LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வகுப்பறை உருவாக்கும் சமூகம்

வகுப்பறை உருவாக்கும் சமூகம் -3 : நினைப்பதும்-நடப்பதும்

திருமதி. சசிகலா உதயகுமார், பள்ளி ஆசிரியை 
சன்னதி நிதி உதவி ஆரம்பப்பள்ளி, 
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், 
"இது எங்கள் வகுப்பறை" - நூலாசிரியர்.

கல்வி பற்றிய புரிதலின் முதல் கட்டம் கல்வி என்பது எத்தகையது என்பதை சற்று உள்ளார்ந்து நோக்குதல் தான்.  "கல்வி" educational system என்றெல்லாம் மேலோட்டமாக இதை ஒரு சொல்லாடலாக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அதன் உள்ளார்ந்த பொருளைத் தெரிந்து கொள்வதற்கு கொஞ்சம் ஆழ்ந்து பயணிக்கவேண்டியுள்ளது.

கல்வி என்னும் ஒரு முழுச் செயல்பாடு இரு செயல் வடிவங்களைக் கொண்டது. அவை "கற்றுக்கொடுத்தல் - கற்றுக்கொள்ளுதல்" . இந்தப் பரிமாற்றம் நடைபெறும் இடம் வகுப்பறை. 

இந்தச் செயல்வடிங்கள் இரண்டும் சரி விகிதத்தில் கலப்பதன் மூலம் வெளிவருவது தான் சரியான முழுமையான கல்வி. அந்தப் பொறுப்பு ஆசிரியர் மாணவர்கள் இருவருக்கும் உண்டு என்றாலும் இங்கே ஆசிரியரின் பங்கு 80% சரியாக இருக்கும் பட்சத்தில் மாணவரின் 20% தானாக வந்து சேர்ந்துவிடும்.  இது சற்று சூட்சுமமான இடம். இங்கே ஏற்படும் சிறு பிழை அந்த மாணவனின் ஒட்டுமொத்த புரிதலையும் வாழ்க்கையையும் மாற்றிவிடும்.  எனவே "கற்பித்தல்" என்னும் செயல்வடிவமே "கற்றல்" என்னும் இன்னொரு வடிவத்தை இயக்குகிறது.

"Learning is a treasure that will follow its owner everywhere." என்றொரு சீனப் பழமொழி உண்டு.

"கற்றுக்கொள்ளுதல் என்னும் விலைமதிப்பில்லாப் பொருள்,  தன் எசமானன் எங்கு சென்றாலும் பின் தொடர்ந்தபடியே இருக்கும் "


கற்றல் என்பது கற்பித்தலில் இருந்து தொடங்குகிறது,
அதேபோல் கற்பித்தல் என்பதும் கற்றலின் வழியே நிகழ்கிறது. இப்படியான ஒரு சுழற்சியை நாம் புரிந்துகொள்ளும்போது தான் வகுப்பறை என்பது ஒரு உன்னத இடமாக மாறும்.

நம்மில் பலருக்கும் தெரிந்த பௌத்த கதை ஒன்று: தன் இறுதிக்காலத்தை நெருங்கிக் கொண்டிருந்த பௌத்த குரு , அவரின் சிஷ்யர்களில் மிகமிக இளமையான புத்த பிட்சு ஒருவரை அந்த மடாலயத்தின் அடுத்த குருவாக நியமிக்கிறார்.

"நேற்று வந்தவனுக்கு வாழ்வைப் பார்" என்று அங்கிருக்கும் மூத்த பிட்சுகள் முணுமுணுக்க ஆரம்பித்தனர். குரு தவறான முடிவை எடுத்துவிட்டார் என்று பேச ஆரம்பித்தனர்.

