|
|||||
வலைத்தமிழ் அமைப்புகளும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான பல்வேறு முன்னெடுப்புகளும் |
|||||
Service 2 Society - வலைத்தமிழ் அமைப்புகள் இணைந்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு முன்னெடுப்புகளை மாவட்டம்தோறும் செய்துவருவதை அறிந்திந்திருப்பீர்கள். அதில் சிலவற்றை குறிப்பிட வேண்டுமென்றால் : 1. சிறந்த அரசுப்பள்ளி ஆசிரியர்களை அடையாளம் கண்டு அவர்களின் 100 பேரின் தனித்துவமான செயல்பாடுகளை ஆவணப்படுத்தி வெளியிட "ஆற்றல் மிகு ஆசிரியர்கள்" என்ற தொடர் நிகழ்வில் இதுவரை 37 பேரை பல மாவட்டங்களிலிருந்து வலைத்தமிழ்.டிவி யில் வெளியிட்டு ஊக்கப்படுத்தியுள்ளோம். ( https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTIrbslowiALavUVyBmo2mK ) 2. ஒரு பள்ளியின் ஒட்டுமொத்த தரம், வளர்ச்சியை ஒரு தலைமையாசிரியர் நினைத்தால் மாற்றலாம் என்ற நிலையில் அப்படி மாற்றங்களை செயல்படுத்திய அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களை விருந்தினர்களாக அழைத்து "தனித்துவமிக்க தலைமையாசிரியர்" என்ற தொடர் நிகழ்ச்சியில் இதுவரை 26 தலைமையாசிரியர்களின் தனித்துவமான சிந்தனைகளை- செயல்பாட்டை வெளியிட்டுளோம்.. ( https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTIPfOU82uFjA_AIJCqPgM7 ) 3. இலக்கியமும் இளைஞர்களும் ( https://www.youtube.com/playlist?list=PLXPD1_to_UjTJOeebyaa2hPinE2ySVMg1) போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறோம். அதில் முத்தாய்ப்பாக ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக சேலம் ,காஞ்சிபுரம், நீலகிரி, திருச்சி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து அரசுப்பள்ளி மாணவிகளை தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களின் ஒத்துழைப்பு, வழிகாட்டலுடன் "வீரமங்கை வேலுநாச்சியார் " நாடகத்தை நாடக இயக்குநர் திரு.சந்திரமோகன் அவர்களின் உதவியுடன் ஒரு மாத காலம் இணையவழியில் பயிற்சி கொடுத்து அரங்கேற்றினோம். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக விண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு வியந்து மகிழ்ந்தார்கள். 1. வீரமங்கை வேலுநாச்சியார் நாடகம் - அரசுப்பள்ளி மாணவர்களின் சிறப்பான நடிப்பில் 2. விண்வெளி விஞ்ஞானி திரு.மயில்சாமி அண்ணாதுரை அரசுப்பள்ளி மாணவர்களின் நாடகம் கண்டு வியந்து கல்வித்தொலைக்காட்சிக்கு கொண்டுசெல்ல விரும்பினார். மாவட்டம்தோறும் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் பல்வேறு முயற்சிகளை அரசுப்பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்கு செய்யக் காத்திருக்கிறோம். (குறிப்பு: வலைத்தமிழ் தயாரித்து வெளியிட்ட தமிழ்ப் பிறந்தநாள் பாடல் (https://www.youtube.com/watch?v=eFoahZY1SmA) அரசுப்பாடப்புத்தகத்தில் 6ம் நிலையில் இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன்) விரைவில் அமெரிக்க வாழ் தமிழ் மக்களின் பள்ளிக்குழந்தைகளைக்கொண்டு அவர்கள் பெற்றோர் பிறந்த மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு 10 பேர் வீதம் வார இறுதியில் ஆங்கிலம் கற்பிக்க திட்டமிடுகிறோம். தொடர்ந்து அரசுப்பள்ளி வளர்ச்சியில் .. ச.பார்த்தசாரதி ரவி சொக்கலிங்கம், நிறுவனர்
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
|
|||||
by Swathi on 21 Oct 2022 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|