LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வகுப்பறை உருவாக்கும் சமூகம்

வகுப்பறை உருவாக்கும் சமூகம் -4 : மாணவன் யார்?

திருமதி. சசிகலா உதயகுமார், பள்ளி ஆசிரியை 
சன்னதி நிதி உதவி ஆரம்பப்பள்ளி, 
வந்தவாசி, திருவண்ணாமலை மாவட்டம், 
"இது எங்கள் வகுப்பறை" - நூலாசிரியர்.

"மாணவன் "  யார்? 
--------------------
"மாணவன் என்றால் student "
"வகுப்பறைக்குள்ளே இருப்பவர்"
"கல்விக்கூடங்களில் கற்றுக்கொள்ள வருபவர்"
"ஆசிரியர் என்னும் சொல்லின் எதிர்பதம்" 
இப்படி பல பதில்கள் கொடுக்கலாம் அல்லவா? 
எல்லா பதில்களும் ஓரளவு சரிதான்.
பொதுவாக நாம் உரையாடும்பொழுது பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் தெரியாமலே அவைகளை சகஜமாக உபயோகித்துக் கடந்து விடுகிறோம்.  
நாம் தேடும் பதில்கள் பெரும்பாலும் அந்தக் கேள்வியிலேயே இருப்பதை சற்று அந்தக் கேள்வியை கூர்ந்து கவனித்தால் தெரிந்துவிடும். ஆனால் மேலே தலைப்பில் கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடையை வெறும் பதிலாக மட்டுமே சொல்லிவிட முடியாது. 
 "மாணவன்" என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை அனுபவ ரீதியாகத்   தெரிந்துகொள்ள  எனக்கு சில ஆண்டுகளாயிற்று. அதைக் கண்டுகொண்ட தருணம் தான்  "ஆசிரியர்" என்னும் வார்த்தைக்கான சரியான விளக்கத்தையும்  உணரமுடிந்தது.  ஆம் இது உணர்ந்து தெரிந்துகொள்ளப்பட வேண்டிய வார்த்தை.
இப்போது நான் சொல்லப்போவதை ஒரு மௌனப்படத்தை பார்ப்பதைப்போல உங்களின் மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளுங்கள். 
வகுப்பறைக்குள் ஒரு குழந்தை வந்து அமர்கிறது. அக்குழந்தையைச் சுற்றிலும் அதன் வயதையோத்த குழந்தைகள். முன்னால ஒரு கரும்பலகை. ஒரு மேஜை - நாற்காலி . தன்னைவிட வயதில் மூத்த ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்.  எல்லாக் குழந்தைகளும் எழுந்து வணக்கம் சொல்கின்றன. அதை ஏற்றுக்கொண்ட அந்த மூத்தவர் தன் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிரித்து அதில் சில வரிகளை வாசித்து ஏதோ சொல்கிறார். குழந்தைகள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 
குறிப்பிட்ட நேரம் வந்ததும் மணி அடிக்கிறது. வாசித்து சொல்லிக் கொண்டிருந்தவர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிடுகிறார். அடுத்து இன்னொருவர் வருகிறார். குழந்தைகள் எல்லோரும் எழுந்து நிற்கின்றனர். முந்தைய மணித்துளிகளில் என்ன நடந்ததோ அதுவே மறுபடியும் நிகழ்கிறது.
அங்கே நின்றுகொண்டு புத்தகப் பக்கங்களைத் திருப்பி வாசித்துக் கொண்டிருந்த வயது மூத்த நபரின் பெயர் "ஆசிரியர்". 
அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் "மாணவர்கள்".  சரிதானே???
இதை நான் இங்கே விவரிக்கக் காரணம், இதே காட்சி தான் இங்கே பெரும்பாலான  வகுப்பறைகளில் நடக்கிறது என்பதற்காக. 
