம்பி ரவியும்.. - வித்யாசாகர்
உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்! உள்ளமதை கோவிலாக்கு.. - வித்யாசாகர்!
தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர் தொட்டால் உயிர்சுடுமெனில் தொடாதே சாதியை.. - வித்யாசாகர்
ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்! ஒரு கண்ணாடி இரவில்.. - வித்யாசாகர்!
என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர் என் உயிர் பிச்சுத் தின்பவளே.. - வித்யாசாகர்
கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்.. கொடுப்பது என்பது பெறுவது என்றும் அர்த்தம்..
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.