LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    தமிழிசை Print Friendly and PDF
- தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles

வாழ்க தமிழ்! வளர்க தமிழிசை!! பண்டிதர் போழக்குடி கணேச அய்யர்

சிவந்த நிறம், சிந்தை கவரும் முகம், நெற்றித்திருநீரு, நிறைந்த குங்குமப்பொட்டு, வெள்ளைநிற வேஷ்டி-ய்ட்டை, மூடு பொத்தானில்லாத முழுகை சட்டை, கையிலே பாட்டு நோட்டும், கத்தை யாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் ஸ்வரக் குறிப்பு தாள்கள் அடங்கிய தோல்பையுமாக - தோற்றப் பொலிவுடன் எங்கள் இல்லத்துக்கு வருகை தருவார் ஒரு வள்ளல் பெருமகனார்.  போழக்குடி கணேச அய்யர் என்பது அப்பெருமகனாரின் திருப்பெயர். பார்வைக்கு எளிமையானவர், பழகுதற்கு இனிமையானவர், இசை பயிலும்,

இளஞ்சிறார்க்கெல்லாம், இன்முகத்தோடு பழகும் தமிழில் பாட்டு-வகுப்பு எடுக்கும் பண்பாளர், ஆர்வம் இருந்தால் போதும் எந்த வயதுக்காரருக்கும் இவர் பாட்டெடுப் பார்.  அப்படித்தான் நான்கூட சில கீர்த்தனைகளைக் கற்றுக் கொண்டேன். போழக்குடியாரின் இசைப்பாரம் பரியத்தையும் அவர்தம் புகழையும் வளர்த்துவரும் ஆத்மநேயராம் இன்னிசை ஏந்தல் திருமிகு. ஆத்மநாபன் அவர்கள் தமது ஆதவனுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து ‘நினைவஞ்சலி’ செய்து வருவது நெஞ்சை நெகிழச் ழய்ய்கிறது.  ஆதிமனிதன், காடுமேடுகளில் அலைந்து திரிந்து, ஆகாரத்துக்காக, காய்கனிகளைப் பறித்து உண்டு பசியாறி உடல் வளர்த்த காலம் தொடங்கி இன்றளவும் மனிதகுல வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் இயங்கியலாய் இசைந்து வருவது இசை.  ஐம்புலன்களும் பெற்ற அனுபவங்களை, ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ளவும், பிறகு கூடிவாழும் குழுவினருக்கு அவற்றைக் கொண்டு«ய்ர்த்து கூட்டு வாழ்க்கைமுறைக்கு சமூகத்தை முன்னெடுத்துச் செய்வதற்குமான ‘மனஒருமைப்பாட்டினை’ உருவாக்க இசை எனும் எழுச்சி காலகாலமாக மனித குலத்துக்கு வாய்த்திட்ட பெருங்கொடை யாகும்.  எனவேதான், அரிதற்கும் அரிதான மனித வாழ்வில், வாழ்க்கையில், பெறுதற்குப் பெரிதானது இசைப்பயனாகும்.  அத்தகு, இசையும் இசைப்பயனுமாய் வாழ்ந்து நிறைந்தவர் எங்கள் போழக்குடி வேந்தன்!

சின்னஞ்சிறுவயது எனக்கு. இசை- பாட்டு - ராகம் இவையெல்லாம் என்னவென்றே தெரியாத அறியாப் பருவம் அது. ஆனால் அயந்தாறு (வயதிலெல்லாம்) வயதிலேயே எங்கள் கிராமத்துக் கல்யாணங்கள் மற்றும் திருவிழாவுக்கு வந்த ‘போழக்குடி வழங்கிய பாடல்கள் மனதில் பதியத் தொடங்கிவிட்டன.  மார்கழி மாதம் காலைப்பொழுதில் பாடும் பக்திப் பாடல்கள் நெஞ்சில் நிலைத்துவிடும். முதலில் நான் பாடிய முழு பாடல் நினைவில் இல்லை.

ஆனால் ‘கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன். இந்த கவிதை பாடல் நன்றாக நினைவில் நிற்கின்றது.  அந்த வயதிலிருந்து அட்சரம் பிசகாமல் அப்படியே கேட்ட பாடல்களையெல்லாம் பாடி மகிழும் பேறு கிட்டியது.  வெகுளியான மனம்.  எந்த இடத்தில் எந்தப் பாட்டைப் பாடுவது என்பதெல்லாம் அந்த வெகுளிக்குப் புரியாது. எங்க ஊர் ஆரம்பப் பள்ளிக் கட்டடம் கட்டி முடித்து, திறப்புவிழா நடைபெற்றது.  அய்ந்தாம் வகுப்பு பையன் அவன் அன்று பாடிய பாட்டு, ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே! அதுவும் அப்படியே ராகமெல்லாம் போட்டு!