 இதுபோலவே வகுப்பறைக்குள்  வந்து வாசித்து , வீட்டுப்பாடம் கொடுத்து , பாடங்கள் முடித்து, பரிட்சைக்குத் தயார்படுத்தவேண்டி கடுமையாக தண்டித்து, ஒரு ஆலைத் தொழிலாளிகளைப் போல நடத்தி , ஆசிரியர் என்ற பெயரில் இங்கே production output என்று கருதக்கூடிய மதிப்பெண்கள் சரியாக வரவேண்டி உழைத்த ஒரு மேற்பார்வையாளராக  நானும் சில வருடங்கள் இருந்திருக்கிறேன் என்பதை சொல்வதற்கு எனக்கு சிறிதும் தயக்கமில்லை. 
அப்போது எனக்குத் தெரிந்ததெல்லாம் , என்னிடம் கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கங்களை என் முன்னே அமர்ந்திருக்கும் பிள்ளைகளின் தலையினுள் திணித்துவிட வேண்டும் என்பது மட்டுமே. அதற்காகத்தான் எனக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று இன்றும் ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் பல ஆயிரம் இந்திய ஆசிரியர்களின் வரிசையில் அன்று நானும் நின்றுகொண்டிருந்தேன். 
அப்போதெல்லாம் மாணவன் என்றால் எனக்கு முன்னால் உட்கார்ந்து நான் சொன்னதைக் கேட்டு நடந்து பரிட்சை எழுதி பாஸ் ஆகி அடுத்த வகுப்புக்குச் செல்லும் ஒரு பையன் - பெண் அவ்வளவுதான். 
இந்தக் குழந்தை யார்? எதற்காக என் முன்னால் உட்கார்ந்திருக்கிறது? ஏன் தன் வாழ்நாளில் சில மாதங்கள் - சில வருடங்கள் என்னோடு பயணிக்கிறது? அதன் வாழ்வின் சில வருடங்களை என் கட்டுக்குள் கொடுக்கக் காரணம் என்ன? அப்படி அளிக்கப்பட்ட அந்த நாட்களில் அந்தக் குழந்தைக்கும் எனக்குமான உறவு என்ன?  அந்த நாட்களை நான் அந்தக் குழந்தைக்கு எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும்? அதிலிருந்து அந்தக் குழந்தை அடி எடுத்து வைக்கப் போகும் அடுத்த படிநிலை எவ்வாறு அமையப்போகிறது? என் கையிலிருக்கும் இந்த 'சிலபஸ்' என்னும் பாட நடைமுறையை மட்டும் ஒப்பித்து திணித்து பரிட்சை எழுத வைத்தால் மட்டும் போதுமா?  
இதை யோசிக்க ஆரம்பித்த தருணங்கள் தான் என்னை ஒரு ஆசிரியராக முழுமையாக உணரத் துவங்கிய ஞான கணங்கள் என்பதை உறுதியாக இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.
No student ever attains very eminent success by simply doing what is required of him: it is the amount and excellence of what is over and above the required, that determines the greatness of ultimate distinction. 
வரலாற்று ஆய்வாளரும் கல்வியியலாளருமான Charles Kendall Adams அவர்களின் வரிகள் இவை .
இதை நான் அப்படியே மொழிபெயர்ப்பதை விட இவ்வாறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். 
"எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையானதை மட்டும் செய்வதால் மிகப்பெரிய வெற்றியை எட்டிவிட முடியாது. அந்தத் தேவைக்கும் மீறி அவனிடம் உள்ள சிறப்பியல்புகள் தான் அவன் வெற்றியின் உயரத்தை நிர்ணயிக்கிறது"
இங்கே "மாணவன்" என்பவன் வெறும் பாடம் கற்றுக்கொள்ள வந்த குழந்தை மட்டுமல்ல. என்பது புலனாகிறது அல்லவா? 
அதேபோல வெறும் பாடத்தை மட்டும் திணிப்பது மட்டும் ஆசிரியரின் வேலையும் அல்ல என்பதும் அதிலிருந்து அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 
இங்கேதான் "மாணவன் " என்னும் வார்த்தையின் அர்த்தம் வெளிப்பட ஆரம்பிப்பதை நீங்களே உணரலாம். 
 
