LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- குழம்பு (Curry)

வடை குழம்பு(Vadai curry)

தேவையானவை :


மசால் வடை - 10 

வெங்காயம் - .75கிராம் (பொடித்தது)

பச்சை மிளகாய் - 2  (பொடித்தது)

தேங்காய் துருவியது - 5 டீஸ்பூன் 

சோம்பு - 1 /2 டீஸ்பூன் 

முந்திரி - 5 

இஞ்சி. - சிறு துண்டு 

எண்ணெய் - 2 டீஸ்பூன்

மிளகாய் பொடி  - 1 1/2 டீஸ்பூன் 

மல்லி பொடி  - 2 டீஸ்பூன்

மஞ்சள் பொடி - கொஞ்சம்

உப்பு  - தேவையான அளவு 

கறிவேப்பிலை, மல்லி - 1 டீஸ்பூன்

கிராம்பு - 2 

மிளகு - 1 /4 டீஸ்பூன் 



வடை செய்முறை:


1.அரை கப் கடலைப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். ஊறியதும் நீரை வடித்துவிட்டு, ஒரு டீஸ்பூன் பருப்பை எடுத்து வைத்துவிட்டு மீதியை மிக்சியில் போட்டு உப்பும் கலந்து கரகரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன், எடுத்த பருப்பு, கைப்பிடியளவு நறுக்கிய வெங்காயம், நறுக்கிய இஞ்சி கொஞ்சம், கறிவேப்பிலை போட்டு, நீர் விடாமல் கெட்டியாகப் பிசையவும். இதனை எலுமிச்சை அளவு உருண்டையாக உருட்டவும்.


2.அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பருப்பு உருண்டையை வடையாக தட்டி,எண்ணெயில் போடவும். மேல் பக்கம் சிவந்ததும், அதனைத் திருப்பி போடவும். இருபுறமும் சிவந்ததும் அரிகரண்டியால் எண்ணெய் இல்லாமல் வடித்து கொள்ளவும்.


செய்முறை:


1.ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் சோம்பு,முந்திரி ஆகியவற்றை  வறுத்து, அத்துடன் தேங்காயையும் போட்டு நன்கு வறுத்து, இஞ்சி சேர்த்து நைசாக அரைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், அதில் கிராம்பு, மிளகு போட்டு பொரியவிட்டு, அதிலேயே வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.


2.வெங்காயம் நான்கு வதங்கியதும், அதில் மிளகாய்,மல்லி,மஞ்சள் பொடி போட்டு வதக்கவும். பின் அதிலேயே அரைத்த தேங்காய,உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின், 3 டம்ளர் நீர் ஊற்றவும். குழம்பு நன்கு கொதித்ததும், அதில் மசால் வடைகளைப் போடவும்.குழம்பு போதுமான அளவு கெட்டியானதும், மல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

Vadai Curry

Ingredients for Vadai Curry:

 

Masal Vadai-10

Onion-75 g (Chopped)

Grated Coconut-5 tsp

Fennel-1/2 tsp

Cashew Nuts-5

Ginger-Small Piece

Oil-2 tsp

Chilly Powder-1 1/2 tsp

Coriander Powder-2 tsp

Turmeric Powder-Little

Salt-as Needed

Curry Leaves, Coriander Leaves- 1 tsp

Cloves-2

Pepper-1/4 tsp

 

Procedure to make Vadai:

 

1. Soak the 1/2 cup of channa dhal for 2 minutes. Drain well, take and keep aside the 1 tea spoon of dhal. Grind the remaining dhal along with salt to a coarse paste. Mix the grinded dhal along with 1/2 spoon of dhal, chopped onion, chopped ginger, curry leaves and make small balls.

2. Heat oil in a pan, take the small balls and flatten them and drop them in oil. Deep fry the vadai till it turns golden color and remove from flame.

 

Procedure to make Vadai Curry:

 

1. Heat a pan, add fennel, cashew nuts and fry them and then add grated coconut and fry for a while and grind them finely. Heat oil in a pan, add cloves, pepper and let to splutter and then add onion, green chilly and saute well.

2. Then add chilly powder, turmeric powder and saute well. Then add grinded coconut, salt and fry for a while and then add 3 cup of water. When boiled well, add prepared vadai in to curry. Finally garnish with coriander and curry leaves and remove from flame.

 

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.