வெளிநாட்டு நன்கொடைக்குக் கட்டுப்பாடுகள்
இந்தியாவிலிருந்து வெளிநாட்டு நன்கொடை பெறும் தொண்டு நிறுவனங்களின் வருடாந்திர வரவு-செலவு அறிக்கையை ஆன்லைனில் தாக்கல் செய்ய வேண்டும். வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்ட விதிமுறைப்படி, வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்யாத 14 ஆயிரத்து 800 தொண்டு நிறுவனங்களின் பதிவு இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு மேலும் 1,807 தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிர்வாகங்களின் பதிவை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த நிறுவனங்கள், கடந்த 6 ஆண்டுகளுக்கான வருடாந்திர வரவு-செலவு அறிக்கையைப் பலதடவை நினைவூட்டிய பிறகும் தாக்கல் செய்யவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. பதிவு ரத்து செய்யப்பட்டதுடன், இந்த நிறுவனங்கள் வெளிநாட்டு நன்கொடை பெறத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
|