LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    சங்க இலக்கியம் Print Friendly and PDF
- காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்

வாராவனப்பருவம்

338     துண்டமதி வாணுதலி லிட்டபொட் டுங்கட்டு சுட்டியும் பட்டமும்பொற் -
      சூழ்சுடர் மணித்தோடு மிளஞாயி றுதயஞ் சுரப்பவிள நகைநிலவெழக்,
கண்டன நறுங்குதலை யரமாத ரோதியங் கற்பமலர் பொற்பவீழ்த்தக் -
      கான்மல ரடித்துணை யலம்புஞ் சிலம்புகள் கலின்கலி னெனக்களிப்போ,
டண்டர்பொரு மான்முடியை யின்னமுங் காணாத வன்னமும் பன்னுமறையு -
      மடியேங்க ளுள்ளமுந் தொடரநுண் ணிடைகிடந் தசையுமே கலையொலிப்ப,
வண்டடை கிடக்குமலர் தாழ்பொழிற் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.     (1)

339    அலகில்பல புவனப் பரப்பிற்கு மருளுதவு மம்மையுயர் வொப்பிகந்த -
      வப்பனார் மேனியிற் செம்பாதி கொண்டஞான் றவர்முடிக் கழகுசெய்யு,
நிலவுபொழி மதியினும் பாதிகொண் டெனமுடியி னித்திலப் பிறையிலங்க -
      நிகரறுஞ் சீறடியி லரமாதர் முடியணி நிழற்பிறைக் காடுமொய்ப்ப,
வுலவுநின் வதனமதி கண்டவெளி யேங்கட்கு முவகையம் பாவைபொங்க -
      வுறுகளி யனங்கணடை கற்குமா தொடரவடி யொண்டளிர் பயப்பெயர்த்து,
மலர்பொலங் கேழிஞ்சி சூழிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.     (2)

340    பாயிருட் குவைபொரிய வில்லிடுஞ் செம்மணிப் பாலுமோ லிகளுரிஞ்சப் -
      பட்டுதிரு மம்பொற் பராகமும் போக்கிநுண் பட்டாடை பலவிரித்தங்,
காய்தருஞ் செந்தளி ரடுக்கிமலர் தூயினி தமைத்தமெல் லணையம்மைநின் -
      னடியா ருளத்தினுந் தண்ணென்று மெத்தென்று னடிமலர்க் கருமைசெய்யுந்,
தேய்தரு நுழைச்சிற் றிடைக்கிரங் கியதெனச் செழுமணிக் காஞ்சியலறச் -
      சீறடி பயப்பெய ரெனக்கழறல் போலொளி சிறந்தநூ புரமலம்ப,
மாயிரும் புவனம் பழிச்சிருங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.     (3)

341    நறைவா யனிச்சமு நச்சுநம் மாலரு ணலங்கிள ரிரண்டுதிருவி -
      னயமதுர வெண்மக ளிருக்குமிட மேலெனவு நளிநற வருந்திமூசிச்,
சிறைவா யளிக்குல முழக்குங் குழற்றிருச் செம்மக ளிருக்குமிடமோ -
      தேற்றமது கீழெனவு மறிவிப்ப தேய்ப்பநின் சீறடியின் மேற்சிறந்த,
பிறைவா யுகிர்க்கண் டழைத்தோங்கும் வெண்மையொளி பெருகவத் தளிர்நறுந்தாள் -
      பெயர்க்குந் தொறுங்கீ ழலத்தகச் சேயொளி பிறங்கவெங் கண்களிப்ப,
மறைவாய் முழக்கறா வாழியொண் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.     (4)

342    திணிகொண்ட கணிமலர்த் தேனருவி பம்பவளர் செம்பொன்வரை யும்பர்குழுவிற் -
      சிவனென நகங்களுட் டலைபெற் றிருந்துநின் சீறடி பெறாமையாலுட்,
பிணிகொண் டழுங்கியெவர் நண்புறக் கொண்டியாம் பெறுவ மென் றாய்ந்துமுக்கட் -
      பெருமான் றிருக்கைநண் புற்றுக் குழைந்தொளி பிறங்கிநிற் பக்குலாவு,
மணிகொண்ட திருமணப் பந்தரிற் சுந்தரத் தம்மியிற் கற்சாதியோ -
      ரறிவெனற் கேற்புறப் பரிசித்து நின்றநின் னடிமலர் பயப்பெயர்த்து,
மணிகொண்ட மாளிகை மலிந்தசெங் கோழிநகர் வாழுமா மயில்வருகவே -
      மன்னும் பெருங்கருணை யென்னுந் திருக்கோயின் மருவுநா யகிவருகவே.     (5)

வேறு.