அடுத்த சில வாரங்களில் இந்த இளம் புது பௌத்த குருவின் தலைமையில்  குழுவாகக் கிளம்பி பக்கத்து நாட்டிற்கு சென்றனர். அந்தக் காலத்தில் நடைதான் வாகனம். செல்லும் வழியில் ஊர் ஊராகப் பிரசங்கித்துக் கொண்டே செல்வது புத்த பிட்சுகளின் வழக்கம்

அவ்வாறு நடந்து சென்று கொண்டிருந்தபோது  குறுக்கே ஒரு ஆற்றை நீந்திக் கடக்க வேண்டிய சூழல். எல்லோரும் தயாராக இறங்க ஆரம்பிக்கும்போது அங்கே ஒரு அழகிய இளம் பெண் வருகிறாள். வந்தவள் இந்தத் துறவிகளிடம் "ஐயா வழக்கமாக நடந்து கடக்கும் அளவுதான் இதில் நீர் இருக்கும், இன்றோ காட்டாற்று வெள்ளமாகக் கரை புரண்டு ஓடுகிறது, தயவு செய்து என்னை இந்த ஆற்றைக் கடக்க உதவுங்கள்" என்று கெஞ்சுகிறாள்.

இவர்களோ துறவிகள்.  எல்லோரும் தயங்கி நிற்கும்போது புதிதாக தலைமை குருவாக நியமிக்கப்பட்ட இளம் துறவி அவளிடம் "என் தோள்களில் ஏறி அமர்ந்துகொள்" என்கிறார். அவளும் அப்படியே செய்ய, அவளைச் சுமந்தபடி ஆற்றை நீந்திக் கடந்து மறு கரையில் இறக்கி விடுகிறார்.  "நன்றி ஐயா" என்று வணங்கிவிட்டு அவள் சென்று விடுகிறாள்.

"ஒரு பௌத்த குரு எப்படி  பெண்ணைத் தொடலாம்" என்று உடன் வந்த மற்ற துறவிகளுக்கோ பெரும் அதிர்ச்சி. ஆனால் கேட்பதற்குத் தயக்கம். இப்படியெ இரண்டு நாட்கள் நடை தொடருகிறது.

மூன்றாம் நாள் இரவில் எல்லாத் துறவிகளும் கூடிப் பேசி "நாளை இதை குருவிடம் கேட்டுவிட வேண்டும்" என்ற முடிவுக்கு வருகின்றனர். மறுநாள் காலை வழக்கமாக நீராடி, தியானித்து முடித்துக் கிளம்ப ஆரம்பிக்கும்போது, அந்தக் குழுவில் இருந்த மூத்த துறவி  "குருவே  அன்று அந்தப் பெண்ணை உங்கள் தோளில் சுமந்து ஆற்றைக் கடந்தீர்கள், ஒரு புத்த குரு பெண்ணைத் தொடலாமா? இது நம் மத சட்டத்திற்கு எதிரானதல்லவா?" என்று கேட்கிறார்.

அந்த இளம் பௌத்த துறவி மென்மையான புன்னகையுடன் "நான் அவளை அந்தக் கரையிலேயே இறக்கிவிட்டு வந்துவிட்டேன். நீங்கள் ஏன் மூன்று நாட்களாக அவளைச் சுமந்து கொண்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டாராம்.

அவர்களின் முந்தைய குரு ஏன் இந்த இளம் துறவியை குருவாக நியமித்தார் என்பதை அப்போதுதான் மற்ற துறவிகள் உணரத் தொடங்கினர்.

"மனத்தூய்மை மற்றும் - எப்போதும் நல்ல சிந்தனைகளைச் சுமத்தல்" என்னும் நல்லொழுக்கத்திற்காகச் சொல்லப்படும் இந்தக் கதை "கல்வி" என்பது என்ன என்பதையும் மிக ஆழமாகச் சொல்கிறதை நாம் காணலாம்.

அதே குரு தான் எல்லோரையும் பலகாலமாக வழிநடத்திக் கற்பித்தார். ஆனால் அவர்களில் இந்த ஒரு இளம் துறவியை மட்டுமே குருவாகத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்ன? கற்றுக்கொள்ளுதல் - கற்பித்தல் என்பதன் மெல்லிய சூட்சுமன் இதுதான். எதை விடுத்து எதைப் பெற்று எதைக் கொடுப்பது என்பது கற்பித்தலுக்கும் கற்றலுக்கும் தேவையான பொதுகுணம்.

