LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    சிறுகதை Print Friendly and PDF
- அப்புசாமி

வாய்வா? தாய்வா?

            அப்புசாமி ‘ஆ!’ என்றார் தோளைப் பிடித்துக் கொண்டு. தோளில் தென் வடலாக நாற்பது டிகிரி கோணத்தில் ஒரு வலி சுரீர் என்று எங்கோ சென்றது. மீண்டும் வடகிழக்காக அது திரும்பி, கிழமேற்காக மையம் கொண்டது.அப்புசாமிக்கு நன்றாகத் தெரிந்தது, நிச்சயம் அது வாய்வுதான் என்று. கொஞ்ச நாளாக அவர் உடம்புக்குள் ஏதோ ஒரு வாய்வு. மந்திரி மாதிரி அடிக்கடிச் சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தது.‘கடற்கரைக்கு நான் காற்று வாங்க வந்தால், கூடவே இந்த ‘வாயு’வும் காற்று வாங்க வரவேண்டுமா? வாயுவே காற்றுதானே… மட வாயு!திடீரென்று அப்புசாமி நெளிந்தார். மெரினாவில் அவர் உட்கார்ந்திருந்த சிமெண்டுப் பெஞ்சு சுரீரென்று சூடானது போலிருந்தது. சட்டென்று எழுந்தார்.விருட்டென்று துண்டைத் தலையில் போர்த்துக் கொண்டார். வேகமாக வாக்கிங் செய்யலானார்.

 

           வாக்கிங் என்று அதைச் சொல்ல முடியுமா? ரன்னிங்.நகர்ந்து கொண்டிருந்த ஒரு பஸ்ஸை நோக்கி அவர் ஓடக் காரணமாக இருந்த உருவம் அமைதியாக சைக்கிளில் அவரைப் பின்பற்றியது – ஈட்டிக்கார அஜ்மல்கான்!“அரே அப்போசாமி! அரே அப்போசாமி! அப்போ துட்டு வாங்கினே… இப்போ ஓடறே…” என்று சைக்கிளில் அந்தத் தடித்த உருவம் கூவியவாறு தன்னை நெருங்கி வந்துவிட்டதை அப்புசாமி உணர்ந்து விட்டார். இன்னும் தன் வேகத்தை அதிகப்படுத்தியிருப்பார் – அதற்குள் பாழாய்ப் போன வாயுப்பிடிப்பு அபாய அறிவிப்புச் சங்கலியை ‘அகாரணமாய்’ இழுத்த மாதிரி முழங்காலுக்கு பிரேக் போட்டுவிட்டது. “நாசமாய்ப் போக!” என்று சபித்தவாறு நின்றார்.ஈட்டிக்காரனும் சைக்கிளுக்குப் பிரேக் போட்டான். “பஸ் மேலே ஏறிப் போயிடலாம்னு பார்க்கறே, அரே அப்போசாமி? நம்ப பைசா மூணு மாசமா நிற்கறான்… தப்பு விலாசம் கொடுத்துட்டுத் தலைமறைவாச் சுத்தறான்…”அப்புசாமி “ஹி!ஹி!” என்று சலாம் போட்டார். “கொடுத்திடறேம்பா அஜ்மல். நம்பள் உம்பளை மோசம் பண்ணலே.

 

           ஒரு நாலு நாள் டைம்…”“நம்பளை டபாய்க்கறே? ரெண்டே நாள் டைம் தர்றான். அப்புறம் நாம்பள் வூட்டண்டை வந்து கல்ட்டா பண்றான்… வருத்தப்படாதே…”அஜ்மல்கான் எச்சரித்துவிட்டுச் சைக்கிளை மிதித்துக்கொண்டு போய்விட்டான்.இரண்டு நாள் டைம்!அப்புசாமிக்கு ஆத்திரமாக வந்தது. அடசீ! முழங்காலில் வாயு மட்டும் பிரேக் போட்டுக் கழுத்தறுப்பு செய்யாதிருந்தால் விருட்டென்று பஸ் ஏறிப்போயிருப்பார் – நிம்பள் நம்பள ஒண்ணும் பண்ணியிருக்க முடியாது.கவலையுடன் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். சீதாப்பாட்டி பரிமாற வைத்திருந்த உருளைக்கிழங்கு கறி ‘வருக வருக’ என்று அழைத்தாலும் சும்மா போய் சோபாவில் முடங்கிக் கொண்டுவிட்டார்.ஸ்டடி ரூமிலிருந்து வந்த சீதாப்பாட்டி ஆச்சரியமாய் “வாட் ஹாப்பண்ட் டு யூ..? வாய்க்கும் கைக்கும் சண்டை நடத்திக் கொண்டிருப்பீர்கள் என்று பார்த்தால்…”“சீதே…” முனகினார் அவர். கடற்கரையில் முழுங்காலுடன் கொஞ்சிக் கொண்டிருந்த வாயு இப்போது மார்பைப் பிடித்துக் கொண்டிருந்தது.“எனக்கு என்னவோ செய்கிறது சீதே, வாயு!” என்றார் அப்புசாமி.