காலம் வளர்ந்து வந்தது உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு ஆண்டு இறுதியில் நடந்த பாட்டுப் போட்டியில் ‘அமுதைப் பொழியும் நிலவே’ பாடி முதல் பரிசு பெற்றதிலிருந்து, அடுத்து வந்த அத்தனை ஆண்டுகளிலும், கீழ்ப்படிவங்களுக்கான மற்றும் மேல் படிவங்களுக்கான முதல் பரிசும் அவனுக்குத்தான்.

திருச்சி கல்லூரியிலும் பாடல் பாடல் பாடல்கள்! பூண்டி புஷ்பம் கல்லூரியில் படித்தபோது மாவட்ட கல்லூரிகளுக் கிடையிலான பாட்டுப் போட்டியில், மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்.. என்ற சீர்காழி அண்ணனின் கணீர் குரலுடன் தொடங்கும் ‘கர்ணன்’ படப்பாடல் கள். கர்நாடக இசை தழுவிய உன்னதப் பாடல்கள் என நூற்றுக் கணக்கான பாடல்கள் இசையும் இசைப்பயனுமாக இதயத்தில் குடிகொண்டன. ஆனாலும் இன்றளவும் ஒரு ஏக்கம்.  முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள முடியாமல் போனதே என்ற அந்த ஒரே ஏக்கம்! 

நிழலின் அருமை வெய்யிலில் தானே தெரியும்; நீரின் அருமை தாகத்தில்தானே புரியும்.  ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. ஆயினும் அந்தத் தகிப்பும் தாகமும் இன்றளவும் தணியவில்லை.  அரசுப்பணியில் பல்வேறு பொறுப்புக்களில் பணியாற்றி வந்த போதிலும், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் சங்கீத வித்வான்கள் விற்பன்னர்களுடன் கலந்துரையா டுதல் பேரின்பமானது.  எளியேன் தஞ்சை மாவட்ட ஆட்சியராக இருந்த காலக் கட்டத்தில். சுற்றுலா மாளிகையில் அமைச்சர் அவர்களைச் சந்தித்துவிட்டு காரில் வெளியே வந்தபோது முனியாண்டவர் கோவில் விழா மேடையில் ஒரு இளைஞனின் கச்சேரி நடைபெற்று வந்ததைக் கண்டவுடன், பக்கவாட் டில் காரை நிறுத்தச் சொல்லி அவர் பாடிய இரண்டு பாடல்களைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றேன்.

இளைய வித்வான், வாட்ட வட்டமான உடற்கட்டும், சபைக்கு மெருகூட்டிய முகப்பொலிவும் கொண்ட பாகவதராக - கச்«ய்ரி களைகட்டியது.  கேட்டஇரண்டாவது பாடல் முடிவுற்றவுடன், மேடைக்கருகே சென்று பாடகரை வாழ்த்திவிட்டு முறைப்படி ‘கலெக்டர்’ பங்களாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துவிட்டு புறப்பட்டேன். 

அடுத்த இரண்டு நாள் கழித்து, அந்த மாலைப் பொழுதில் ஒரு சிவனடியாருடன் அந்த இளைஞர் பங்களாவுக்கு வந்தார். ஞானப் பொலிவோடு பண்பின் இலக்கணமாய்த் திகழ்ந்த அந்தப் பெரியவர்தான் போழக்குடியார்.  உடன் வந்த அந்த இளைஞன்தான் போழக்குடி யாரின் ஆத்மார்த்த சிஷ்யன் நம்ம பாகவதர் ஆத்மநாபன்!

“நல்லாரைக் காண்பதுவும் நன்றே - நலமிக்க

நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்

குணங்களுரைப்பதுவு நன்றே யவரோ

டிணங்கியிருப்பதுவு நன்றுறே    

அவ்வை மூதாட்டியார் அருளிய இவ்=வாக்குண்டாம் அமுத வரிகளே.  போழக்குடியாரின் புகழுக்குரிய எழிலார்ந்த வாழ்க்கைக்கு அணிகலனாக விளங்குகின்றன.  தஞ்சையில் எளியேன் பணியாற்றிய காலத்தில், வாரத்திற்கு இரண்டு நாட்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை தந்து, மகள் கவிதாவுக்கு பாட்டு சொல்லித் தருவார்.  தியாகையர் மற்றும் பாபநாசம் சிவம் அவர்களின் கீர்த்தனைகள் சொல்லித் தருவார்.  அவ்வப்போது சில கிருஷ்ணதரங்கிணி பாடல்களும் பரவசமளிக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது நானும் பாட்டு வகுப்பில் சேர்ந்து கொள்வேன்.  இல்லத்தில் இசைமழை பொழியும்: பக்கத்தில் உட்கார்ந்து கேட்டு மகிழ்ந்து இசைப் பொழிவில் திளைத்திருப் பேன்.  எனக்கும் தனியாக சில கீர்த்தனை களை மனமகிழ்ந்து சொல்லித் தருவார்.  இன்று நினைத்தாலும், அந்த நாட்கள் நெஞ்சில் பசுமை கட்டி பரவசப்படுத்து கின்றது.

