LOGO

அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில் [Arulmigu valladikarar Temple]
  கோயில் வகை   வல்லடிக்காரர் கோயில்
  மூலவர்   வல்லடிக்காரர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு வல்லடிக்காரர் திருக்கோயில் அம்பலக்காரன்பட்டி, மதுரை.
  ஊர்   அம்பலக்காரன்பட்டி
  மாவட்டம்   மதுரை [ Madurai ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு.ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக 
குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை ஒருவர் இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா... கனைக்குமா ? என்று கேலியாகக் 
கேட்டார். அப்போதைய நாட்டு அம்பலக்காரரான வீரணன் அம்பலம், இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார 
துரை, புல் தின்னாது... கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார். உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன் 
அம்பலம், வல்லடிக்காரர் சந்நிதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கௌளி குரல் கொடுத்தது. அதை 
வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு 
எதிரே வைத்தார். புல் அப்படியே இருக்க... துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார். 
மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது. அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது. 
ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன் 
பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக் 
கண்மாய் என்று வழங்கப்படுகிறது. 

பக்தர்கள் தங்களது கோரிக்கைகள் நிறைவேற வல்லடிக்காரரிடம் சீட்டு எழுதி வைத்து வேண்டுவது சிறப்பு. ஒரு முறை வல்லடிக்காரர் கோயில் பக்கமாக குதிரையில் வந்த வெள்ளைக்கார துரை இந்த சேமங் குதிரையைப் பார்த்துவிட்டு, இந்தக் குதிரை புல் தின்னுமா... கனைக்குமா ? என்று கேலியாகக் கேட்டார். அம்பலக்காரரான வீரணன் அம்பலம், இதை மௌனமாகக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார். அப்போதும் விடாத வெள்ளைக்கார துரை, புல் தின்னாது... கனைக்காதுனு சொன்னா, இந்தக் குதிரையை இடிச்சு தள்ளிடலாமே என்று எகத்தாளமாகப் பேசினார்.

உடனே கோயிலுக்குள் ஓடிய வீரணன் அம்பலம், வல்லடிக்காரர் சந்நிதியில் நின்று கண்ணீர் மல்க வேண்டினார். அப்போது கோயிலின் ஈசானிய மூலையில் கௌளி குரல் கொடுத்தது. அதை வல்லடிக்காரரின் உத்தரவாக எடுத்துக் கொண்ட அம்பலம், துள்ளிக் ஓடி வந்து ஒரு கூடை நிறையப் புல்லைக் கொண்டு வரச் சொல்லி, அதை குதிரைக்கு 
எதிரே வைத்தார். புல் அப்படியே இருக்க... துரையின் கண்களுக்கு மட்டும் குதிரை, புல் தின்பது போல் காட்சியளித்தது. அதைப் பார்த்த துரை திகைத்துப் போனார். மட்டுமின்றி சேமங்குதிரை அப்போது கணீரென்று கனைக்கவும் செய்தது.

அதைக் கேட்டு மிரண்டு துரையின் குதிரை, பிடரி தெறிக்க ஓடத் தொடங்கியது. ஓடும்போது கோயிலுக்குப் பக்கத்திலுள்ள கண்மாய்க கரையில் கால் இடறிக் கீழே விழுந்தது. அதனால் குதிரை மேல் இருந்த துரையும் கீழே விழுந்தார். அதன் பிறகு குதிரையும் துரையும் எழுந்திருக்கவே இல்லை. துரையை பலி வாங்கிய அந்தக் கண்மாய் வெள்ளைக்காரன் கட்டிய கண்மாய். இப்போது அது வெள்ளக் கண்மாய் என்று வழங்கப்படுகிறது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சுந்தரேஸ்வரர் (மீனாட்சி) திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு திருவாப்புடையார் திருக்கோயில் செல்லூர், மதுரை , மதுரை
    அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில் திருப்பரங்குன்றம் , மதுரை
    அருள்மிகு ஏடகநாதர் திருக்கோயில் திருவேடகம் , மதுரை
    அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில் ஆனையூர் , மதுரை
    அருள்மிகு பிரளயநாதர் திருக்கோயில் சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு சொக்கநாதர் திருக்கோயில் திருமங்கலம் , மதுரை
    அருள்மிகு முக்தீஸ்வரர் திருக்கோயில் மதுரை தெப்பக்குளம் , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் இரும்பாடி, சோழவந்தான் , மதுரை
    அருள்மிகு சுந்தரமகாலிங்க சுவாமி திருக்கோயில் சதுரகிரி , மதுரை
    அருள்மிகு தென்திருவாலவாய் திருக்கோயில் மதுரை , மதுரை
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அவனியாபுரம் , மதுரை
    அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருச்சுனை , மதுரை
    அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் பழங்காநத்தம் , மதுரை
    அருள்மிகு மூவர் திருக்கோயில் அழகப்பன் நகர் , மதுரை
    அருள்மிகு புட்டு சொக்கநாதர் திருக்கோயில் ஆரப்பாளையம் , மதுரை
    அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில் விராதனூர் , மதுரை
    அருள்மிகு ஆதிசொக்கநாதர் திருக்கோயில் சிம்மக்கல் , மதுரை
    அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில் கோச்சடை , மதுரை

TEMPLES

    சித்தர் கோயில்     திவ்ய தேசம்
    அறுபடைவீடு     விஷ்ணு கோயில்
    யோகிராம்சுரத்குமார் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    மற்ற கோயில்கள்     எமதர்மராஜா கோயில்
    பட்டினத்தார் கோயில்     நட்சத்திர கோயில்
    திருவரசமூர்த்தி கோயில்     வள்ளலார் கோயில்
    நவக்கிரக கோயில்     சடையப்பர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    குருசாமி அம்மையார் கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     முனியப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்