 

        “வாயுவா?” என்றாள் சீதாப்பாட்டி.“ஆமாம். வாயுதான். கொஞ்ச நாளாகவே மார்பிலே சுரீர் சுரீர் வலி. தோளிலே பளீர் பளீர் வலி. தலை சுற்றல்… முதுகு வலி… கால் வலி… இப்போ நெஞ்சு வலி… ஈட்டியால் குத்தியது போல் வலி… தினமும் பூண்டு ரசம் சாப்பிட்டால் சரியாகப் போய்விடும்…”“பூண்டு ரசமா?” திகைப்பாட்டி திகைப்பூண்டை மிதித்தவள் போல் கேட்டாள். அடிக்கடி அப்புசாமி ‘பூண்டு ரசம், பூண்டு ரசம்’ என்று கேட்டு வந்ததும், ஒரு நாள்அவளுக்குத் தெரியாமல் அமாக்களமாக நடுராத்திரி பூண்டு லேகியம் தயாரிக்க முனைந்து கையும் கரண்டியுமாக அகப்பட்டதும் நினைவுக்கு வந்தது. வெள்ளைப் பூண்டு மணம் என்றாலே சீதாப்பாட்டிக்கு அலர்ஜி. ஒரு பர்லாங் தூரம் ஓடிவிடுவாள்.“ஆமாம் பூண்டு ரசம் பண்ணிவிடு… அதுதான் வாயுவுக்குச் செம்தியான உதை கொடுக்கும்” என்று எழுந்து கொண்டார் அப்புசாமி.“நான்ஸென்ஸ்!” என்றாள்சீதாப்பாட்டி. “அந்த மண்ணாங்கட்டி ரசமெல்லாம் எனக்கு ப்ரிப்பேர் பண்ணத் தெரியாது. உங்களுக்கு உடம்பில் என்னென்னவோ கோளாறு என்கிறீர்கள். அதுவும் நெஞ்சுவலி என்கிறீர்கள்… நெக்லெக்ட் பண்ணக்கூடிய சமாசாரமில்லை இது.

 

         பூண்டு ரசமாம்… வாயுவாம்…. பேத்தல்! வாட் யூ நெள ரிக்வயர் இஸ் எ தரோ மெடிகல் செக்கப். ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் பதியிடம் ஐ ஷல் ·பிக்ஸ் யூ என் அப்பாயிண்ட்மன்ட் டுமாரோ. எக்ஸ்ரே, ஈஸிஜி கீஸிஜி எடுக்கணும் என்றால் உடனே எடுத்துக் கொள்ளுங்கள்.”“சீதாஜி!” என்றார் அப்புசாமி பல்லை நறநறவென்று கடித்து. “எனக்கு ஈஸிஜி. எறும்புஜி எந்த ஜியும் தேவையில்லை.தினமும் ஒரு கப் பூண்டு ரசம்ஜிதான் வேண்டும். என் வாய்வு பூண்டோடு ஒழிகிறதா இல்லையா பார்?”சீதாப்பாட்டி, ‘அவரோடு இந்த நிலையில் அதிகமாக ஆர்க்யூ பண்ணிக்கொண்டிருக்க வேண்டாம்’ என்று எண்ணினாள்.“ஆல் ரைட்… ஆல் ரைட்… டோன்ட் கெட் எக்ஸைடட்…. இந்த நிலையில் உங்களுக்கு பி.பி, ஐ மீன்….ப்ளட் ப்ரஷர் அதிகமாகக் கூடாது.”“அப்புசாமி முனகினார். “எனக்கு ஏன் அந்த மாதிரியான ரத்த வியாதியெல்லாம் வருது? உன் மாதிரி சோபாவிலேயே உட்கார்ந்திருக்கிறவங்களுக்குத்தான் பி.பி.யும் டும்டும்மும் வரும். எனக்கு வந்திருப்பது சாதாரண வாய்வு. இதிலே ஒண்ணும் தாய்வு கிடையாது.”அப்புசாமியின் ஆட்சேபத்தைப் பொருட்படுத்தாமல் சீதாப்பாட்டி மறுநாள் அவரை டாக்டர் பதியிடம் கிளப்பிவிட்டு விட்டாள்.அப்புசாமி பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்துக் கொண்டார்.

