LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

சங்க இலக்கிய நூல்கள் 12-யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் பெண்மணி !

சங்க இலக்கியத்திலுள்ள(Tamil Literature) பதினெட்டு நூல்களில், பன்னிரெண்டு நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளதற்காக தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான வைதேகி ஹெர்பர்ட்(Vaidehi Herbert) அவர்களுக்கு கனடாவின் டொரண்டோ பல்கலைகழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் சிறப்பு விருது ஒன்றை வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ் இலக்கியங்களை(Tamil Literature) ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது பற்றி அவரிடம் கேட்ட போது, தற்போது வழக்கத்தில் இல்லாத எத்தனையோ சொற்கள் தமிழ் இலக்கியத்தில் பல உள்ளன. அந்த சொற்களை மொழி பெயர்ப்பது மற்ற இலக்கிய மொழிபெயர்ப்புகளை விட மிகவும் சிக்கலும் சிரமமுமான ஒன்று என அவர் கூறினார். உதாரணமாக தமிழ் இலக்கியத்தில் உள்ள விறலி எனும் சொல்லுக்கு நேரடியாக ஆங்கிலத்தில் ஒப்பான சொல் இல்லை என்றும் அப்படியான வார்த்தைகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கூடுதல் சிரமங்கள் ஏற்பட்டதாக அவர் மேலும் கூறுகிறார். இதுவரை சங்க இலக்கியத்தின்(Tamil Literature) பன்னிரெண்டு படைப்புகளை மொழிபெயர்த்துள்ள வைதேகி(Vaidehi Herbert) இதர ஆறு படைப்புகளையும் அடுத்த ஆண்டு(2014) இறுதிக்குள் முடித்துவிட திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியிள்ளார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து கிடைத்திருந்தாலும் தமிழ் இலக்கியங்கள் வளம் பெற தமிழக அரசுகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லையென அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். 

by Swathi   on 18 Jun 2013  1 Comments
Tags: Vaidehi Herbert   வைதேகி ஹெர்பர்ட்   Tamil Literature   தமிழ் இலக்கியங்கள்           
 தொடர்புடையவை-Related Articles
சங்கஇலக்கிய நூல்கள் நூலகங்களுக்கு சங்கஇலக்கிய நூல்கள் நூலகங்களுக்கு
தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன் தொல்காப்பியமும் திருக்குறளும் - முனைவர் இர. பிரபாகரன்
சங்க இலக்கிய நூல்கள் 12-யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் பெண்மணி ! சங்க இலக்கிய நூல்கள் 12-யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முதல் பெண்மணி !
கருத்துகள்
20-Oct-2015 16:47:01 mathi said : Report Abuse
மொழிபெயர்ப்பு என்பது ஒருவர் இரண்டு மொழிகளும் தேர்ச்சி பெற்றிபவர்களால் செய்ய குடிய ஒரு காரியம் அதெப்படி ஒருவர் தமிழை பற்றி டிகிரி வாங்காமல் அதுவும் தமிழுக்கே தமிழ் விளக்கம் பெற வேண்டிய சங்க இலக்கியத்தை யாருடைய துணையும் இல்லாமல் செய்திருக்க முடியும் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.