|
||||||||
வகுப்பறை உருவாக்கும் சமூகம் - 5 : தொடர் மீளாய்வு |
||||||||
![]() திருமதி. சசிகலா உதயகுமார், கடந்த சில அத்தியாயங்களில் சமூகம் - ஆசிரியர் - மாணவர் என்பது பற்றி தனித்தனியாகப் பேசியிருந்தேன். இதை ஒரு நுழைவுரை அல்லது முன்னுரை (preface) என்பதாக அமைக்க வேண்டும் என்கிற நோக்கத்துடனே உருவாக்கினேன். அதற்கான காரணம் என்ன என்பதை சுருக்கமாக விவரித்துவிட்டு அடுத்த பகுதிக்குள் செல்ல விழைகிறேன். பொதுவாக இது போன்ற கல்வி சார்ந்த கட்டுரைகள் எழுதும்போது நேரடியாக “ஜான் ட்யூயி” யின் “செயல் மூலம் கற்றல்” , மாணவர்களின் செவிப்புலன் - பார்வைப்புலன் சார்ந்து கல்வி செலுத்தும் முறை , டாக்டர் . கில்பாட்ரிக்கின் “அனுபவம் சார்ந்த பள்ளிக் கல்வி முறை” , advance learning techniques to make a child more wiser “ போன்ற விவரங்களுடன் பல உட்பிரிவுகளை வைத்து கட்டுரையை அத்தியாயம் அத்தியாயமாக எடுத்துச் சென்று விடலாம். இதுவே பல தேர்ந்த கல்வியியலாளர்களின் முறை. அப்படியான பல கட்டுரைகளும் புத்தகங்களும் நிறைய நாம் பார்த்திருப்போம் படித்திருப்போம். “கல்வி” என்றால் என்ன - கற்பது என்றால் என்ன - சமூகம் என்பது என்ன இவையெல்லாவற்றையும் பற்றி நாம் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பார்வைகள் கண்டிப்பாக இருக்கும். அவை பெரும்பாலும் நாம் வாழ்ந்து, படித்து வளர்ந்த சூழலை ஒட்டியே இருக்கும். இந்தத் தொடரை வாசிக்கும் வாசகர்கள் பல்வேறு கல்விச் சூழலில், பலவிதமான கற்றல் முறையில் இருந்து வந்தவர்களாக இருப்பீர்கள். இதை மாணவர்களின் மன உளவியலாகப் பிரித்துப் பார்த்து அதற்கான technical terms களைப் பயன்படுத்தி கற்பித்தல் கற்றலை வகைப்படுத்த எளிதில் முடியும். அதற்கான தரவுகள், பலதரப்பட்ட சர்வதேச அளவிலான பகுப்பாய்வுகளுக்கான footnotes எளிதில் இணையத்தில் கிடைக்கின்றன. இதை எல்லாம் தொகுப்பதில் எனக்கு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்தவரை ஒரு “பொது உளவியல் முறை”, எல்லா மாணவர்களுக்கும் பொருந்தக்கூடியது அல்ல . அது “நீங்களும் வெற்றி பெறலாம்” என்பதைப் போன்ற சுய முன்னேற்றப் புத்தகங்களுக்கு ஒப்பான செயல். என் அனுபவத்தில் ஒவ்வொரு குழந்தையும் தனித்தன்மை வாய்ந்த இயற்கையின் கொடை. அதனோடு one to one contact என்னும் தனிக் கவனம் எடுத்துப் பார்த்தால் மட்டுமே அவர்களை இந்த சமூகத்தின் மதிப்புமிக்க குடிமக்களாக்க முடியும். இதை எல்லாம் இங்கே சொல்வதற்கு என்ன காரணம் என்றால் இந்தத் தொடரை பல பெற்றோர்கள் வாசிப்பீர்கள். பல ஆசிரியர்கள் வாசிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது “தயவு செய்து எந்த முன்வரையறை செய்யப்பட்ட எண்ணங்களோடு (pre conceived ideas) குழந்தைகளை அணுகாதீர்கள் என்பது மட்டுமே. உங்களின் மூளை குழந்தைகளுக்குத் தேவை இல்லை. அவர்களின் வெகுளித்தனத்திற்குள் நீங்கள் நுழைந்து அவர்களோடு பயணப்படப் பழகுங்கள்.
இதை எல்லாம் இங்கே சொல்வதற்கு என்ன காரணம் என்றால் இந்தத் தொடரை பல பெற்றோர்கள் வாசிப்பீர்கள். பல ஆசிரியர்கள் வாசிக்க வாய்ப்பு உள்ளது. அவர்களுக்கெல்லாம் நான் சொல்லிக் கொள்வது “தயவு செய்து எந்த முன்வரையறை செய்யப்பட்ட எண்ணங்களோடு (pre conceived ideas) குழந்தைகளை அணுகாதீர்கள் என்பது மட்டுமே. உங்களின் மூளை குழந்தைகளுக்குத் தேவை இல்லை. அவர்களின் வெகுளித்தனத்திற்குள் நீங்கள் நுழைந்து அவர்களோடு பயணப்படப் பழகுங்கள். அதற்காகத்தான் இந்தத் தொடரின் முன் அத்தியாயங்களில் நான் எந்த வித technical terms - psychological definitions என்று ஆழமாகப் போகாமல் , தெரிந்த விஷயங்களையும் சில எளிய மேற்கோள்களையும் வைத்தே நகர்த்தி வந்திருக்கிறேன். சமூகம் - மாணவன் - ஆசிரியர் என்பதை தமிழ்ச் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே அப்படி வடிவமைத்தேன். ஒரு வேளை இந்த அறிமுகங்கள் எல்லாம் Low in standards போல பலருக்குத் தோன்ற வாய்ப்புள்ளது. அது தவறில்லை, அதே வேளையில் சமூகம் - மாணவன் - ஆசிரியர் என்பது வேறு யாரோ அல்லர். நாம் தான் - நம் குழந்தைகள் தான் - நாம் வாழும் சூழல் தான் என்பதை உணர்வது மிக அவசியம். அதற்காகவே இந்த நடைமுறைக்கு இயைந்த எளிய விவரணைகள். அதிலிருந்து நீங்கள் உங்களின் வாழ்வியல் முறை - உங்களைச் சார்ந்தவர்களின் - பலதரப்பட்ட குழந்தைகளின் வாழ்வியலோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். இந்தத் தொடரை “சமூகம” சார்ந்து அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சிறு முயற்சியாகவே பார்க்கிறேன். உங்களின் கருத்துகளை - கேள்விகளை வரவேற்கிறேன், பதில் சொல்வதற்குக் காத்திருக்கிறேன். ஒரு குழந்தைக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை நாம் வளர்ந்து பண்பட்ட அறிவோடு பார்க்க ஆரம்பிக்கும்பொழுது நாம் அவர்களை விட்டு வெகு தூரத்தில் நம்மையறியாமல் சென்றுவிடுகிறோம். சற்று நம்மைத் தள்ளி வைத்துவிட்டு அவர்களின் உலகத்தில் பயணித்து அவர்களுக்கான வாசல்களைத் திறக்க முயல்வோம். ஏனென்றால் “ஒவ்வொரு குழந்தையும் ஒரு பிரபஞ்சம் “ —— தொடரும்... |
||||||||
by Swathi on 27 Jun 2018 0 Comments | ||||||||
Tags: வகுப்பறை சமூகம் தொடர் | ||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|