 

        கொஞ்ச நேரம் முன்னால் சீதாப்பாட்டி கொடுத்த புதிய ரூபாய் நோட்டு விடைப்பாக அவர் ஜிப்பாப் பையில் இருந்தது.‘ஹ¥ம்…’ ஒரு பெருமூச்சு விட்டார். பாக்கெட் மணி பத்து ரூபாய் தரக் கணக்குப் பார்க்கிற சீதேக் கிழவி நூறு ரூபாயைத் தாராளமாகத் தந்து வழியனுப்பி வைத்திருக்கிறாள் – டாக்டர் பதியிடம் போய் உடம்பைக் காட்டி காணிக்கை சமர்ப்பிக்கச் சொல்கிறாள்.அப்புசாமிக்கு மனசாகவில்லை. நூறு ரூபாயா ஒரு டாக்டருக்கு – அதுவும் சதாராண வாய்வு. இதற்காக நூறு ரூபாய் செலவழிப்பதா?‘எக்ஸ்ரே, ஒய்ரே சத்யஜித்ரே என்று எத்தனை விதமாக டாக்டர்கள் பணம் பிடுங்குறாங்கடாப்பா…’ என்று வருந்தினார். ‘பணம் போனாலும் பாவாயில்லை. இருதயத்தையே அறுத்து வேறு வைக்கணும் என்று சொன்னால் கூடச் சொல்லுவான்… அவனவனுக்குக் காசுதானே… அவன்பாட்டுக்கு எதாவது ஓர் ஆட்டு இருதயத்தை வச்சுத் தைத்து மூடிட்டுக் கையைக் கழுவிவிடுவான். நான் அப்புறம் ‘பே பே பே,’ என்று ஆயுளுக்கும் கத்திக் கொண்டிருக்கணும். இந்த சீதேக் கிழவிக்கு ஏற்கனவே என்னிடம் ரொம்ப மதிப்பு… பேபேபேன்னு ஆடு மாதிரி கத்திக்கொண்டு அப்பேசாமி ஆகிவிட்டால், கசாப்புக் கடைக்காரனுக்கு விற்றாலும் விற்றுவிட்டுப் போய்விடுவாள்…”அப்புசாமி இப்படியெல்லாம் குழம்பிக் கொண்டிருக்கும் போதுதான் பளிச்சென்று அந்தச் சுவரொட்டி தெரிந்தது.

 

        முதலில் அந்த வண்ணச் சுவரொட்டியை யாரோ பிரமுகரின் பிறந்தநாள் சுவரொட்டியாக இருக்கும் என்று எண்ணி அலட்சியமாகச் சரியாகப் பார்க்கவில்லை.அப்புறம் சுவரை ஒட்டி நடந்த போதுதான் நன்கு கவனித்தார்.‘மலிவான வைத்தியம்!’‘இயற்கை வைத்தியத்தில் சக்ரவர்த்தி!’ என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தது.அப்புசாமியின் மனம் துள்ளியது. இயற்கை வைத்தியம்…. ஆகா! மலிவு வைத்தியம்..இயற்கை வைத்தியம்! வாயுவையும் குணப்படுத்திக் கொண்டுவிடலாம். சீதேக் கிழவி மருந்துக்குக் கொடுத்த பணத்தைக் கொண்டு ஈட்டிக்காரனையும் சமாளிக்கலாம். ‘அரே அஜ்மல்கான்! நிம்பள் பாக்கி நம்பள் தீர்த்துக் கட்டறான்!’மூக்கை ஜிர்ரென்று ஓர் உறிஞ்சு உறிஞ்சினார் அப்புசாமி. ஆ… எத்தனை வகையான மூலிகை மணம்! தேனாம்பேட்டையில் ஒதுக்குப்புறமாக இருந்த அந்த இயற்கை வைத்தியசாலை அமைத்திருந்த தோட்டத்துக்குள் வந்ததுமே அவருக்குத் தனது பித்தவாத சிலேத்துமாதி நோய்கள் குணமாகிவிட்டதைப் போன்ற புத்துணர்ச்சி வந்தது.மாலையின் பொன் வெயிலில் பாத்திகளிலிருந்த கீரைச் செடிகள் தளதளத்தன. அம்மாடி. எத்தனை வகைக் கீரைகள்! எண்ணினார். 21 வகை.

 

        இயற்கை வைத்தியர் டாக்டர் அகத்தி, அன்போடு வரவேற்று அவருடன் பேசினார். பெயர், முகவரி முதலிய விவரங்களை எழுதிக்கொண்டார். அவரை உள்ளே ஹாலுக்கு அழைத்துச் சென்று ஓர் அறையைக் காட்டினார். “இது தான் உங்கள் தனி அறை. நீங்கள் வசதியாக இருக்கலாம். சிகிச்சைகள் உங்களுக்குப் படிப்படியாகத் தருவோம். இது ஆங்கில வைத்தியத்துக்கு நேர் எதிர். குணம் தெரிவதற்கு நோயாளி பொறுமையாக இருக்க வேண்டியதுதான் இதில் முக்கியமானது. மறுபடியும் காலையில் சந்திக்கிறேன்.”டாக்டர் அகத்தி போய்விட்டார்.ராத்திரி ஏழு மணிக்கு ஒரு வேலையாள் அப்புசாமிக்கு எலுமிச்சம் பழ சர்பத் ஒரு டம்ளர் கொண்டு வந்து தந்தான் – உப்பு போட்டது.கொஞ்சம் கொஞ்சமாக ருசித்து அதைச் சாப்பிட்டவாறே, “ஏப்பா, நைட்டுக்கு ஆகாரம் எப்போ கொண்டு வருவே? பசுபசுவென்று ஏதோ காரட் போச்சே… காரட் சாம்பாரா, இல்லே கோசு மறியா?” என்றார்.வேலைக்காரன் சுருக்கமாக, “டம்ளரைக் குடுங்கோ…” என்று கேட்டு, சில பல துளிகள் அதில் இருக்கும் போதே வாங்கிக் கொண்டு சரேலென்று போய்விட்டான்.ராத்திரி மணி எட்டாயிற்று.‘என்ன சமையல் வாசனை ஒன்றையும் காணோம்.’ என்று மெதுவாகத் தன் அறைக்குள் நடை போட்டுக் கொண்டிருந்தார்.