 "மாணவன்" என்பவன் வகுப்பறையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்தவன் மட்டுமல்ல, அதையும் தாண்டி தன் வாழ்நாள் முழுமைக்குமாகத்  தேவைப்படும் வாழ்வியல் சிந்தனைகளைப் "பெற்றுக்கொள்ள வந்தவன்". 
இத்தனை பெறவேண்டி வகுப்பறைக்குள் நுழையும் ஒரு சிறு குழந்தையின் பாத்திரத்தில் நிரப்பப்பட வேண்டியவை பாடங்கள் மட்டும்தானா???
 "மாணவன்"  என்னும் அழகிய வெள்ளைக் காகிதத்தில் வண்ணம் மிக்க ஓவியத்தை வரைவதற்கான தூரிகை "ஆசிரியர்" என்பவரின் கையில் மட்டுமே இருக்கிறது. 
வெள்ளைக் காகிதம் ஒரு புறம், வண்ண ஓவியம் ஒன்றை உருவாக்கும் பெரும் பொறுப்பு மறு புறம். 
புள்ளிகள் கோடுகளாக ஓர் ஓவியம் ஆரம்பமாகிறது
------ : தொடரும்

"மாணவன் என்றால் student ""வகுப்பறைக்குள்ளே இருப்பவர்""கல்விக்கூடங்களில் கற்றுக்கொள்ள வருபவர்""ஆசிரியர் என்னும் சொல்லின் எதிர்பதம்" 

இப்படி பல பதில்கள் கொடுக்கலாம் அல்லவா? எல்லா பதில்களும் ஓரளவு சரிதான்.

பொதுவாக நாம் உரையாடும்பொழுது பயன்படுத்தும் பல வார்த்தைகளுக்குச் சரியான அர்த்தம் தெரியாமலே அவைகளை சகஜமாக உபயோகித்துக் கடந்து விடுகிறோம்.  

நாம் தேடும் பதில்கள் பெரும்பாலும் அந்தக் கேள்வியிலேயே இருப்பதை சற்று அந்தக் கேள்வியை கூர்ந்து கவனித்தால் தெரிந்துவிடும். ஆனால் மேலே தலைப்பில் கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடையை வெறும் பதிலாக மட்டுமே சொல்லிவிட முடியாது. 

 "மாணவன்" என்னும் வார்த்தைக்கான அர்த்தத்தை அனுபவ ரீதியாகத்   தெரிந்துகொள்ள  எனக்கு சில ஆண்டுகளாயிற்று. அதைக் கண்டுகொண்ட தருணம் தான்  "ஆசிரியர்" என்னும் வார்த்தைக்கான சரியான விளக்கத்தையும்  உணரமுடிந்தது.  ஆம் இது உணர்ந்து தெரிந்துகொள்ளப்பட வேண்டிய வார்த்தை.

இப்போது நான் சொல்லப்போவதை ஒரு மௌனப்படத்தை பார்ப்பதைப்போல உங்களின் மனத்திரையில் கற்பனை செய்துகொள்ளுங்கள். 

வகுப்பறைக்குள் ஒரு குழந்தை வந்து அமர்கிறது. அக்குழந்தையைச் சுற்றிலும் அதன் வயதையோத்த குழந்தைகள். முன்னால ஒரு கரும்பலகை. ஒரு மேஜை - நாற்காலி . தன்னைவிட வயதில் மூத்த ஒருவர் நின்றுகொண்டிருக்கிறார்.  எல்லாக் குழந்தைகளும் எழுந்து வணக்கம் சொல்கின்றன. அதை ஏற்றுக்கொண்ட அந்த மூத்தவர் தன் கையில் இருக்கும் புத்தகத்தைப் பிரித்து அதில் சில வரிகளை வாசித்து ஏதோ சொல்கிறார். குழந்தைகள் அவரையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். 

