LOGO
  முதல் பக்கம்    மற்றவை    சிறப்புக்கட்டுரை Print Friendly and PDF

செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)

செய்திச்சுருக்கம் (நவம்பர் , 2019)                                                     

நீச்சல்காரன்

 • நீலகிரி மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் விழுந்தும், மண்சரிவும் ஏற்பட்டது 
 • அரசியல் விளம்பரங்களுக்கு நவம்பர் 22 முதல் ட்விட்டரில் தடை
 • இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் குருதாஸ் தாஸ்குப்தா அக்டோபர் 31 இல் காலமானார்
 • காவிரி ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம்: முதல் முறையாகத் தமிழகத்தில் தொடங்கியது
 • நகைச்சுவை நடிகர் ஜெயச்சந்திரன் மரணம்
 • துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றார்.  
 • பயிர்க்கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்தது.
 • டிசம்பர் 1-ம் தேதி முதல், அனைத்துச் சுங்கச்சாவடிகளும் ஃபாஸ்ட் டேக்(Fasttag) மூலம் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியாகியது
 • சென்னை மெட்ரோ ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், 50% சலுகைக் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
 • நவம்பர் 5 இராஜராஜ சோழனின் 1034 ஆவது சதயவிழா நிகழ்வுகள் தஞ்சை பெரிய கோயிலில் நடந்தது
 • தென்னிந்தியாவின் முதல் விமான நிலையத் தீயணைப்பு வீராங்கனையாக ரெம்யா என்பவர் சென்னை விமான நிலையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்
 • இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச 52.25% வாக்குகள் பெற்று 8-வது ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு விலக்கை 3 ஆண்டுகளில் இருந்து மேலும் நீட்டிக்க அரசு பரிசீலித்து வருகிறது எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
 • சென்னை ஐஐடியில் கேரள மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டுத் தற்கொலை
 • நவம்பர் 10 முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்  
 • 3 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தனது முதல் கதை சொல்லும் போட்டியை சி.பி.எஸ்.இ.அறிவித்துள்ளது.
 • காதுகேளாதோர், வாய் பேசமுடியாதோர் மற்றும் தொழுநோயாளிகள் இனி உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் எனத் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
 • கோவையில் தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திய நான்கு இளைஞர்கள் மீது ரயில்மோதி நால்வரும் உயிரிழந்தனர்.
 • ஆறு மாதங்களுக்கும் மேலாக முயற்சி செய்து ஊருக்குள் சுற்றி வந்த அரிசி ராஜா என்ற காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முகாமில் விட்டனர்
 • தென் பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
 • சந்திரயான் 3 அடுத்த ஆண்டு விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது.
 • 'ஆர்க்டிக் பிளாஸ்ட்' என்ற குளிர்க்காற்று வீசுவதால் அமெரிக்காவின் பல பகுதிகளில் வரலாறு காணாத அளவிற்குக் குளிர் நிலவுகிறது.
 • பிளாஸ்டிக் மறுசுழற்சி திட்டத்தின்படி மாணவர்கள் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் பொருட்களைக் கொடுத்தால் அதற்கு நிகரான மதிப்புள்ள பொருள்கள் வழங்கும் திட்டத்தைத் திருப்பூரில் மாவட்ட ஆட்சியர் அறிமுகம் செய்தார்.
 • தமிழகத்தில் தென்காசி, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன.
 • உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை மத்திய அரசுக்குப் பரிந்துரைக்கும் கொலீஜியம் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்தவரும் உச்சநீதிமன்ற நீதிபதியுமான ஆர்.பானுமதி இடம்பெற்றுள்ளார்.
 • கரூர், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்குப் பல விருதுகளை வாங்கித் தந்த தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணனுக்கு நன்றிக்கடனாக, பள்ளி வளர்ச்சிக்காக இருபத்தைந்து லட்சத்தை அக்கிராம மக்கள் வழங்கினர்.
 • இந்திய அரசின் 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதைக்  காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் கீதா பெற்றார்.
 • தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக ஷூ வழங்க அரசாணை வெளியீடு.
 • தமிழ் உள்ளிட்ட பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் பாலசிங் மறைவு.
 • நாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக அதிக உதவி மையங்களை அமைத்துப் பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. 
 • இந்தியாவைச் சேர்ந்த பதின்ம வயதினர் பிறநாடுகளின் பதின்ம வயதினரைவிட சுறுசுறுப்பாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
 • சுங்கச்சாவடிகளில் மின்னணுக் கட்டணமுறைக்கு ஏதுவாக இந்தியா முழுதும் டிசம்பர் மாதம் முதல் நான்குச் சக்கர வாகனங்களுக்கு ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
 • மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் திருநங்கைகளுக்குத் தனிப்பிரிவு தொடக்கம்
by Swathi   on 11 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு வீடு மற்றும் பொது இடங்களில் மழைநீரைச் சேகரித்துப் பயன்படுத்துதல் குறித்த விரிவான கையேடு
நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா நிகழ்த்துக்கலைக் கலைஞர்களின் வாழ்வாதார மீட்பு மற்றும் கலைவிழா
தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை தேற்றான் கொட்டை மரம் - கோவிந்த ராஜூ - பசுமைப் போர்வை
பச்சை ரோஜா பச்சை ரோஜா
கீச்சுச் சாளரம் கீச்சுச் சாளரம்
சிரிப்பு வலை சிரிப்பு வலை
வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்: வேர் மறவா வெளிநாட்டு வாழ் தமிழர்:
ஆசிரியர் பக்கம் ஆசிரியர் பக்கம்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.