 

        கதவை யாரோ தட்டினார்கள். அப்புசாமி திறந்தார். குள்ளமாக ஓர் ஆசாமி நின்றிருந்தார். “நான்தான் பக்கத்து ரூம்காரன். ஓடிகிட்டே இருக்கிறேன். ஆமாம், வெங்காயம் வந்துட்டுதா?”“வெங்காயமா?” என்றார் அப்புசாமி, “வரலியே…”“ஹ¥ம்… முதல் நாளே அது வரலியா?” என்று பெருமூச்சு விட்டுவிட்டு அந்த ஆசாமி வேகமாக இருளில் மறுபடி ஓடத் தொடங்கினார்.ஏன் அந்த ஆசாமி ‘வெங்காயம் வந்ததா?’ என்று கேட்டுவிட்டு இருளில் ஓடவேண்டும்?அப்புசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. இருட்ட இருட்ட மனத்தை என்னவோ பரபரத்தது.அன்பான டாக்டர் அகத்தியையும் காணோம். ஆகாரத்தையும் காணோம். நேரமோ மணி ஒன்பதாகி விட்டது.அவர் கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே, அகன்ற ஒரு பெரிய தட்டில் எதையோ வைத்து மூடி எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரி சிப்பந்தி அவர் அறைக்கு வந்தான்.“அப்பாடா! வந்ததடாப்பா சாப்பாடு…” என்று கட்டிலில் உட்கார்ந்து சாப்பாட்டுத் தட்டின் மேலிருந்த அகன்ற மூடியைத் திறந்தார்.ஒரு டார்ச் லைட்டும், வட்டமாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயத் துண்டும் இருந்தது. வேலையாளும் போய்விட்டான்.‘இது என்ன விசித்திர ஜோடி – கலப்புத் திருமண ஜோடி மாதிரி! டார்ச் விளக்கு! வெங்காயம்!’ அப்புசாமி திகைத்தார்.அதற்குள் யாரோ திப்திப்பென்று ஓடிவரும் சத்தம் கேட்டது. கொஞ்ச முன் கதவைத் தட்டி ‘வெங்காயம் வந்துட்டுதா?’ என்று கேட்டவர்தான் ஓடிவந்து கொண்டு இருந்தார்.சட்டென்று “சார்! வெங்காய சார்!” என்று ஓடினவரை இழுத்துப் பிடித்து அப்புசாமி நிறுத்தினார்.

 

        “கொஞ்சம் நீங்களாவது விளக்கிச் சொல்லுங்கள். எதற்கு இந்த டார்ச்சும்… வெங்காயமும்…?”அவர் விஷயத்தை விளக்கினார்.நோயாளிகள் அனைவரும் தினமும் விடிகாலையிலும் ராத்திரியிலும் வைத்திய சாலையைச் சுற்றிக் குறைந்தது ஐந்து ரவுண்டுகளாவது ஓட வேண்டுமாம். “புதிதாகச் சேர்கிற நோயாளிகள் இருட்டில் செடி, மரம், கொடி இவற்றில் முட்டி மோதிக் கொள்ளாமலிருக்கச் கொஞ்ச நாளைக்கு டார்ச் விளக்கு ஆஸ்பத்திரியிலேயே தருவார்கள். அப்புறம் பழகிப் போனால் தரமாட்டார்கள்” என்று கூறிய அடுத்த ரூம்காரர், அப்புசாமியின் கையிலிருந்த வெங்காயத் துண்டையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.அப்புசாமியோ அதை அறியாமல் ஓட்டக் கவலையில் மூழ்கியிருந்தார். தினமும் அவரால் ஓட முடியுமா? “அதுசரி… இந்த வெங்காயத்தை என்ன பண்ணணுமாம்!” என்றார் எரிச்சலுடன் அதைத் தரையில் தேய்த்தவாறு.எதிரிலிருந்த ஓட்டக்காரர், “அடடே… அடடே!” என்றார் தன்னையே அப்புசாமி தரையில் தேய்ப்பது போல. “அதைத் தேய்க்காதீங்க சார். அதுதான் உங்களுடைய ராத்திரி ஆகாரம்..! எனக்கு அதுவும் இல்லை!”“என்னது?” அப்புசாமி துள்ளிக் குதித்தார்.