குறிப்பிட்ட நேரம் வந்ததும் மணி அடிக்கிறது. வாசித்து சொல்லிக் கொண்டிருந்தவர் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு எழுந்து வெளியே சென்றுவிடுகிறார். அடுத்து இன்னொருவர் வருகிறார். குழந்தைகள் எல்லோரும் எழுந்து நிற்கின்றனர். முந்தைய மணித்துளிகளில் என்ன நடந்ததோ அதுவே மறுபடியும் நிகழ்கிறது.

அங்கே நின்றுகொண்டு புத்தகப் பக்கங்களைத் திருப்பி வாசித்துக் கொண்டிருந்த வயது மூத்த நபரின் பெயர் "ஆசிரியர்". அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த குழந்தைகள் "மாணவர்கள்".  சரிதானே???

இதை நான் இங்கே விவரிக்கக் காரணம், இதே காட்சி தான் இங்கே பெரும்பாலான  வகுப்பறைகளில் நடக்கிறது என்பதற்காக. 

 இதுபோலவே வகுப்பறைக்குள்  வந்து வாசித்து , வீட்டுப்பாடம் கொடுத்து , பாடங்கள் முடித்து, பரிட்சைக்குத் தயார்படுத்தவேண்டி கடுமையாக தண்டித்து, ஒரு ஆலைத் தொழிலாளிகளைப் போல நடத்தி , ஆசிரியர் என்ற பெயரில் இங்கே production output என்று கருதக்கூடிய மதிப்பெண்கள் சரியாக வரவேண்டி உழைத்த ஒரு மேற்பார்வையாளராக  நானும் சில வருடங்கள் இருந்திருக்கிறேன் என்பதை சொல்வதற்கு எனக்கு சிறிதும் தயக்கமில்லை. 

அப்போது எனக்குத் தெரிந்ததெல்லாம் , என்னிடம் கொடுக்கப்பட்ட புத்தகங்களின் பக்கங்களை என் முன்னே அமர்ந்திருக்கும் பிள்ளைகளின் தலையினுள் திணித்துவிட வேண்டும் என்பது மட்டுமே. அதற்காகத்தான் எனக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது என்று இன்றும் ஆழமாக நம்பிக்கொண்டிருக்கும் பல ஆயிரம் இந்திய ஆசிரியர்களின் வரிசையில் அன்று நானும் நின்றுகொண்டிருந்தேன். 

அப்போதெல்லாம் மாணவன் என்றால் எனக்கு முன்னால் உட்கார்ந்து நான் சொன்னதைக் கேட்டு நடந்து பரிட்சை எழுதி பாஸ் ஆகி அடுத்த வகுப்புக்குச் செல்லும் ஒரு பையன் - பெண் அவ்வளவுதான். 

இந்தக் குழந்தை யார்? எதற்காக என் முன்னால் உட்கார்ந்திருக்கிறது? ஏன் தன் வாழ்நாளில் சில மாதங்கள் - சில வருடங்கள் என்னோடு பயணிக்கிறது? அதன் வாழ்வின் சில வருடங்களை என் கட்டுக்குள் கொடுக்கக் காரணம் என்ன? அப்படி அளிக்கப்பட்ட அந்த நாட்களில் அந்தக் குழந்தைக்கும் எனக்குமான உறவு என்ன?  அந்த நாட்களை நான் அந்தக் குழந்தைக்கு எப்படி பயனுள்ளதாக மாற்ற முடியும்? அதிலிருந்து அந்தக் குழந்தை அடி எடுத்து வைக்கப் போகும் அடுத்த படிநிலை எவ்வாறு அமையப்போகிறது? என் கையிலிருக்கும் இந்த 'சிலபஸ்' என்னும் பாட நடைமுறையை மட்டும் ஒப்பித்து திணித்து பரிட்சை எழுத வைத்தால் மட்டும் போதுமா?  

