LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

ஊடறு—அனைத்துலக பெண்கள் மாநாடு

ஊடறு—அனைத்துலக பெண்கள் மாநாடு

                                                                  கீதா இரவிச்சந்திரன் ,சிங்கப்பூர்

உலகளாவிய தமிழ்ப் பெண்கள் எதிர் நோக்கும் சிக்கல்கள், வாழ்வியல் நெருக்கடிகள், ஆகியவற்றின் ஆழ அகலங்களை  ஊடுருவி நோக்கி அவற்றைக் குறித்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்த ஏதுவான தளமாக “ஊடறு’ அனைத்துலகப் பெண்கள் மாநாடு 2005 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில்  நடத்தப்பட்டு வந்த ஊடறு 2019ல் சிங்கப்பூரில் முதன்முறையாக நவம்பர் 2 , மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, இலங்கை, நியுசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 15 பெண் பேராளர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்த 15 பெண் பேராளர்களும் கலந்து கொண்டனர். இரு நாட்களும் காலை 10.-30 மணி முதல் இரவு 7.30 மணி வரை தேசிய நூலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “சிங்கையில் இந்தியப் பெண்கள்”என்ற தலைப்பில் உரையாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் சிங்கப்பூர் பெண்களின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.

கலை, கல்வி, மேடை, நாடகம், ஊடகம், விளையாட்டு, சமூக சேவை, வரலாறு, சட்டத்துறை, சிறப்புத் தேவைகளை உடைய குழந்தைகளின் வாழ்வியல், சமூக நல்லிணக்கம், தொழில்முனைப்பு, பெண்களின் ஆரோக்கியம் என்று பல்வேறு தலைப்புகளை ஒட்டி சிங்கையின் பெண் பேராளர்கள் கட்டுரைகள் படைத்தனர்.  மாநாட்டின் இரண்டாம் நாளின் போது,'ஊடறு' றஞ்சியும், புதிய மாதவியும் தொகுத்த 33 பெண்களின் நேர்காணல்கள் அடங்கிய 'சங்கமி-பெண்ணிய உரையாடல்கள்’ எனும் நூல் யுனிவர்செல் நிறுவனத்தின் இயக்குநரான திருமதி ஜீவிதாவால் வெளியிடப்பட்டது.

by Swathi   on 12 Dec 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா கன்னியாகுமரியில் குறளங்காடி திறப்பு விழா
வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு  'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது! வலைத்தமிழ் ச.பார்த்தசாரதிக்கு 'தகைமைசால் திருக்குறள் பல்நோக்கு ஆளுமையர்' விருது!
ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை ஜெய்சங்கர் சாலை ஆனது சென்னை கல்லூரி சாலை
விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள் விவசாயத்துக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தும் தஞ்சாவூர் விவசாயிகள்
ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார் ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமிகள் மகா சமாதியடைந்தார்
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் தாம்பரத்தில் ரூ.110 கோடியில் பிரமாண்ட மருத்துவமனை - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா  அமல் ஆகஸ்ட் 15 முதல்;சுங்கசாவடி ஆண்டு சந்தா அமல்
14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சியை எட்டிய தமிழ்நாடு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.