 

        “என்ன சார்…விளையாடறீங்க… ராத்திரி பூராவுக்கும் இந்த வெங்காயத் துண்டுதான் ஆகாரமா?”“நீங்க அதிருஷ்டசாலி சார்… சாயந்தரம் வேறு எலுமிச்சம்பழ ஜூஸ் சாப்பிட்டீங்க… இப்போ, வெங்காயத் துண்டு வேறு… என் நிலையைப் பாருங்க. நான் மூணு நாளாப் பட்டினி. படுபட்டினி. தண்ணீர் மட்டும்தான் தருகிறார்கள். நமக்கென்னங்க… உடம்பை சொஸ்தம் பண்றேங்கறாங்க. பண்ணட்டும். முடிஞ்ச ஒத்துழைப்பை நாம் தந்துடறது… முடியலியா, எப்படியும் சாகப் போறோம். இப்படித்தான் செத்துப் போறது… என்ன நான் சொல்றது? வரட்டுங்களா… கொஞ்சூண்டு வெங்காயம் வேணாத் தர்றீங்களா? நாக்கு ஊறுது… யாரானும் பார்த்துடப் போறாங்க… சீக்கிரம்…”அப்புசாமிக்கு இரண்டு கண்ணிலும் கடகடவென்று தண்ணீர் கொட்டிவிட்டது. “முல்லைக் கொடிக்குத் தேரைக் கொடுத்தான் ஒருவன். ஔவைக்காக அரிய நெல்லிக்கனியைத் தந்தான் இன்னொருவன். இதோ இந்த வெங்காயத் துண்டு முழுசையுமே உமக்கு நான் கொடுக்கறேன்!”வெங்காயத்தைத் தின்றுவிட்டு சந்தோஷமாக ஓடிவிட்டார் அடுத்த அறை நோயாளி.அப்புசாமி தாளம் போட்டவாறே சிந்தித்தார். இங்கே மேலும் இருக்க வேண்டியதுதானா? டாக்டர் பதியே கதி என்று ஓடிவிடலாமா? ஆனால், அஜ்மல்கான் பாக்கி? சிந்தித்துக் கொண்டே தூங்கி விட்டார்.

 

       காலையில் அப்புசாமி கண் விழித்தபோது டாக்டர் அகத்தி புன்முறுவலுடன் அருகே நின்று கொண்டிருந்தார். “இறைவணக்கம் செய்துவிட்டீர்களோ?” என்று கேட்டார்.அப்புசாமிக்கு ராத்திரி தன்னைப் பட்டினி போட்டு விட்டதால் அகத்திமீது கோபம். ஆகவே, பதில் சொல்லாமல் முகத்தை மட்டும் ஏறிட்டுப் பார்த்துவிட்டு மெளனமாகிவிட்டார்.“எல்லாவற்றையும் காரில் தூக்கிப் போடப்பா… வீரப்பன் தயாரா? இந்தா நாயர், வீரப்பன்கிட்டே பேஷண்டை அழைத்துக் கொண்டு கடற்கரைக்குப் போகணும் என்று சொல்லு… அவன் ஒரு சரியான தூங்குமூஞ்சி. சீக்கிரம் ரெடியாகட்டும்.”அப்புசாமி ஆச்சரியப்பட்டார். ஆனந்தப்பட்டார். தன் ஒருத்தனைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்ல ஆகா, என்ன தடபுடலான ஏற்பாடு! டாக்டர் அகத்தியின் அன்பு அவர் மனத்தை நெகிழ வைத்தது.ராத்திரி பத்து மணியாகியும் அப்புசாமி வீடு திரும்பாததால் சீதாப்பாட்டி மிகவும் கவலைப்பட்டாள். டாக்டர் பதியின் கிளினிக்குக்குப் போன் செய்தாள். அங்கே அவர் வரவே இல்லை என்ற தகவல் அவளை ‘ஷாக்’ அடைய வைத்தது.மீண்டும் ஏதாவது ஹார்ட் ட்ரபிள் ஏற்பட்டுப் போகிற வழியிலேயே கீழே விழுந்து விட்டாரா?மறு நாள் காலையிலும் அவர் வராதது குழப்பத்தை அதிகரித்தது.இருப்புக் கொள்ளாமல் காரை எடுத்துக் கொண்டு கார் போன வாக்கில் சென்று கொண்டிருந்தாள்.

