வடவரையை மத்தாக்கி - சிலப்பதிகாரப்பாடல்
இந்த சிலப்பதிகாரப் பாடல் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியால் பாடப்பெற்று பிரபலமடைந்த பாடல். 1966 இல் ஐ.நா சபையில் நடந்த எம்.எஸ் கச்சேரியில் இந்த பாடல் இடம் பெற்றது. பாடல் வரிகளும் பொருளும்: 1. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்: வடமலையாம் மேருவை மத்தாக்கி, வாசுகி என்னும் பாம்பினை கயிறாகவும் கொண்டு அன்று கடலை கடைந்தவன், இன்று யசோதையின் சிறு கயிற்றால் கட்டப்பட்டுக் கிடக்கிறாயே, என்ன விந்தை!
2. அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்: அமரரும் உன்னை தொழுது பசி போக்கிக் கொள்ள, நீயோ வெண்ணைதனை களவு செய்து உண்டாயே!. அவ்வாறு உண்ட வாய்தனில் வெண்ணை, கரும் துளசியாய் மாறியதென்ன மாயமோ?
3. திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
பொருள்: அமரர் தொழும் திருமால் உன் செங்கமல பாதத்தின் இரண்டடியால் இருள் முடிய இப்பூவுலகை அளந்தாயே! அதே பூவுலகில் பாண்டவர்க்கு, மடல் கொடுக்கும் தூதனாகவும் இருந்தது விந்தைதானே!
4. மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே
பொருள்: மூவுலகை இரண்டடியால் நடந்தது குறைவென்று, நிறை செய்ய, தம்பியோடு வனம் வழி நடந்தாயே! உன் சேவகன் அனுமன் சீர் கேளாத செவியும் செவியோ? திருமால் உன் சீர் கேளாத செவியும் செவியோ?
5. பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே
பொருள்: பெரியவன் பலராமன், மாயவன் கண்ணன் இருவரையும் உலகம் முழுதும் பார்க்க, திருமால் உன் திருவடியும், கையும், திருவாயும் வேலை செய்ய, கரியவன் கண்ணனைக் காணாத கண்ணும் கண்ணோ? மெய்மறந்து காணாத கண்ணும் கண்ணோ?

|