343    திருவார் முளரி முகைகீளத் தேமாங் கனிக ளுகுத்துயர்ந்து
      செருக்கும் வருக்கைப் பழஞ்சிதறத் தென்னம் பழங்கள் விழமோதிக்
கருவார் கொண்டற் கணம்பிளிறக் கலக்கி மதியத் துடல்போழ்ந்து
      கவின்றாழ் மலர்க்கற் பகக்கோடுங் கடந்தா ழயிரா வதநால்வெண்
குருவார் கோடு முறியவண்ட கோள முகடு நாளமுறக்
      குழவுப் பகட்டு வாளைகுதி கொண்டு வெடிபோஞ் செழும்பழன
மருவார் மருதத் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.     (6)

344    பிஞ்சு மதிய முடிக்கணிந்த பெருமான் கயிலைப் பொருப்பில்வரம்
      பெறுவான் விரும்பி வணங்கியொளி பிறங்கக் கிடக்கு நெடுமால்போல்
விஞ்சு குருச்செம் மணிகுயிற்றி விண்ணத் துலவும் பனித்துண்ட
      மிலையப் புரிசெய் குன்றோங்க வெண்ணித் திலத்தின் சுதைதீற்றி
நஞ்சு பழுத்த நயனியர்வெண் ணகைமா றொருகோ சிகனியற்று
      நலங்கொ ளொளிபோ லண்டதச்ச னன்கு சமைத்த மாளிகையில்
மஞ்சு துயிலுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.     (7)

345    ஒருகா ரணன்ற னடிமுடிகண் டுயர்வான் புகுந்த துழாய்க்கேழ
      லொப்ப வவனி யகழ்ந்துமறை யோது மனம்போல் விண்போழ்ந்து
குருகார் பொய்கைத் தோணிபுரக் குரிசி லேயென் றுய்திறத்தார்
      கூறு மதற்குத் தகவடியார் கூட்டஞ் சுலவ விருந்துமிகப்
பெருகா றேற வம்பிவிடும் பிள்ளை போல விமானமுடன்
      பெருவெண் மதிய முலவமுழுப் பிறங்க லுருட்டிப் பெருக்கெடுத்து
வருகா விரிசேர் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.     (8)

346     கள்ளை யருந்தி யுவட்டெடுத்துக் கண்டந் திறந்து பாண்மிழற்றிக்
      காளைச் சுரும்ப ரடைகிடக்குங் கருந்தா ரளகக் கற்பகமே
வெள்ளை மயிற்குஞ் செம்மயிற்கு மேலாய் விளங்கும் பசுமயிலே
      மெய்யே யுணரு முளத்தின்பம் விளக்குங் கனியே மடவன்னப்
பிள்ளை நடைக்கும் வழுவுநிறீஇப் பிடியி னடக்கும் பெண்ணமுதே
      பேரா னந்தப் பெருங்கடலே பிறங்க வறங்கொண் மனைதோறும்
வள்ளை மலியுந் திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை மருந்தே வருக வருகவே.     (9)

347     என்றே புரையு மணிப்பணிபூண் டெழும்பூங் கொம்பே வருகநினைந்
      தேத்து மடியார் பிழையைமறந் தேனோர் குணமு மிகந்தவிளங்
கன்றே வருக மெய்ஞ்ஞானக் கனியே வருக வானந்தக்
      கரும்பே வருக நரிப்பகன்று கடையே னுயவாட் கொண்டகுணக்
குன்றே வருக வருள்பழுத்த கொடியே வருக முடிவின்மறைக்
      கொழுந்தே வருக செழுந்தண்மதி கூடுங் குவட்டுப் பொலங்கிரிபோன்
மன்றேர் நிலவு திருவுறந்தை வாழ்வே வருக வருகவே
      மாறாப் பவநோய் மாற்றுமலை வருந்தே வருக வருகவே.     (10)