போழக்குடியார் எங்கள் குடும்பத்தின் மீது மிகவும் அன்பு பாராட்டி வந்தார். சென்னைக்கு வரும்போதெல்லாம் அவரை வீட்டுக்கு அழைத்து நாங்களும் அன்பு செய்து அகங்குளிர்ந்தோம். கலைமாமணி விருதுபெற்ற அன்றைய தினம் அவரது வாழ்க்கையில் ஒரு பொன்னாள்.  காலம் கடந்து வரப்பெற்ற போதிலும், கலைமாமணி விருது அவரது ஏக்கத்தைப் போக்கியது என்பதை நாம் அறிவோம். ஒருமுறை அவர்கள் எங்கள் இல்லத்திற்கு வந்திருந்தபோது, இசைஞானி இளையராஜா அவர்களை போழக்குடியார் சந்தித்துப் பேய் ஏற்பாடு செய்து, நாங்கள் இருவரும் பிரசாத் ஸ்டுடியோவில் ராஜா அவர்களைச் சந்தித்தோம்.  அவரது ‘தியான’ தனி அறையில் நாங்கள் மூவரும் உரையாடி மகிழ்ந்தோம்.  முதுபெரும் இசைவாணரும் இசைஞானியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்ட உன்னதமான உணர்வுகளையும் உரையாடலில் இழையோடிய மென்மையான சங்கீத அதிர்வலைகளையும் உடனிருந்து அனுபவித்து உள்ளோம் நெகிழ்ந் தேன்.

போழக்குடியாரின் பெயருக் கும் புகழுக்கும் அவரிடம் பாட்டுக் கல்வி பயின்ற நூற்றுக்கணக்கான மாணவ-மாணவியர் இன்றளவும் அவர் மீது பக்திகொண்டு பாசமழை பொழிந்துவருவதை நான் அறிவேன்.  அவரது மாணவர்களில், முழுமையான பக்தியும் பாசமும் கொண்டவராக, தனது ஆசிரியருக்கு ஆண்டுதோறும் நினைவஞ்சலி ழய்ய்யுமுகத்தான் விழாவெடுத்து, இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து சிறப்பு மலரும்  இந்த ஆண்டு வெளிக்கொண்டு வரும் அன்புடைய ஆத்மநேயர் திருபுவனம் ஆத்மநாபன் அவர்களின் திருவுள்ளம் பேறுபெற்றதாகும். குரலிலே கம்பீரம், குணத்திலே மாசறு பொன், நடைஉடை பாவனையில் ராஜபார்ட் கண்முன்னே!  அவரது மேடைக் கச்சேரிகள் அனைத்துமே களை கட்டி நிற்கும். அதிலும் தமிழிசைப் பாக்களை அவர் இசைத் தணிக்கும் பாங்கு. காதினிலே தேன் பாய்ச்சும் சுவையான அனுபவமாகும்.  வள்ளலார் பாடல்களை அவர் பாடிக் கேட்க, நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  இசையாசிரியரா யிருந்து இந்த மாணவன் எனக்கும் சில பாடல்கள் சொல்லித் தந்திருக்கின்றார்கள்.  வாழ்க அவர் இசைத்தொண்டு! மென்மேலும் வளர்க அவர் புகழ் கொண்டு!

போழக்குடியார் அவர்தம் புகழுக்குப் புகழ் சேர்த்து வரும் சங்கீத சாகரத்திற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக!  புகழ்மிகு இப்பணியில் பங்குபெறும் அனைத்து நல்லிதயங்களுக்கும் நன்றி உரித்தாகுக!

by Swathi   on 28 Jan 2016  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா தமிழ் இசைக் கடலின் அமுதான தமிழிசை விழா
தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது. தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில்  தமிழிசை பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது.
எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம் எழில்மிகு பெருவங்கியம் என்கிற நாகசுரம்
முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக “மார்கழி இணைய இசைத்திருவிழா” - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
புதிய வரலாறு படைத்த     முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
புதிய வரலாறு படைத்த     முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019 புதிய வரலாறு படைத்த முதலாவது உலகத் தமிழிசை மாநாடு - 2019
முதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது. முதன்முதலாக மார்கழி இணைய இசைத்திருவிழா - வலைத்தமிழ் தமிழிசை கல்விக்கழகம் தொடங்கியது.
அமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்காவின் முக்கியப்பொறுப்பான அமெரிக்க தேசிய அறிவியல் நிதியத்தின் தலைவராக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட சேதுராமன் பஞ்சநாதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.