 

        கார் எலியட்ஸ் பீச்சுக்கு வந்து விட்டதுகூட அவளுக்கு உணர்வில்லை.கார் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. அவள் மனமோ கேட்டுக் கொண்டிருந்தது – ‘கோவாடிஸ்?’ எங்கே செல்கிறாய்?‘கிரீச்!’கால் பிரேக்கை மிதித்தது.அது என்ன அது!சிறிது தூரத்தில் மணலில் ஏதோ ஒரு மனிதத் தலை உருவம் போலத் தெரிகிறதே – அதுவும் அவள் கணவரின் உருவம் போலவே!‘மை குட்னஸ்!’ என்று தன்னை உலுக்கிக் கொண்டாள். ‘என்ன ஓர் இல்யூஷன்! யார் வீசி எறிந்த நசுங்கிப் போன தகர டின்னோ? அவருடைய தலை மாதிரி என் கண்ணுக்குத் தெரிகிறதே… ரொம்ப டீப்பாக அவரையே நினைத்துக் கொண்டிருப்பதன் விளைவு போலும்!தகர டின் இன்னமும் அவள் கணவனின் தலை மாதிரியே தோற்றம் தந்துகொண்டிருந்தது.டால்டா டின்னா? டார்லிங் தலையா? டார்லிங் டின்னா, டால்டா தலையா? அவளுடைய கண்தான் அவளை எப்படித் தொடர்ந்து ஏமாற்றுகிறது! கீழே குனிந்து தேடினாள். ஏதாவது சிறிய கல்லாகக் கிடைக்காதா, தகர டின் மீது எறிந்து பார்க்கலாம் என்று.மணலில் கல்லே கிடைக்காததால், காரில் பின்பக்கம் வைத்திருந்த வாழைப் பழங்களில் ஒன்றைப் பிய்த்து தகர டின்னைக் குறி பார்த்து எறிந்தாள்.என்ன ஆச்சரியம், தகர டின் ‘டங்’ என்று சத்தம் கொடுப்பதற்குப் பதில் வாழைப்பழத்தை லபக்கென்று கவ்விக்கொண்டது.

 

       மெய்சிலிர்த்தது சீதாப்பாட்டிக்கு.இயற்கை வைத்தியம் தன்னை இப்படிக் கழுத்துவரை மணலில் புதைந்துவிடும் என்று அப்புசாமி கனவிலும் நினைக்கவில்லை.காரிலிருந்து இறங்கியதும் வேலையாள் வீரப்பன் ஒரு நாடாவை வைத்து அவர் உயரத்தை அளந்தான். மண்வெட்டியால் பரபரவென்று மணலைப் பறிக்கத் தொடங்கினான்.அப்புசாமிக்குப் புரியவில்லை. “தாகமாயிருந்தால் எங்காவது இளநீர் வரவழைக்கலாமே… ஊற்றுப் பறித்துத் தண்ணீர் குடிக்க வேண்டுமா என்ன?” என்றார்.டாக்டர் அகத்தி மிருதுவான குரலில், “அன்பரே… உமது நன்மைக்காகத்தான் குழி வெட்டுகிறோம். குழியில் ஒரு மணி நேரம் இருந்தால் போதும். அற்புதமான குணம் தெரியும்” என்றார்.அப்புசாமிக்குத் தாங்க முடியாத கோபம் வந்துட்டது. “யோவ் அகத்திக்கீரை! உம்மை நம்பி வந்ததற்குக் குழியை வெட்டி இறக்கப் பார்க்கிறீரே…நியாயமா?” என்று கூக்குரலிட்டார்.குழி வெட்டி முடித்த வீரப்பன், “சாமி…சீக்கிரம் ஆகட்டும்… சட்டையைக் கழற்றுங்க…” என்று அவர் தோலை உரிக்க விரும்பவன்போல் சட்டையைப் பற்றினான்.“அடே அடே… வேண்டாண்டா… அஜ்மல்கான்! அஜ்மல்கான்!” என்று அப்புசாமி அலறினார். அஜ்மல்கானின் பாக்கி தீர்ப்பதற்கான பணத்தைச் சட்டையில் அல்லவா வைத்திருக்கிறார்?“யாரது அஜ்மல்கான்?” என்று வினவினார் டாக்டர் அகத்தி.“என் குலதெய்வம்!” என்று எரிச்சலுடன் கூறினார் அப்புசாமி, “சட்டையைக் கழற்றாமல் வேணும்னால் குழியில் இறங்கறேன்… சம்மதமா?”டாக்டர் அகத்தி, ” சரி அன்பரே.. வீரப்பா… ஆகட்டும்… ஐயாவைச் சரியாக ஒரு மணிக் கழித்துக் கூட்டி வந்துவிடு…” என்று கண்ணால் ஒரு மாதிரி சாடை காட்டிவிட்டுப் போய்விட்டார்.

 