6. வாரானைப்பருவம் முற்றிற்று.
7. அம்புலிப்பருவம்.
348     மறைமேவு மத்திரி தவத்திலோங் கும்பரவை மகிழ்வுகொண் டார்ப்பவந்து
      வாய்ப்பவள நகைநிலவு தோற்றியிர வலர்முக மலர்த்தியொண் கங்கைதாங்கி
யுறைமேவு மிந்திரவி னேர்வா னிடங்கலந் தொருபுலவ னைத்தந்துவந்
      தொண்பரிதி மறையவங் குழையொடு விளங்கிவண் டுறுபங்க யங்கள்குவிய
நிறைமேவு கலையுடைக் காந்திமதி யென்றுபெயர் நிறுவிநின் றாயாதலா
      னிகரென வறிந்தம்மை வம்மென வழைத்தனள்வெண் ணித்திலச் சங்கமெங்கு
மறைமேவு திறையூ ருறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்ட ரண்டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (1)

349     மணிகிளர் நெடும்பாற் கடற்றாயை நேயமொடு மந்தரத் தந்தை புணர
      வந்துமலை மகவெனப் பெற்றாய் விளங்குமெம் மானிடக் கண்ணாயினாய்
திணிகிளர் தரச்சிவந் தெழுமாவை யத்துவரல் செயுமாத வன்பின்வந்தாய்
      திகழ்பசுங் கதிர்தழைந் தெழுபுகலி யம்புலவர் தெள்ளமுது கொள்ளநின்றாய்
பணிகிளர் முடித்தலை பரிக்குமுல கத்தளவில பல்லுயிர்ப் பயிரளித்துப்
      பரிவினின் றாய்தெரியி னின்னுநின் பண்பம்மை பண்பினுக் கொக்குமாமிக்
கணிகிள ரறந்திக ழுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (2)

350    சேருமுய லொன்றினை வளர்ப்பைநீ பரசமய சிங்கத்தை யிவள்வளர்த்தாள்
      சிறுமானை யுடையைநீ யிவளுயிர்க் குயிராய்த் திகழ்ந்தபெரு மானையுடையாள்
சாருங் களங்கனீ யிவளெக் களங்கமுஞ் சாரா வியற்கையுடைய
      தன்மையள் பிறப்பிறப் பென்னுங் களங்கமுந் தன்னடிய ருக்கொழிப்பா
ளோருமறி வுடையவல் லுநரும்வல் லாருநீ யொவ்வாயெனத் தெரிவர்கா
      ணுளத்திது மறைத்திவ ளுனைக்கடி தழைத்திட வுஞற்றுமுன் றவமென்கொலோ
வாருமமு தப்பணை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (3)

351    மகவா யுனைப்பெற்ற பாற்கடலை யிவடந்தை மரபிலொரு வரையுழக்கி
      மகிழுநின் மனைவியரை யிவணகரி லொருசேவல் வல்லைபொறி போற் கொறிககுந்,
தகவாக நீகுடையும் வானதியை யிவடிருத் தாளொன்று மேகலக்குந் -
      தாரணியொடு நீயுமொளி வட்கிட வியற்றவிவ டங்கையொன் றேயமையுமான்,
மிகவான் மிசைத்துருவன் விடுசூத் திரப்பிணிப் புண்டுமெலி கின்றதிங்காள் -
      வேண்டுமிவ டுணைநினக் கி·தெண்ணி வருவையேன் மெய்யருள் பெற்றுய்யலா,
மகவாவி சூழ்தரு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (4)

352    ஏரணவு பாற்புணரி வடவா னலத்தொடு மியைந்துபன் னாட்பயின்றங் -
      கிமையவர் மதித்திட விடத்தொடு மெழுந்தனை யிருங்ககன முகடுசென்று,
காரணவு பாந்தளங் காந்துற விழுங்கிக் கடித்துக் குதட்டியுமிழக் -
      கறையூறு முடல்பட்டு நின்றனை யுனக்குற்ற கயமையா வுந்தெரிந்துஞ்,
சீரணவு மணிமுடிப் பல்லா யிரங்கோடி தேவர்சூழ் நிற்பநின்மேற் -
      றிருக்கடைக் கண்பார்வை செய்துவா வென்றம்மை திருவாய் மலர்ந்ததருள்கா,
ணாரணவு வாட்கண் ணுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (5)

353    நறமலி கடுக்கையணி யெம்பிரான் யோகுபுரி ஞான்றுமல ரொன்றிட்டவே -
      ணம்பியுடல் சுவைகண்ட கனலிகால் வழியெழீஇ நடுவுடல் சுடக்கறுத்த,
நிறமருவு மதுபுகல நாணிமறு வென்றுபெயர் நிறுவியிர வின்கண்வருவாய் -
      நிறைதவக் குரவற் பிழைத்துக் கொடும்பாவ நீணில நகைக்கவேற்றாய்,
மறமருவு வீரனாற் றேய்ப்புண்டு காய்ப்புண்டு மாய்ப்புண்ட நீயம்மைபால் -
      வரிலக் களங்கமும் பரவமுந் தேய்வுநொடி மாற்றிநன் குறவாழலா,
மறமகள் சிறந்தரு ளுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (6)

