|
|||||
டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு |
|||||
டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை 18ம் ஆண்டு மார்கழி இசைவிழாவில் தமிழ்மொழி-கலை -பண்பாடு சார்ந்த இணையவழி பயிற்சியை வழங்கும் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் (www.ValaiTamilAcademy.org) தமிழிசை பாடநூல் -1, 2 , பண்ணிசைப் பயிற்சி நூல் -1, பேச்சுத்தமிழ் -1, 2 ஆகிய ஐந்து பாட நூல்களையும் , 25 பாடல்கள் அடங்கிய தமிழிசை காணொளி ஆகியவற்றை பல்துறை சார்ந்த , பல நாடுகளைச் சார்ந்த ஆளுமைகள் கலந்துகொண்டு வெளியிட்டனர். சிறப்பு விருந்தினர்கள் மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், முதுமுனைவர் சத்தியவேல் முருகனார், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் திரு.காந்தி,IRPFS , திரைப்பட இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன், வள்ளுவர் குரல் குடும்பம் மற்றும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் தலைவர் திரு.சி .இராஜேந்திரன் IRS (ஓய்வு) , ஆஸ்திரேலியா தமிழ் கலைகள் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் திரு.லாரன்ஸ் அண்ணாதுரை, மலேசியாவிலிருந்து திரு.குணபதி ஆறுமுகம், அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்க இயக்குனர் திரு.கொழந்தைவேல் ராமசாமி, எக்ஸ்னோரா தலைவர் திரு.செந்தூர்பாரி, புதுச்சேரி பேராசிரியர் முனைவர். மு.இளங்கோவன் , பேராசிரியர் - தொழிலதிபர் திரு.பழனி பெரியசாமி, தொழிலதிபர் திரு.தம்பிக்கலைஞன் , பேராசிரியர் சித்தமருத்துவர் அன்புகணபதி ,வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் மேனாள் தலைவர் முனைவர்.அரசு செல்லையா உள்ளிட்ட பலரும் இந்நிகழ்சியில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் பாடத்திட்டதை நேர்த்தியாக வடிவமைத்த இன்னிசையேந்தல் திருபுவனம் குரு.ஆத்மநாதன், இசையறிஞர் நா.மம்மது, முனைவர். ரங்கநாயகி சச்சிதானந்தம் , திருமதி. வசந்தி ராஜராஜன், திரு.ராஜராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பிக்கப்பட்டனர். வலைத்தமிழ் நிறுவனர் ச.பார்த்தசாரதி வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை நெறிப்படுத்தினார். உலக அளவின் தமிழ் மொழி, தமிழிசையின் வளர்ச்சி குறித்தும், வலைத்தமிழ் முன்னெடுக்கும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் விருந்தினர்கள் குறிப்பிட்டு பேசினர். 2022-ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்றோர் பெருமக்கள் ஒரே மேடையில் கலந்துகொண்ட நெகிழ்ச்சியான நிகழ்வாக இது அமைந்தது. உலகத் தமிழர்களுக்கு தொடர்ந்து தமிழிசை உள்ளிட்ட பல பயிற்சியை எளிமையாகக் கொண்டுசேர்க்கும் சேவையை வலைத்தமிழ் கல்விக்கழகம் துறைசார்ந்த அறிஞர் பெருமக்களைக்கொண்டு வழங்குவதை அனைவரும் காலத்தின் தேவையாக வாழ்த்தி வரவேற்றனர்.
|
|||||
by Swathi on 30 Dec 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|