         சாடைக்கு அர்த்தம்: நாலு மணி நேரம் கழித்துக் கூட்டிவா என்பது.வீரப்பன் பரபரவென்று மணலைப் போட்டு மூடினான்.“வீரப்பா… பயம்மா இருக்குடா…” என்றார் புதையுண்ட அப்புசாமி.“அப்படித்தானய்யா இருக்கும். இங்கேயே பத்திரமா நீ இரு. எங்க சித்தாத்தா ஊடு இங்கே பக்கத்திலேதான் இருக்கு. இதோ தலையைக் காட்டிட்டு வந்துடறேன்… நண்டுகிண்டு வந்தால் பயப்படாதே… எச்சில் துப்பு. ஓடிடும்… என்னா தெரியுமத?”“டேய்! டேய்! படுபாவி! படுபாவி!” என்று கத்தக் கத்த வீரப்பன் போயே போய்விட்டான்.அவனும் டாக்டர் அகத்தியிடம் தினமும் லீவ் கேட்டு அலுத்துப் போயிருந்தான்.கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.“அடே வீரப்பா, வீரப்பா… ரப்பா…ரப்பா…ப்பா…ப்பா பா…பா…” என்று அப்புசாமி தொண்டை வறளக் கத்திச் சோர்ந்துவிட்டார். அப்போதுதான் சீதாப்பாட்டி அங்கு வந்து சேர்ந்தாள்.மணலில் கிடப்பது கணவரின் அசல் தலைதான் என்று தெரிந்ததும் சீதாப்பாட்டிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி தாங்க முடியாததாக இருந்தது.“சீதே… என்றார் அப்புசாமி, சிரமத்துடன் மனைவியைக் கண்களால் ஏறிட்டுப் பார்த்து. “இப்போதுதான் உன்னைப் பற்றித் தியானம் செய்தேன். உன்னைக் காரிலே வந்தவளாக நான் நினைக்கவில்லை. கருட வாகனத்திலே வந்த கடவுளாக நினைக்கிறேன்.”சீதாப்பாட்டி, “ஸே…வாட் இஸ் ஆல் திஸ்? எப்படி நீங்கள் மணலுக்குள் போனீர்க்ள?” என்றாள்.“நான் போகிறேனாக்கும்? என் தலை விதி! இயற்கையின் சதி!”நடந்த விஷயங்களை அவர் விவரித்தார்.அவர் சொல்லச் சொல்லசீதாப்பாட்டிக்கு ஆத்திரமாக வந்து.

 

       “எவ்வளவோ பாலிஷாக உங்களை நடத்தப் பார்க்கிறேன். நீங்கள் அவ்வளவுக்கு அவ்வளவு ·பூலிஷாக நடந்து கொள்கிறீர்கள். எனக்கு உங்களோடு என்ன செய்வதென்றே தெரியவில்லை.”“சீதே…” என்றார் அப்புசாமி எரிச்சலுடன் “முதலிலே என்னைக் குழியிலிருந்து தோண்டி எடு..”பற்றிக்கொண்டு வந்தது சீதாப்பாட்டிக்கு. “பெரிய கிம்பர்லி டைமண்ட்! உங்களைத் தோண்டி நான் எடுக்க வேண்டுமாக்கும்? யார் புதைத்தார்களோ அவர்களையே கூப்பிட்டுத் தோண்டச் சொல்லுங்கள்.” அப்புசாமிக்குப் படுகோபம் வந்துவிட்டது. “ஏண்டி, குழியில் சிக்கிக்கொண்டு நான் தவிக்கிறேன். இப்போ பார்த்து நீ சத்தாய்க்கிறியா? வேண்டாம். நம்ம கைலே ‘ராங்’ வச்சுக்காதே…”“ஷட் அப்!” என்றாள்சீதாப்பாட்டி. டாக்டர் பதிகிட்டே கொடுக்கச் சொல்லி நான் தந்த பணத்தை என்ன பண்ணினீர்கள்?… மசால் தோசை ஐ சப் போஸ்”“மண்ணாங்கட்டி தோசை! கணக்குக் கேக்கிற நேரத்தைப் பார்க்கலை?”சீதாப்பாட்டி பெருமூச்செறிந்தாள். கைகுட்டையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். “உங்களை ப்ளேம் பண்ணிப் பிரயோசனமில்லை. ஐ யம் என் இடியட். உங்களைத் தனியாக அனுப்பியிருக்கக்கூடாது.”

 

       “ஆ! பெரிய நண்டு! தாய் நண்டு!” என்று அவறினார் அப்புசாமி.சிறது தூரத்தில் தரைமட்டதில் ஒரு நண்டு மறைவதைப் பார்த்து. அநத்த் தாய் நண்டு தன் குஞ்சுகளைத் தேடி சுரங்கப்பாதை வழியாக அவர் இடுப்புக்கு வரக்கூடிய சாத்தியக்கூறு இல்லையென்று எப்படிக் கூற முடியும்? “சீதே… சீக்கிரம் தோண்டேன்… நண்டேன்.”சீதாப்பாட்டி சீரியஸாகக் கேட்டாள்: “முதலில் நான் கேட்கிறதற்குப் பதில். டாக்டர் பதியிடம் ஓர் அப்பாயிண்ட்மென்ட் ·பிக்ஸ் செய்கிறதென்றால் டு யூ நோ ஹெள மச் டி·பிகல்ட் இட் இஸ்? போகட்டும். பணத்தை என்ன பண்ணினீர்கள்?”அப்புசாமி பல்லை நறநறத்தார். நண்டு வேறு டைரக்ஷனில் போய்விட்ட தைரியம். “பணம்! பணம்! உன் பணம் எங்கேயும் போகாதடி பணப்பிசாசே! என் ஜி£ப்பாப் பையிலே பத்திரமாயிருக்கிறது. நீ ஓர் ஈட்டிக்காரி. உன்னைவிடப் பெரிய அசல் ஈட்டிக்காரன் இருக்கிறானல்லவா? அவனுக்காக அதைப் பத்திரமாக வைத்திருக்கிறேன்.”சீதாப்பாட்டி அதிர்ச்சியுடன், “ஈட்டிக்காரன்.  தட் ஸார்ட் அ·ப் விவகாரம்கூட உண்டா?” என்றாள்.“என்ன பண்றது? சீட்டாட்டத்திலே  தினமும் தோற்றுக் கொண்டே இருந்தால் கிளப்காரங்க விடுவான்களா?”“சீட்டாட்டமா? கிளப்பா! வாட் டு யூ மீன்?”“அச்சச்சோ” அதையும் சொல்லிவிட்டேனா உன்கிட்டே? வேறொன்றுமில்லை. நம்ம பேட்டையில் புதுசா ஒரு சீட்டாட்ட க்ளப் நடக்கிறது.”முகம் ஜிவுஜிவு என்று சிவந்தது சீதாப்பாட்டிக்கு.