இதை யோசிக்க ஆரம்பித்த தருணங்கள் தான் என்னை ஒரு ஆசிரியராக முழுமையாக உணரத் துவங்கிய ஞான கணங்கள் என்பதை உறுதியாக இங்கே பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.

No student ever attains very eminent success by simply doing what is required of him: it is the amount and excellence of what is over and above the required, that determines the greatness of ultimate distinction. 

வரலாற்று ஆய்வாளரும் கல்வியியலாளருமான Charles Kendall Adams அவர்களின் வரிகள் இவை .

இதை நான் அப்படியே மொழிபெயர்ப்பதை விட இவ்வாறாக அர்த்தப்படுத்திக் கொள்கிறேன். 
"எந்த ஒரு மாணவனும் அவனுக்குத் தேவையானதை மட்டும் செய்வதால் மிகப்பெரிய வெற்றியை எட்டிவிட முடியாது. அந்தத் தேவைக்கும் மீறி அவனிடம் உள்ள சிறப்பியல்புகள் தான் அவன் வெற்றியின் உயரத்தை நிர்ணயிக்கிறது"

இங்கே "மாணவன்" என்பவன் வெறும் பாடம் கற்றுக்கொள்ள வந்த குழந்தை மட்டுமல்ல. என்பது புலனாகிறது அல்லவா? 

அதேபோல வெறும் பாடத்தை மட்டும் திணிப்பது மட்டும் ஆசிரியரின் வேலையும் அல்ல என்பதும் அதிலிருந்து அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 

இங்கேதான் "மாணவன் " என்னும் வார்த்தையின் அர்த்தம் வெளிப்பட ஆரம்பிப்பதை நீங்களே உணரலாம்.   "மாணவன்" என்பவன் வகுப்பறையில் பாடங்களைக் கற்றுக்கொள்ள வந்தவன் மட்டுமல்ல, அதையும் தாண்டி தன் வாழ்நாள் முழுமைக்குமாகத்  தேவைப்படும் வாழ்வியல் சிந்தனைகளைப் "பெற்றுக்கொள்ள வந்தவன்". 

இத்தனை பெறவேண்டி வகுப்பறைக்குள் நுழையும் ஒரு சிறு குழந்தையின் பாத்திரத்தில் நிரப்பப்பட வேண்டியவை பாடங்கள் மட்டும்தானா?

 "மாணவன்"  என்னும் அழகிய வெள்ளைக் காகிதத்தில் வண்ணம் மிக்க ஓவியத்தை வரைவதற்கான தூரிகை "ஆசிரியர்" என்பவரின் கையில் மட்டுமே இருக்கிறது. 

வெள்ளைக் காகிதம் ஒரு புறம், வண்ண ஓவியம் ஒன்றை உருவாக்கும் பெரும் பொறுப்பு மறு புறம். 

புள்ளிகள் கோடுகளாக ஓர் ஓவியம் ஆரம்பமாகிறது

(தொடரும்)

by Swathi   on 20 May 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ? பி.இ. சான்றிதழ் சரிபார்ப்பை தவிர்த்த 15 ஆயிரம் பேர்- விருப்பம் குறைகிறதோ?
வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்! வேளாண் படிப்புகளில் சேர மாணவிகள் ஆர்வம்!
தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு! தனியார் மெட்ரிக் பள்ளிகளில் இலவச கட்டாயக் கல்வி- 60 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!
பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு பள்ளிக் கூடம் - தமிழ்நாட்டுக் கல்வியும், பின்லாந்து கல்வியும் -திருமதி.பாக்கியலட்சுமி வேணு
பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி பெரியண்ண கவுண்டர் குமாரசாமி அறக்கட்டளை - கல்வி உதவி
இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது! இணைய தளத்தில் சிபிஎஸ்இ  பிளஸ் 2,  பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அட்டவணை வெளியானது!
கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை! கிராமப்புற பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழக நிதி மூலம் ஸ்மார்ட் வகுப்பறை!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க உத்தரவு!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.