அமெரிக்கப் பள்ளிகளில் தமிழில் அறிவிப்பு !
புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்குத் தமிழில் யாராவது பேசுவதைக் கேட்டாலே இன்பம். எங்கேயாவது தமிழில் பெயர்ப்பலகை வைத்திருந்தால் பேரின்பம். அதையும் தாண்டி பள்ளிகளிலிருந்து வரும் மின்னஞ்சல் அறிவிப்பு தமிழில் வந்தால் என்னவென்பது? இப்படியொரு நிகழ்வு நவம்பர் பதினொன்றாம் தேதி நடந்தது. மிச்சிகனில் கடுமையான பனிப்பொழிவை முன்னிட்டு பள்ளிகள் சீக்கிரமே மூடப்பட்டன. அதன் அறிவிப்பு சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்குத் தமிழில் கிடைத்தது என்பது எவ்வளவு பேரானந்தம். தமிழ் நமது முதல் அடையாளம். வாழ்க தமிழ்!
|