அப்படியான சுமுக சூழல்தான் இங்கே நம் சமூகத்தின் வகுப்பறைகளில் நிகழ்கிறதா? பாடங்களை மட்டுமல்ல அன்றைய சமூக நிகழ்வுகளை ஒவ்வொரு நாளும்  கற்றுக்கொண்டுதான் ஆசிரியர் கற்பிக்கிறாரா? எல்லா மாணவர்களையும் அறிவின்படி ஏற்றத்தாழ்வில்லாமல் நடத்துகிறாரா? இதற்கான விடை "பெரும்பாலான இடங்களில் அப்படி இல்லை" என்பது தான்.  நிதர்சனம் சில சமயங்களில் வலிமிக்கதாகவே இருக்கிறது. இன்றும் சில பள்ளிகளில் ஏற்றத்தாழ்வுடன் தான் மாணவர்கள் நடத்தப்படுகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. சாதியின் அடிப்படையில், சமூக மரியாதையின் அடிப்படையில் இன்றும் மாணவர்களை ஆசிரியர்கள் நடத்துகிறார்கள் என்பது வேதனை மிக்க ஒன்று. 

 "இப்போவெல்லாம் அப்படி யார் பார்க்கிறார்கள்?" என்று இதைப் படிக்கும் வாசகர்கள் யோசிக்கலாம். கற்றல் கற்பித்தல் என்பதற்கும் இந்தப் பாகுபாடுகளுக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் எண்ணலாம். நிச்சயம் சம்பந்தம் உண்டு.

ஒரு நல்ல குருவின் தன்மை என்ன தெரியுமா?  பார்வை பரந்துபட்டும் சமமாகவும் இருக்கவேண்டும். நான் முதலில் குறிப்பிட்ட பௌத்த கதையில், இறந்த அந்த குருவின் பார்வையை சற்று சிந்தியுங்கள். ஆசிரியரின் சமத்துவமான மாச்சர்யமற்ற பார்வையும் ஒப்பில்லாத அன்பும்தான் வகுப்பறை என்பதன் அடித்தளமே.  அந்த அடித்தளத்தில் கட்டப்பட்ட அறையில் இருந்துதான் அந்த சமூகத்தின் சாளரம் திறக்கப்படுகிறது. ஆசிரியர் என்பவரின் பங்களிப்பு இதிலிருந்து தான் தொடங்குகிறது. ஆசிரியர்கள் மட்டும்தானா ?


மாணவர்களின் பங்கு என்ன?

 
---- தொடரும்

by Swathi   on 18 Apr 2018  4 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
14-Jun-2018 10:05:58 துரை பாண்டியன் said : Report Abuse
கட்டுரை சிறப்பு. கல்வி இன்றுவியாபாரிகள் கையில்.அரசு கொள்கை முடிவாக அரசுடைமை என்று சொல்லும் போது மட்டுமே கல்வி .சுகந்திரம் அதுவரை விடுதலை?
 
30-Apr-2018 12:16:58 சுரேஸ் பாபு said : Report Abuse
அருமையாக உள்ளது பதிவு
 
21-Apr-2018 08:37:51 இராமமூர்த்தி நாகராஜன் said : Report Abuse
அருமையான கருத்துகள். கதையுடன் விளக்கி இருப்பது மிகச்சிறப்பு! வாழ்த்துகள் சகோதரி!
 
19-Apr-2018 02:36:00 பழனியாண்டி கனகராஜா said : Report Abuse
காத்திரமான கருத்து அற்புதமான பதிவு நன்றாக கதை மூலம் விளக்கியிருக்கிறார்கள் மகிழ்ச்சி இன்னுமின்னும் எதிர்ப்பார்க்கிறேன்...............
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.