354    ஒளிபாய் நிறத்திருச் சேடியர்க ளாலய மொருங்கடைப் பதுவுமெம்மா -
      னுறுசடைக் கங்கையொ டுறைந்ததுவு மெண்ணினிவ ளுனைவா வெனத்தகாதாற்,
களிபாய் மனத்தோ டழைத்துநின் றதுபெருங் கருணையென மன்றவுணராய் -
      கதிரவப் பகைவரவு கண்டிவ ணகர்ச்சேவல் காட்டுமுப காரமுணராய்,
வளிபாய் விசும்பலையு மெய்ப்பாற விவணகர் மலர்ச்சோலை புரிவதுணராய் -
      மதிக்கடவு ளென்றுபெயர் வறிதுகொண் டாய்நறவு வழியூற் றெழுந்துபாய,
வளிபாய் கருங்குழ லுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (7)

355     காயப் பரப்பிலுனை விக்கிட விழுங்குங் கடுங்கொடிய தீயவரவங்
      கருணைப் பிராட்டிபெறு குழகன்மயில் காணூஉக் கலங்கியிவண் வரவஞ்சிடு
நேயத் துடன்குலவி யொருகுஞ் சரத்தோன்ற னெடிதிடுந் தன்சாபமு
      நீக்கிக் களங்கமும் போக்கித் துளங்குமா நெடியாது செய்வன்மெய்யே
பாயப் பிருஞ்சடைத் தம்பிரான் றரணியொடு பாரித்த வாழியாக்கிப்
      படருநின் வட்டவுட றேயா தளிக்குமிவள் பாததா மரையடைந்தா
லாயத் துடன்குல வுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே -
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.     (8)

356     நெடியவனு நெடியநான் முடியவனு மிந்திரனு நிமிரிவர் முதற்பல்சுரரு
      நிலவாக ம்த்தின்வழி பூசித்து நேசித்து நிறைபேறு பெற்றுயர்ந்த
வடிவுடைய விப்பெருந் தலமான் மியம்பேசின் மாசிலார் நச்சுவிச்சு
      வப்பிரா னூறைகின்ற காசிக்கும் வாசியென வாசிக்கு மறைகள்கண்டாய்
தடியுடை முகிற்குலம் பயில்வா னொரீஇயம்மை சன்னிதா னத்துவந்து
      தாழ்ந்துபின் சூழ்ந்துவினை போழ்ந்துமிக வாழ்ந்துநீ தண்ணளிக் குரிமை பெறலா
மடயவருளம்புகு முறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.
    (9)

357     பாணித்து நீநிற்ப தறியா ளறிந்திடிற் பாட்டளிக் கூட்டம்வீழப்
      பாயுங் கடாங்கவிழ்க் குங்கவுட் குஞ்சரப் பகவனை விடுப்பளவனோ
வாணித் திலஞ்சிதற நினையொருகை பற்றிநால் வாய்க்கவள மாக்கிவிடுமால்
      மற்றிளவ லுக்குரை செயிற்கொடிய வேல்விடுவன் வல்லையோ வதுதாங்கநீ
நாணித் திரிந்துழல வுன்னைமுன் றேய்த்தவலி நந்துதாள் வீரனுமுள
      னாடியிவை முழுதுமா ராய்ந்துவரி னுய்குவை நலம்பெறுவை யாதலாலோங்
காணிப்பொன் மாளிகை யுறந்தைப் பிராட்டியுட னம்புலீ யாடவாவே
      யண்டரண் டங்களு மகண்டமுங் கண்டவளொ டம்புலீ யாடவாவே.
    (10)

by Swathi   on 21 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ் நல்வழி 24 நீறில்லா நெற்றிபாழ்
கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது கண்ணனை பல்வேறு நிலைகளில் நிறுத்தி பாரதி பாடியுள்ளது
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த  வைதேகி ஹெர்பெர்ட் சங்க இலக்கிய நூல்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த வைதேகி ஹெர்பெர்ட்
சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது? சங்க இலக்கிய விழுமியங்கள் நிகழ்வு:1 கல்வியின் சிறப்பு பற்றி புறநாநூறு என்ன சொல்கிறது?
ஏலாதி -மருத்துவ நூல் ஏலாதி -மருத்துவ நூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.