LOGO
THIRUKKURAL SEARCH
You can search any word in English and Tamil to find the usage of that in any Kural/meaning.
For Example: "அரசன்" or "King"
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
(அல்லது)
< Previous Kural

திருக்குறள் : 726 - அமைச்சியல்

Next Kural >

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு.

Thirukkural mobile app
திருக்குறள் AUDIO
திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition):
அஞ்சாத வீரர் அல்லாத மற்றவர்க்கு வாளோடு என்ன தொடர்பு உண்டு, நுண்ணறிவுடையவரின் அவைக்கு அஞ்சுகின்றவர்க்கு நூலோடு என்ன தொடர்பு உண்டு.
பரிமேலழகர் உரை (Parimelazhagar Definition):
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என் - வன்கண்மையுடையார் அல்லார்க்கு வாளொடு என்ன இயைபு உண்டு; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலோடு என் - அது போல் நுண்ணியாரது அவையை அஞ்சுவார்க்கு நூலோடு என்ன இயைபு உண்டு? (இருந்தாரது நுண்மை அவைமேல் ஏற்றப்பட்டது. நூற்கு உரியர் அல்லர் என்பதாம்.)
மணக்குடவர் உரை:
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது.
தேவநேயப் பாவாணர் உரை:
வன்கண்ணர் அல்லார்க்கு வாளொடு என்-மற முடையாரல்லாதார்க்கு வாளோடு என்ன தொடர்புண்டு?; நுண் அவை அஞ்சுபவர்க்கு நூலொடு என்-அதுபோல, நுண்ணறிஞரவைக்கு அஞ்சுவார்க்கு நூலோடு என்ன தொடர்புண்டு? "எடுத்த மொழியினஞ் செப்பலு முரித்தே." என்று தொல்காப்பியமும் (சொல். கிளவி. 61). "ஒருமொழி யொழிதன் னினங்கொளற் குரித்தே." என்று நன்னூலும் (பொது. 7) கூறியவாறு, வாள் என்பது வில்வேல் முதலிய பிற படைக்கலங்களையுந் தழுவும். 'என்' என்னும் வினா ஈரிடத்தும் எதிர்மறை விடையை அவாவி நின்றது. நுண்ணிய அறிஞர் கூட்டம் நுண்ணவை. இதில் வந்துள்ளது எடுத்துக் காட்டுவமை. "அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியுங் கல்லார் அவையஞ்சா வாகுலச் சொல்லும்-நவையஞ்சி ஈத்துண்ணார் செல்வமும் நல்கூர்ந்தா ரின்னலமும் பூத்தலிற் பூவாமை நன்று." என்பது நீதிநெறி விளக்கம் (6)
கலைஞர் உரை:
கோழைகளுக்குக் கையில் வாள் இருந்தும் பயனில்லை; அவையில் பேசிட அஞ்சுவோர் பலநூல் கற்றும் பயனில்லை.
சாலமன் பாப்பையா உரை:
வன்கண்ணரல்லாதவர்க்கு வாளினாற் பயனென்னை? அதுபோல, நுண்ணிய அவையின்கண் அஞ்சுவார்க்கு நூலினாற் பயனென்னை? இது பிறர்க்குப் பயன்படாமையேயன்றித் தமக்கும் பயன்படாரென்றது
Translation
To those who lack the hero's eye what can the sword avail? Or science what, to those before the council keen who quail?.
Explanation
What have they to do with a sword who are not valiant, or they with learning who are afraid of an intelligent assembly ?.
Transliteration
Vaaloten Vankannar Allaarkku Nooloten Nunnavai Anju Pavarkku

திருக்குறள் ஓவியம்: ஓவிய ஆசிரியர் திரு.செ.நடராசன், நல்லூர் விஜயாபுரம்
< Previous Kural Next Kural >