 

        “ஈட்டிக்காரன்கிட்டே கடன் வாங்கி…சீட்டாட்டம்… மை குட்னஸ்… ஐ கான்ட் இமாஜின்…”சீதாப்பாட்டி ஒருகணம் ஏதோ யோசித்தாள். பிறகு மலர்ந்த முகத்துடன், “ஐயோ பாவம், யு லுக் ஸோ டயர்ட். உங்களைக் குழியிலிருந்து எடுத்துவிடுகிறேன்.”அப்புசாமிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. “சீதேன்னா சீதேதான்…”கை வளையல்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கொண்டாள் சீதாப்பாட்டி. புடவைத் தலைப்பை வரிந்து கட்டிக்கொண்டாள். மண்டியிட்டு உட்கார்ந்து மணலைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பறித்தாள்.இரண்டங்குல ஆழம் பறிப்பதற்குள் அப்புசாமிக்கு நன்றியால் நாக்கு தழுதழுத்தது. “சீதே… சீதே! என் செல்லக் கண்ணென்றால் நீதான்… உன்னுடைய பொன் கரம் புண் ஆகும்படி பறிக்கிறாயேடியம்மா… பறி. பறி. நண்டு வரும்… பார்த்துப் பறி… எனக்குத் தெரியும். நீ சும்மாப் படபடன்னு படாபடாக்குச்சி மாதிரி வெடித்தாலும் என்னை விட்டுவிட மாட்டாய். ஆமாம்… ஏன் ஒரே ஸைடாக பறிச்சிட்டுப் போறே… நாலு பக்கமாப் பறி… ஐயோ பாவம் பழக்கம் இல்லையோன்னோ…?”சீதாப்பாட்டி பறிப்பதை நிறுத்தினாள்,புன்னகையுடன்.அப்புசாமி வீறட்டார்.

 

        “சீதே…சீதே…சீதே… இது அநியாயம்! அக்கிரமம். அடிப்பாவி! பகல் கொள்ளை ராக் கொள்ளை! அடியே! நரகத்துக்குப் போவே. அதுவும் நரகத்துக்கு உட்கார்ந்து கொண்டு கூடப் போகமாட்டாய். இடம் கிடைக்காமல் நெரிசலிலே நின்றுகொண்டு போவாய். வேண்டாண்டி… அடுக்காது!” அப்புசாமி அலறினார்.சீதாப்பாட்டி கணக்காக அவரது மார்பு வரைக்கும் – ஜிப்பாவின் கடிகார பாக்கெட் வரைக்கும் – மணலைப் பறித்தாள். அதற்கப்புறம் அவள் பறித்தது அவரது பாக்கெட்டுக்குள்ளிருந்த பணத்தைத்தான்.“டாடா!” என்றாள் எழுந்து நின்றுகொண்டு. “இந்தப் பணத்தைத்தானே ஈட்டிக்காரனுக்குக் கொடுக்கிறதாக இருந்தீர்கள்?”நோட்டைப் பிரித்துக் காட்டியவள், பறபறவென்று பறித்த மாதிரியே மணலை மூடிவிட்டுக் க

by parthi   on 09 Mar 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்
கவனம்-இரமா ஆறுமுகம் கவனம்-இரமா ஆறுமுகம்
நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன் நெஞ்சோரமாய்…கலையரசி சிவசுந்தர பாண்டியன்
கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும் கழுதைக்கும் கற்பூர வாசனை தெரியும்
மனித நேயம் மனித நேயம்
உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா உலகத் தமிழ் மாநாடு 1968 அறிஞர் அண்ணா
அவர் - நிலாரவி அவர் - நிலாரவி
காதல் வீரியம் - எஸ்.கண்ணன் காதல் வீரியம் - எஸ்.கண்ணன்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.